ஐடியூன்ஸ் அப்டேட் மூலம் பில்ட்-இன் ஆப் ஸ்டோர் நீக்கம்: ஆப்பிள் அதிரடி

|

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் என மூன்று சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. புதிய சாதனங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்த கையோடு தனது சேவைகளை முற்றிலும் மாற்ற முடிவு செய்துள்ளது.

ஐடியூன்ஸ் அப்டேட் மூலம் பில்ட்-இன் ஆப் ஸ்டோர் நீக்கம்: ஆப்பிள் அதிரடி

மேக் மற்றும் விண்டோஸ்களுக்கான ஐடியூன்ஸ் பதிப்புகளில் இருந்து பில்ட்-இன் ஆப் ஸ்டோரினை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. ஐடியூன்ஸ் செயலியின் முக்கிய அம்சமாக ஆப் ஸ்டோரினை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ள நிலையில் செயலி மூலம் இசை, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்த இருக்கிறது.

அந்தவகையில், ஐடியூன்ஸ் 12.7 பதிப்பினை இன்ஸ்டால் செய்திருந்தால் செயலியில் ஆப் ஸ்டோர் மற்றும் ரிங்டோன்ஸ் பகுதி மறைந்திருப்பதை காண முடியும். இத்துடன் மியூசிக் பகுதியில் இண்டர்நெட் ரேடியோ மற்றும் ஐடியூன்ஸ் யு கலெக்ஷன்ஸ் பாட்காஸ்ட்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய ஐடியூன்ஸ் திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட் மற்றும் ஆடியோபுத்தகங்களில் கவனம் செலுத்துகிறது. ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களுக்கான செயலிகள் ஐஓஎஸ்-க்கான புதிய ஆப் ஸ்டோரில் பிரத்தியேகமாமக கிடைக்கின்றன. இத்துடன் ஆப் ஸ்டோர் எளிமையாக கிடைக்க செய்வதோடு, மேக் அல்லது கணினிகளில் மீண்டும் டவுன்லோடு செய்ய முடியும்.

குறிப்பாக ஐடியூன்ஸ் 12.7 பதிப்பில் ஐஓஎஸ் 11 சாதனங்களுடன் மிக எளிமையாக சின்க் செய்து ஆப்பிள் மியூசிக் தரவுகளை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ப்ரோபைல்களை உருவாக்கி, மற்றவர்களை பின்தொடர முடியும்.

பிஎஸ்என்எல் புயலில் சிக்கியது ஜியோ: ரூ.249/- & ரூ.429/-க்கு அதிரடி அன்லிமிடெட் ஆபர்கள்.!பிஎஸ்என்எல் புயலில் சிக்கியது ஜியோ: ரூ.249/- & ரூ.429/-க்கு அதிரடி அன்லிமிடெட் ஆபர்கள்.!

இவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் எவற்றை அதிகம் கேட்கின்றனர் என்பதை பார்க்க முடியும். மேலும் புதிய மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது ஐஓஎஸ் சாதனங்களில் இருந்து செயலி அல்லது ரிங்டோன்களை டவுன்லோடு செய்ய முடியும்.

எனினும், தற்சமயம் வரை, ஐடியூன்ஸ் செயலியில் இருந்து ஆப் ஸ்டோர் நீக்கிய ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்மையை பயக்குமா, அல்லது எதிர்ப்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple seems to be in a mood to completely revamp its offerings as after the launch of its new iPhones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X