கார் முன்பதிவு மற்றும் நேவிகேஷன் வசதியை கொண்டுவந்தது ஆப்பிள் மேப்ஸ் செயலி.!
குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தும் என்று டிம்குக் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கூறினார், அதை தொடர்ந்து இப்போது இந்தியாவில் ஆப்பிள் மேப்ஸ் செயலியில் நேவிகேஷன் வசதி மற்றும் கார்
முன்பதிவு வசதியைக் கொண்டுவந்துள்ளது.

ஆப்பிள் செயலியில் வழங்கப்பட்டுள்ள இந்த நேவிகேஷன் அம்சம் பயணங்களில் நடக்கும் போதோ அல்லது கார்களில் பயணிக்கும் போது வழி சொல்கிறது. மேலும் புதிதாக நேவிகேஷன் வசதி தவிர உபெர் மற்றும் ஒலா போன்றவற்றில்
இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியையும் வழங்குகிறது.

ஆப்பிள் மேப்ஸ்
பின்பு இவற்றை செயல்படுத்த ஆப்பிள் மேப்ஸ் செயலியின் ரைடு என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், பின்பு பொது போக்குவரத்து சார்ந்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று பின்தங்கியிருக்கிறது
மேலும் அதிகளவு விவரங்களை சேகரித்து சரியான தகவல்களை வழங்கினாலும், கூகுள் மேப்ஸ் சேவையுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேப்ஸ் செயலி சற்று பின்தங்கியிருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

சரியான முகவரி
குறிப்பாக பயனர் செல்ல வேண்டி இடத்திற்கான வழியை தெரிவிப்பதோடு, குறிப்பிட்ட முகவரியில் பணி நடைபெறும் நேரம்,ரியான முகவரி, தொடர்பு விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்கிவருகிறது.

போக்குவரத்து விவரங்கள்
பின்பு விரைவில் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இப்போது
ஆப்பிள் மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் முப்பறிமான காட்சி போன்ற வசதிகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications