ஆப்பிள் புது அப்டேட்னு மட்டும் தான் சொன்னாங்க.. ஆனா எல்லாம் வேற லெவல் மாற்றமா இருக்கே.!

|

ஆப்பிள் நிறுவனம் அதன் WWDC 2021 நிகழ்வை நேற்று நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் சார்ந்த பல புதிய அம்சங்களை நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்வைத் துவக்கி வைத்து புதிய ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, பிரைவசி ப்ரோடெக்ஷன், மேக் ஒஎஸ் மற்றும் வாட்ச் ஒஎஸ் 8 போன்ற பல அம்சங்கள் பற்றி அறிமுகம் செய்து நிகழ்வைச் சிறப்பாக்கினார்.

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய மேக் ஒஎஸ் இல் என்ன அம்சங்கள் உள்ளது?

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய மேக் ஒஎஸ் இல் என்ன அம்சங்கள் உள்ளது?

மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அதன் மேக் ஒஎஸ் தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனத்தை இயக்க அனுமதிக்கிறது. அதேபோல், இந்த நிகழ்வில் மேக் சாதனங்களுக்கான புதிய ஏர்பிளே அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ்

மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ்

புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உடன், இந்த புதிய ஏர்பிளே அம்சம் ஐமேக் சாதனங்களிலும் இயங்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்குகிறது. அதேபோல், ஆப்பிள் சபாரி பிரௌசர், பயனர் விவரங்களைப் பாதுகாப்பதில் அதிவேகமாக மேம்பாட்டு வருகிறது. இதற்கு புதிய தோற்றம் வழங்கப்பட்டு, சபாரி பிரௌசர் தற்பொழுது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. டேப்களை ஒருங்கிணைக்கவும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!சூரியனுக்கு குட்பை சொல்லும் சீனா- 20 வினாடிகள் ஆன் செய்யப்பட்ட செயற்கை சூரியன்- சூரியனை மிஞ்சும் வெப்பம்!

புதிய சஃபாரி பிரவுசரின் தோற்றம்

புதிய சஃபாரி பிரவுசரின் தோற்றம்

இதன் மூலம் டேப்களின் அளவு முன்பைவிட சிறியதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது சர்ச் டேப் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சஃபாரி பிரவுசரின் தோற்றம் இப்பொழுது ஆப்பிளின் மேக், ஐமேக், ஐபேட் போன்ற அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தக் கிடைக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோனில் சர்ச் பார் டிஸ்பிளேவை க்ளிக் செய்தவுடன் தோன்றும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

நிலையான புதிய ஒஎஸ் வெர்ஷன் எப்போது கிடைக்கும்?

நிலையான புதிய ஒஎஸ் வெர்ஷன் எப்போது கிடைக்கும்?

புதிய ஒஎஸ் பீட்டா வெர்ஷன்கள் இன்று முதல் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இந்த ஓஎஸ் பொது பீட்டா வெர்ஷன் அடுத்த மாதம் வெளியாகும் என்று மேலும் தெரிவித்திருக்கிறார். அதேபோல், அனைத்து ஆப்பிள் பயனர்களுக்கான நிலையான புதிய ஒஎஸ் வெர்ஷன் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று டிம் குக் கூறியுள்ளார்.

ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..

வாட்ச் ஒஎஸ் 8 இல் என்ன-என்ன புதிய மாற்றங்கள் வந்துள்ளது?

வாட்ச் ஒஎஸ் 8 இல் என்ன-என்ன புதிய மாற்றங்கள் வந்துள்ளது?

ஆப்பிள் வாட்ச் சாதனங்கள் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் பல புதிய மேம்பாடுகளை ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்குத் தவறாமல் வழங்கி வருகிறது. இம்முறை, புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும், பயனர்களின் மனநிலையை நிலையாய் வைத்துக் கொள்ளவும் இந்த அம்சம் உதவுகிறது.

அசத்தலான வாட்ச் பேஸ் அம்சம்

அசத்தலான வாட்ச் பேஸ் அம்சம்

வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்காக வாட்ச் பேஸ் அம்சத்திலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சாதனத்தின் வாட்ச் பேஸ் அம்சத்திற்கு புது ஒஎஸ் தளம் மாற்றப்பட்டுள்ளது. இது உண்மையில் ஆப்பிள் பயனர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. புதிய அம்சத்தின் படி, ஆப்பிள் வாட்ச் பேஸ் முன்பைவிட அதிக விவரங்களைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. புதிதாக போட்டோஸ் ஆப் மற்றும் மெசேஜ்ஜிங் வசதியில் சில அருமையான மாற்றங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple macOS Monterey, watchOS 8 Announced at WWDC 2021 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X