Home
Apps

Apple யூசர்களின் விருப்பம் இதுதான்.. Apple ஆப் ஸ்டோர் விருதுகள் 2024.. எந்த ஆப்ஸ்? எந்த கேம்ஸ்? முழு விவரம்!

ஆப்பிள் போன் வைத்திருக்கும் கஸ்டமர்கள் எந்த ஆப்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். எந்த ஆப்கள் அவர்களுக்கு பெஸ்ட் யூசர் எக்ஸ்பிரீயன்ஸ், டிசைன் மற்றும் புதுவிதத்தை கொடுக்கிறது. இதில் எது பெஸ்ட் என்பதை ஆப்பிள் ஆப் ஸ்டோர் விருதுகள் 2024 (Apple App Store Awards 2024) மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆப்பிள் ஸ்டோரில் இருக்கும் 45 ஆப்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதில் 17 ஆப்கள் விருதுகளை தட்டி சென்றுள்ளன. இதில் ஆப்கள் மற்றும் கேம்கள் இருக்கின்றன. இவற்றை இப்போது பார்ப்போம்.

இந்த ஆப்பிள் ஆப் ஸ்டோர் விருதுகளில் ஐபோன் யூசர்கள் மட்டுமல்ல, ஐபாட் யூசர்கள் மற்றும் மேக் யூசர்கள் விரும்பும் ஆப்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, ஒட்டுமொத்தமாக ஆப்பிள் டிவைஸ்களில் விருதுகளை பெற்ற ஆப்களை இப்போது பார்க்க இருக்கிறோம். ஐபோன் ஆப் ஆப் தி இயர் விருதை கினோ (Kino) ஆப் பெற்றுள்ளது.

Apple யூசர்களின் விருப்பம் இதுதான்.. Apple ஆப் ஸ்டோர் விருதுகள் 2024!

லக்ஸ் ஆப்டிக்ஸ் இன்க் (Lux Optics Inc) மூலமாக சினிமாடிக் பீச்சர்களை கொடுக்கும் வீடியோ கேமரா ஆப்-ஆக இது இருக்கிறது. ஐபாட் ஆப் ஆப் தி இயர் விருதை மோய்செஸ் (Moises) ஆப் பெற்றிருக்கிறது. இந்த ஆப் ஏஐ பவர்ட் ஆடியோ பீச்சர்களை கொடுக்கக்கூடியது. மோய்செஸ் சிஸ்டம் இன்க் (Moises Systems Inc) இந்த ஆப் சேவையை கொடுத்து வருகிறது.

மேக் ஆப் ஆப் தி இயர் 2024 விருதை அடோப் இன்க் (Adobe Inc) நிறுவனத்தின் அடோப் லைட்ரூம் (Adobe Lightroom) தட்டி சென்றுள்ளது. பெரும்பாலான மேக் யூசர்கள் போட்டோ எடிடிங் செய்ய இந்த லைட்ரூம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்து ஆப்பிள் விஷன் ப்ரோ ஆப் ஆப் தி இயர் விருதுக்கு வாட் இப்.. அன் இம்மெர்சிவ் ஸ்டோரி பிடித்துள்ளது.

மார்வெல் கதைகள் அடிப்படையில் கிடைக்கும் பொழுதுபோக்கு ஆப்-ஆக இது இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் ஆப் ஆப் தி இயர் விருதை லூமி (Lumy) ஆப் பெற்று இருக்கிறது. இந்த ஆப் சன்லைட் டிராக்கிங் உள்ளிட்ட அவுட்டோர் வாட்ச் ஆக்டிவிட்டி பீச்சர்களை கொடுக்கிறது. ஆப்பிள் டிவி பிரியர்களும் விரும்பும் எப்1 டிவி (F1 TV) ஆப் விருதை பெற்றுள்ளது.

ஆப்பிள் டிவி ஆப் ஆப் தி இயர் விருதை இது தட்டி சென்றுள்ளது. பார்முலா ஒன் கார் பந்தையங்களை ஸ்டீரீம் செய்யும் சேவையை இந்த ஆப் கொடுக்கிறது. இப்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் விருதைகளை பெற்ற கேமிங் ஆப்களின் பட்டியலை பார்த்து விடுவோம். ஐபோன் கேம் ஆப் இயர் விருதை ஏஎப்கே ஜார்னி (AFK Journey) கேமிங் ஆப்-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு ஓவர்வேல்ர்டு பேண்டசி ஆர்பிஜி (Overworld Fantasy RPG) கேம்மாகும். இதற்கு அடுத்து ஸ்குவாட் பஸ்டர்ஸ் (Squad Busters) கேமிங் ஆப்-ஆனது ஐபாட் கேம் ஆப் தி இயர் விருதை பெற்றுள்ளது. இதுவொரு மல்டி பிளேயர் ஆக்சன் விளையாட்டாகும். தேங்க் காட்னஸ் யுவர் ஈர் (Thank Goodness You're Here) கேம் ஆனது மேக் கேம் ஆப் தி இயர் விருதை தட்டி இருக்கிறது.

அடுத்து ஆப்பிள் விஷன் ப்ரோ கேம் ஆப் தி இயர் விருதானது, த்ராஷர்: ஆர்கேட் ஓடிசி (THRASHER: Arcade Odyssey) கேம்முக்கு கிடைத்து இருக்கிறது. கண்களை கவரும் விதமான ஆடியோ-வீடியோ அனுபவம் மூலம் இந்த விருதை பெற்றுள்ளது. இறுதியாக ஆப்பிள் ஆர்கேட் கேம் ஆப் தி இயர் விருது பாலேட்ரோ பிளஸ் (Balatro+) கேமுக்கு கிடைத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple App Store Awards 2024 Best Apps And Games List Check Apple Users Favorites
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X