போலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.!

பிளே ஸ்டோர் இல்லை என்றால் நம்மால் இன்று இயங்க முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால் நமக்கு தேவையான அனைத்து ஆப் ( செயலிகளும்) அதில் தான் இருக்கின்றன.

|

பிளே ஸ்டோர் இல்லை என்றால் நம்மால் இன்று இயங்க முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால் நமக்கு தேவையான அனைத்து ஆப் ( செயலிகளும்) அதில் தான் இருக்கின்றன.

போலி பிளே ஸ்டோர்  அனுப்பி  இந்தியர்களின் தகவலை  திருடும்  ரஷ்யர்கள்.!

பெரும்பாலும் கூகுள் பிளே ஆப்புக்கு சென்றே அனைத்து விதமாக செயலிகளையும் டவுன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஸ்மார்ட் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்களையும், ஆப்களையும் ஹேக்கர்கள் நுழைந்து திருடியும் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கூகுள் பிளே ஸ்டோர் போல் போலியாக மற்றொரு பிளே ஸ்டோர் உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகி பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நம் தனிப்பட்ட விவரங்களும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை ரஷ்யா ஹேக்கர்கள் தான் செய்து இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

நவீன  உலகம்:

நவீன உலகம்:

இன்றைய நவீன உலகத்தில் நாம் வேகமாக இயங்கி கொண்டிருகின்றோம். இதனால் நமக்கு பெரும்பாலும் செயலிகள் தான் விரைவாகவும், பாதுகாப்பகாவும் எந்த ஒரு காரியத்தை செய்ய உதவிகரமாகவும் இருக்கின்றன.

இதையொட்டியே பெரும்பாலும் ஸ்மார்டபோன் யுகம் செயலிகளை கொண்டே இயங்குகின்றது. ஏராளமானோரும் செயலிகளை தனக்கு உற்ற நண்பன் போல எண்ணி வருகின்றனர். இப்படிபட்ட நண்பனால், நமக்கு என்னனென்ன தீங்கு வரப்போகின்றது என்று தெரியாது.

நண்பனை எதிரியாக மாற்றுகின்றனர்:

நண்பனை எதிரியாக மாற்றுகின்றனர்:

நண்பனை தற்போது எதிரியாக மாற்றி வருகின்றனர். நம்மளுடைய ஸ்மார்ட் போனில் ஹேக்கள் நுழைந்த முதலில் செயலிகளை அவர்களின் கட்டுப்பாட்டில் வைப்பதால் அதில் உள்ள தனிப்பட்ட விரங்கள், அந்தரங்கள், வங்கி கணக்கு, கிரெட்டிட், டெபிட் கார்டு பின் நம்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் திருடப்பட்டும் சம்பவங்களும் அரங்கியுள்ளன.

போலி பிளே ஸ்டோர்:

போலி பிளே ஸ்டோர்:

தற்போது அச்சு அசலாக போலி பிளே ஸ்டோர் செய்து, அதனை ஹேக்கர் ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். நாம் இது உண்மையான பிளே ஸ்டோர் என்று நினைத்து அதில் உள்ள ஆப்களையும் நாம் டவுன்லோடு செய்வோம்.

செல்போனில் நுழையும்:

செல்போனில் நுழையும்:

நமக்கு தேவையான ஆப்களை ( போலி செயலிகள்) டவுன்லோடு செய்த உடன் அதில் நமது போனில் வந்து உண்மையான செயலி போல அமர்ந்து கொள்ளும். நாமும் அதில் ஏதாவது விசியத்திற்காக வங்கி கணக்கு எண், ஏடிஎம்கார்டு எண், சிவி உள்ளிட்ட பல்வேறு விசியங்களையும் நாம் பதிவு செய்யும் போதும் நமது தகவல்களையும் ஹேக்கர் திருடி விடுவார்கள். இதனால் பெரும் ஆபத்துகளும் ஆளாக நேரிட்டுள்ளது.

அந்தரங்கம்  பறிபோகும்:

அந்தரங்கம் பறிபோகும்:

மேலும் நமது அந்தரங்க விசியங்களையும் நம்மை கேட்காமல் நமது ஸ்மார்ட் போனை கொண்டே திருடவும் முடியும். நமது ஸ்மார்ட் போன் கேமராக்களை அவர்கள் வெகு தூரத்தில் இருந்தாலும், இரவிலும் பிளாஸ் லைட்டையும் ஆன் செய்து பார்க்கவும் முடியும். இதனால் நமது அந்தரங்க விசியங்ளும் பரிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேக்கர்கள் நம் தகவல்களை திருடுவது மட்டும் அல்லாமல், பிளாக் மெயிலும் செய்ய இயலும்.

சோதனை முறை:

சோதனை முறை:

இந்த அப்ளிகேஷன் சோதனை முறையில் உள்ளதாகவும், சோதனையில் இருக்கும் போதே பலருக்கு சோதனை கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அது முழுவதுமாக தயாராகி மொபைல் அப்ளிகேஷனாக வெளிவரும்பட்சத்தில் பல தீவிர விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய ஹேக்கர்கள் கைவரிசை:

ரஷ்ய ஹேக்கர்கள் கைவரிசை:

இது ரஷ்ய ஹேக்கர்களின் கை வரிசையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தேவையில்லாத அப்ளிகேஷன்களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Best Mobiles in India

English summary
android warning for users over extremely powerful fake google play store scam :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X