கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்!

|

இரண்டாம் கட்ட எச்சரிக்கையாக மீண்டும் கூகுள் புதிய மால்வேர் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 24 ஆப்ஸ்களை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுரித்துள்ளது. உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.

ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps)

ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps)

ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps) என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் கடந்த மாதம் சுமார் 40 மால்வேர் செயலிகளை நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இரண்டாம் முறையாக 24 புதிய செயலியின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் சேர்த்துள்ளது.

சிஎஸ்ஐஎஸ் (CSIS) ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிஎஸ்ஐஎஸ் (CSIS) ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு சேவை ஆராய்ச்சியாளர்கள், சுமார் 24 மால்வேர் ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்ட்ரோலில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் சோகம் என்னவென்றால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களின் போனில் இந்த செயலிகள் இருக்கிறது என்பது தான்.

சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.!

ட்ரோஜன் மால்வேர் கண்டுபிடிப்பு

ட்ரோஜன் மால்வேர் கண்டுபிடிப்பு

கண்டறியப்பட்டுள்ள இந்த மால்வேர் ஆப்ஸ்கள் அனைத்தும் ட்ரோஜன் வகை வைரஸ்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோஜன் வகை மால்வேர்கள், உங்கள் போனில் உள்ள மெசேஜ், கான்டக்ட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தகவல் அனைத்தையும் திருடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24 ஆப்ஸ்களின் பட்டியல்

24 ஆப்ஸ்களின் பட்டியல்

இந்த வகை மால்வேர்களை, இந்த செயலிகள் விளம்பரங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழையச் செய்து, உங்கள் தகவல்களை உங்களுக்குத் தெரியாமலே திருடி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆராய்ச்சியகர்கள் வெளியிட்டுள்ளனர். உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி இரண்டாம் முறையாகக் கூகுள் எச்சரித்து வெளியிட்டுள்ள 24 ஆப்ஸ்கள் இவைதான்.

மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.!

மால்வேர் உள்ள பயன்பாட்டு செயலிகள்

மால்வேர் உள்ள பயன்பாட்டு செயலிகள்

 • மினி கேமரா 1.0.2 (Mini Camera 1.0.2)
 • பீச் கேமரா 4.2 (Beach Camera 4.2)
 • செர்டெயின் வால்பேப்பர் 1.02 (Certain Wallpaper 1.02)
 • ஏஜ் ஃபேஸ் 1.1.2 (Age Face 1.1.2)
 • ரிவார்டு கிளீன் 1.1.6 (Reward Clean 1.1.6)
இந்த ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளதா?

இந்த ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளதா?

 • இக்னைட் க்ளீன் 7.3 (Ignite Clean 7.3)
 • ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி- செக்யூரிட்டி ஸ்கேன், ஆப் லாக் (Antivirus Security - Security Scan,App Lock)
 • கொல்லேட் ஃபேஸ் ஸ்கேனர் (Collate Face Scanner)
 • ருட்டி எஸ்எம்எஸ் மோட் (Ruddy SMS Mod)
 • அல்டர் மெசேஜ் 1.5 (Altar Message 1.5)

நிலவில் 'பிரக்யான் ரோவர்' ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது! இஸ்ரோவின் அடுத்த முயற்சி!

உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

 • போர்ட் பிக்சர் எடிட்டிங் 1.1.2 (Board Picture editing 1.1.2)
 • க்யூட் கேமரா 1.04 (Cute Camera 1.04)
 • லீஃ ப் ஃபேஸ் ஸ்கேனர் 1.0.3 (Leaf Face Scanner 1.0.3)
 • டேஸ்ஸில் வால்பேப்பர் 1.0.1 (Dazzle Wallpaper 1.0.1)
 • ஸ்பார்க் வால்பேப்பர் 1.1.11 (Spark Wallpaper 1.1.11)
கூகுளின் இரண்டாம் எச்சரிக்கை

கூகுளின் இரண்டாம் எச்சரிக்கை

 • கிளைமேட் எஸ்எம்எஸ் 3.5 (Climate SMS 3.5)
 • சோபி கேமரா 1.0.1(Soby Camera 1.0.1)
 • டிக்ளேர் மெசேஜ் 10.02 (Declare Message 10.02)
 • டிஸ்பிளே கேமரா 1.02 (Display Camera 1.02)
 • ராப்பிட் ஃபேஸ் ஸ்கேனர் 10.02 (Rapid Face Scanner 10.02)

இந்தியா: விரைவில் அசத்தலான விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

உஷார் ஆகிக்கொள்ளுங்கள்

உஷார் ஆகிக்கொள்ளுங்கள்

 • அட்வொகேட் வால்பேப்பர் 1.1.9 (Advocate Wallpaper 1.1.9)
 • கிரேட் வி.பி.என் 2.3 (Great VPN 2.0)
 • ஹூமர் கேமரா 1.1.5 (Humour Camera 1.1.5)
 • ப்ரிண்ட் பிளான்ட் ஸ்கேன் (Print Plant scan)
கேம்ஸ்கேனர் ஆபத்து

கேம்ஸ்கேனர் ஆபத்து

கேம்ஸ்கேனர்(CamScanner) என்றழைக்கப்படும் செயலியைக் கடந்த சில வாரத்திற்கு முன்பு கூகுள் நிறுவனம் தனது டேஞ்சரஸ் ஆப்ஸ் (Dangerous Apps) பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அப்படி நீங்களும் இந்த செயலியை, உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அதையும் உங்கள் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் (Uninstall) செய்துவிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android Users Recommended To Delete These 24 Apps Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X