Home
Apps

ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் செய்து தரவுள்ள புதிய வசதி.!

வாட்ஸ் அப் தற்போது ஸ்டிக்கர்கள் மற்றும் படங்கள் குறித்த புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுப்புது வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் தற்போது ஸ்டிக்கர்கள் மற்றும் படங்கள் குறித்த புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் செய்து தரவுள்ள புதிய வசதி.!

வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை தனது வாடிக்கையாளர்களுக்கு இன்லைன் புகைப்படங்களை நோட்டிபிகேஷன் மூலம் காண்பித்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு பெரிதாக்கப்பட்ட புகைப்பட வடிவமைப்பு வேலை மற்றும் அண்ட்ராய்டு பை பீட்டா அம்சம் மூலம் சோதனை முயற்சியாக செய்து வருகிறது.

தற்போது வாட்ஸ் அப் பீட்டா என்பது ஆண்ட்ராய்டு பை மூலம் புதிய வடிவத்தில் அப்டேட் செய்து கொண்டு வருவதால் இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் புகைப்படங்களை புதிய வடிவத்தில் நோட்டிபிகேஷன் மூலமே பார்க்கலாம். இதுகுறித்து வெளிவந்துள்ள குறிப்பின்படி ஆண்ட்ராய்டு போன்களில் இனி நோட்டிபிகேசனை இமேஜ் வடிவிலேயே பயனாளிகள் பார்க்கலாம். தங்களுக்கு வரும் நோட்டிபிகேசனை க்ளிக் செய்தால் அந்த படங்களை பெரிதாக பார்க்கலாம். இதே வசதி ஸ்டிக்கர்களை அனுப்பும்போதும் பெறலாம். ஆனால் அதே நேரத்தில் ஜிஃப் மற்றும் வீடியோக்களுக்கு இந்த வசதி சப்போர்ட் செய்யாது.

ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் செய்து தரவுள்ள புதிய வசதி.!

மேலும் இந்த வசதியை பயனாளிகள் தாங்கள் குரூப் சாட்டில் ஈடுபடும்போதும் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பயனாளி ஒரு இமேஜை பெறும்போது தம்ப்நெயில் வடிவில் ஒரு சிறிய இமேஜ் நோட்டிபிகேசனின் இடதுபுறம் காணலாம். அந்த நோட்டிபிகேசனை க்ளிக் செய்தால் பின்னர் அந்த படம் பெரிதான அளவில் வலது புறம் டெக்ஸ்ட்களுடன் தெரியும். தற்போதைக்கு இந்த வசதி ஆண்ட்ராய்டு பை போன்களுக்கு மட்டும் வாட்ஸ் அப் நிறுவனம் செய்துள்ளது. வெகுவிரைவில் அனைத்து வகை மொபைல் போன்களுக்கும் இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் செய்து தரவுள்ள புதிய வசதி.!

கடந்த மாதம் இந்தியாவில் பொய்யான செய்திகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சில வசதிகளை செய்து கொடுத்தது என்பது தெரிந்ததே. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுகுறித்த பிரச்சாரங்களும் செய்யப்பட்டது. பயனாளிகள் தாங்கள் பெறும் செய்திகள் உண்மையானதுதானா? என்பதை உறுதி செய்த பின்னரே அவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்பதே அந்த பிரச்சாரம் ஆகும்.

வானொலி மூலம் செய்யப்படும் இந்த பிரச்சாரம் ஆல் இந்தியா வானொலியின் 46 இந்தி வானொலி நிலையங்கள் மூலம் பீகார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செய்யப்பட்டது என வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர்.

Best Mobiles in India

English summary
Android users to get this new WhatsApp feature soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X