Android ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள்! உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்!

|

செக் பாயிண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ள பயன்பாடுகளில் இருக்கும் இரண்டு மால்வேர் குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஹேக்கன் (Haken) என்ற ஒரு புதிய வகை மால்வேர் குடும்பத்தை செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மால்வேர் ஆப்ஸ்-களினால் பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கன் (Haken) மற்றும் ஜோக்கர் (Joker) மால்வேர்

ஹேக்கன் (Haken) மற்றும் ஜோக்கர் (Joker) மால்வேர்

செக் பாயிண்ட் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைப்படி, ஹேக்கன் (Haken) என்ற ஒரு புதிய வகை மால்வேர் ஆப்ஸ் மற்றும் ஜோக்கர் (Joker) என்ற பழைய மால்வேர் வகை செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர்கள் பெரும்பாலும் விளம்பரங்களின் கிளிக் மூலம் திறன்பேசி பயனரைப் பல விதத்தில் மோசடி செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"கிளிக்கர்" வகை மால்வேர்!

இந்த ஹேக்கன் மற்றும் ஜோக்கர் ஆகிய இரண்டு மால்வேர்களும் "கிளிக்கர்" வகை மால்வேர்கள் ஆகும். அதாவது பயனர்களின் சாதனங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் கொடுத்து, அவற்றை கிளிக் செய் வைத்து, அவர்களின் சாதனத்தை முழு கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது. மோசடி விளம்பரங்கள் மூலம் இவர்கள் ஆதாயம் பார்க்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது!

இன்டெர்னல் ஸ்டோரேஜ் முதல் அனைத்து தரவும் அபேஸ்

இன்டெர்னல் ஸ்டோரேஜ் முதல் அனைத்து தரவும் அபேஸ்

இந்த விளம்பரங்களை கிளிக் செய்தபின், பயனரின் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேயில் காண்பிக்கப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் அவர்களின் இன்டெர்னல் ஸ்டோரேஜ்-ல் சேமிக்கப்பட்ட தகவல்கள் என அனைத்து தரவையும் இந்த மால்வேர்கள் அணுகுகிறது. பயனர்களின் தரவைத் திருடுவதோடு மட்டும் நிறுத்தாமல், பயனர்கள் ஒப்புக் கொள்ளாத பிரீமியம் சந்தாக்களுக்கும் இந்த மால்வேர் அனுமதி வழங்குகிறது.

கேமரா, கேமிங் ஆப்ஸ் மற்றும் குழந்தைகள் ஆப்ஸ் மூலம் சிக்கல்

கேமரா, கேமிங் ஆப்ஸ் மற்றும் குழந்தைகள் ஆப்ஸ் மூலம் சிக்கல்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த மால்வேர் கொண்ட பயன்பாடுகள் பார்ப்பதற்கு முறையானவை போலத் தோற்றமளிக்கிறது. பெரும்பாலான பயன்பாடுகள் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண முடியாத குழந்தைகள் பயன்படுத்தும் பயன்பாடுகளாக இருக்கிறது. குழந்தைகளை இலக்காகக் கொண்ட செயலிகள், கேமரா பயன்பாடுகள் மற்றும் கேமிங் பயன்பாடுகளில் இந்த மால்வேர் அதிகம் காணப்பட்டுள்ளது.

பேங்கில இருந்து பேசுறோம்; ஏ.டி.எம் கார்டு நம்பர் சொல்லுங்க - 50 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!பேங்கில இருந்து பேசுறோம்; ஏ.டி.எம் கார்டு நம்பர் சொல்லுங்க - 50 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!

உடனே டெலீட் செய்யவேண்டிய 8 மால்வேர் ஆப்ஸ் பட்டியல்

உடனே டெலீட் செய்யவேண்டிய 8 மால்வேர் ஆப்ஸ் பட்டியல்

  • கிட்ஸ் கலரிங் (Kids Coloring)
  • காம்பஸ் (Compass)
  • கியூ.ஆர் கோடு (qrcode)
  • ஃப்ரூட்ஸ் கலரிங் புக் (Fruits coloring book)
  • சாக்கர் கலரிங் புக் (Soccer coloring book)
  • ஃப்ரூட்ஸ் ஜம்ப் டவர் (Fruit jump tower)
  • பால் நம்பர் ஷூட்டர் (Ball number shooter)
  • இனோங்டான் (Inongdan)
  • இந்த ​​எண்கள் வேறு கதையைச் சொல்கிறது

    இந்த ​​எண்கள் வேறு கதையைச் சொல்கிறது

    இந்த எட்டு தீங்கிழைக்கும் பயன்பாடுகளை இதுவரை சுமார் 50,000-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த எண்ணிக்கை பெரிதாக இல்லை என்றாலும் கூட, பிளே ஸ்டோரில் பொதுவான தீம்பொருள் எவ்வளவு உள்ளது என்ற சூழலில் கருத்தில் கொள்ளும்போது, இந்த ​​எண்கள் வேறு கதையைச் சொல்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    Netflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா? அப்போ இதை உடனே படியுங்கள்!Netflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா? அப்போ இதை உடனே படியுங்கள்!

    2 மில்லியன் முறை மால்வேர் ஆப்ஸ் பதிவிறக்கம்

    2 மில்லியன் முறை மால்வேர் ஆப்ஸ் பதிவிறக்கம்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சுமார் 25 தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கூகிள் பிளே ஸ்டோரில் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த மால்வேர் ஆப்ஸ்கள் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அச்சுறுத்தலில் உள்ள பயனர்களின் பாதுகாப்பு

    அச்சுறுத்தலில் உள்ள பயனர்களின் பாதுகாப்பு

    அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் சும்மர் 42 தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, இவற்றை சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது வேதனை. இந்த எண்களின் முடிவு,பயனர்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    உடனே உங்கள் பில்களை செக் செய்யுங்கள்

    உடனே உங்கள் பில்களை செக் செய்யுங்கள்

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள எட்டு மால்வேர் பயன்பாடுகளில் ஏதேனும் உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் உடனே அவற்றை நீக்கம் செய்துவிடுங்கள். அடுத்தபடியாக உங்கள் மொபைல் போன் பில் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டு பில் இரண்டையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த மால்வேர்கள் உங்கள் அனுமதியின்றி சந்தாக்களைப் பதிவு செய்திருக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே உங்கள் பில்களை செக் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Android Users Alert: Delete These Eight Malware-Ridden Apps Immediately From Your Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X