கூகுள் ஆண்ட்ராய்டு மெசேஜ் புதிய வசதி குறித்த தகவல்.!
கூகுள் அசிஸ்டெண்ட் செயலியில் இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலி வந்துவிட்டால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்
தனது பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் மிக விரைவில் 'கூகுள் அலோ'வில் இன்ஸ்டண்ட் மெசேஜ்களை அனுப்பும் வசதியை கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகளியும் தொடங்கி உள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என இரண்டிலும் விரைவில் வரும் என்றும் கூகுள் அலோவில் இந்த இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி வந்தால் அதன் பயனாளிகள் மிகுந்த பயன் அடைவாரகள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கூகுள் அசிஸ்டெண்ட் என்ற ஆண்ட்ராய்டு மெசேஜ் செயலியிலும் இந்த வசதியை புகுத்த முயற்சிய்ல் ஈடுபட்டு வருவதாக எஸ்டிஏ தெரிவித்துள்ளது. தற்போது வாய்ஸ் கமாண்ட் செயலியாக இருக்கும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட் செயலியில் இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலி வந்துவிட்டால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்
அதே நேரத்தில் இந்த புதிய வசதி 'ஸ்மார்ட் ரிப்ளை' போன்ற வடிவில் இருக்கும் என்று எண்ண தேவையில்லை. தற்போது ஸ்மார்ட் ரிப்ளை வசதி ஆண்ட்ராய்டு மெசேஜ்களாக செயல்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலியானது தனது ஆண்ட்ராய்டு அலோ பாணியில் செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பயனாளிகளின் சந்தேக கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் கூகுள் அசிஸ்டெண்ட் ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பார்கள் என்றும், கூறப்படுகிறது.
மேலும் ஆண்ட்ராய்டு மெசேஜ்களை அதன் தளத்தில் குறுந்தகவல் அனுப்ப இயல்பான அனைத்து பயன்பாட்டையும் செய்ய கூகுள் சில முக்கிய பணிகளை செய்து வருகிறது. அலோ, ஹேங்க் அவுட், மற்றும் பிற மெசேஜ் செயலிகள் சேவைகளை ஆண்ட்ராய்டு செய்திகளுக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகிறாது. ரிக் கம்யூனிகேசன் சேவை கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள பயனாளுக்கு சேட் அம்ச தொழில்நுட்பத்தையும் தொடக்கி வைத்துள்ளது. மேலும் கூகுள் தனது எதிர்கால சந்தையில் தனது சந்தைகளை மேலும் சந்தையில் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இந்த ஆண்ட்ராய்டு மெசேஜ்களை அனைத்து செயலிகளிலும் பொருந்து வகையிலான பணி உண்மையில் ஒரு சிறப்பு வாய்ந்த பணியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications