ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புரோபஷனல் கேமராவாக மாற்றும் செயலிகள்

|

ஸ்மார்ட்போன்களில் மற்ற அம்சங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக அதன் கேமரா விளங்குகிறது. இன்றைய ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படும் நிலையில், புகைப்பட பிரியர்களுக்கான தொகுப்பாக இது அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புரோபஷனல் கேமராவாக மாற்றும் செயலிகள்

உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புரோபஷனல் கேமராவாக மாற்ற உதவும் தலைச்சிறந்த செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் கேமரா (Google Camera)

கூகுள் கேமரா (Google Camera)

பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த கூகுள் கேமரா மூலம் தலைச்சிறந்த புகைப்படங்களை மிகவேகமாக எடுக்க முடியும். மிக எளிய வடிவமைப்பு மற்றும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள கூகுள் கேமரா மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க அதிக சிரமம் கொள்ளத் தேவையில்லை

 கேண்டி கேமரா (Candy Camera)

கேண்டி கேமரா (Candy Camera)

செல்பிக்களை எடுக்க மிகச்சிறந்த செயலியாக இது இருக்கிறது. ஜெபி பிரதர்ஸ் எனும் பிரபல நிறுவனம் உருவாக்கிய கேண்டி கேமரா அதிக புகைப்படங்களை எடுத்து அதனை அழகாக ஒற்றை பிரேமில் கொலாஜ் செய்ய பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிரறது. இத்துடன் இதில் உள்ள பல்வேறு ஃபில்ட்டர்கள் புகைப்படங்களில் உங்களது அழகை கூட்டும்.

ரெட்ரிக்கா (Retrica)

ரெட்ரிக்கா (Retrica)

பேஸ்புக்கில் அதிக பழைய காலத்து மற்றும் அதிக துல்லியமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முக்கிய காரணமாக ரெட்ரிக்கா செயலி இருக்கிறது. ஐபோன் தரத்திலான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும் ரெட்ரிக்கா கொண்டு மற்ற செயலிகள் வழங்காத அம்சங்களை பயன்படுத்த முடியும்.

ஆஃப்டர்ஃபோகஸ் (AfterFocus)

ஆஃப்டர்ஃபோகஸ் (AfterFocus)

இந்த செயலியை கொண்டு டிஎஸ்எல்ஆர் ரக பேக்கிரவுண்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் இதில் கிடைக்கும் அதிகப்படியான ஃபில்ட்டர்கள் புகைப்படங்களை அழகாக்குகின்றன. அதிக இயற்கையான மற்றும் அழகிய புகைப்படங்களை எடுக்க ஆஃப்டர்ஃபோகஸ் செயலி சிறப்பானதாக இருக்கிறது.

ஃபோட்டோ லேப் பிக்சர் எடிட்டர் எஃப்எக்ஸ் (Photo Lab Picture Editor FX)

ஃபோட்டோ லேப் பிக்சர் எடிட்டர் எஃப்எக்ஸ் (Photo Lab Picture Editor FX)

அதிக ஸ்டைலான மற்றும் குறும்புத்தனமான எஃபெக்ட்களை இந்த செயலி வழங்குகிறது. ஃபேஸ் மான்டேஜ், போட்டோ ஃபிர்ம், அனிமேட்டெட் எஃபெக்ட் மற்றும் போட்டோ ஃபில்ட்டர்களை கொண்டிருக்கிறது. அதிக துல்லியமான மற்றும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க இந்த செயலி வழி செய்கிறது.

போட்டோ எடிட்டர் ப்ரோ (Photo Editor Pro)

போட்டோ எடிட்டர் ப்ரோ (Photo Editor Pro)

போட்டோ எடிட்டர் ப்ரோ செயலி மிகவும் சிறப்பான அம்சங்கள் மற்றும் ஃபில்ட்டர்களை கொண்டுள்ளது. மேலும் அழகிய ஃபில்ட்டர்கள் மற்றும் ஸ்டிக்கர் என போட்டோக்களை வித்தியாசமாக மாற்றும் பல்வேறு ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

6 இன்ச் டிஸ்ப்ளே; 16எம்பி கேம் உடன் தரப்படுத்தல் தளத்தில் ஜியோனி எஸ்11.!6 இன்ச் டிஸ்ப்ளே; 16எம்பி கேம் உடன் தரப்படுத்தல் தளத்தில் ஜியோனி எஸ்11.!

கேமரா எம்எக்ஸ் (Camera MX – Live Photo App)

கேமரா எம்எக்ஸ் (Camera MX – Live Photo App)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இலவசமாக கிடைக்கும் செயலிகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. லைவ் ஷாட் அம்சம் ஆண்ட்ராய்டில் லைவ் போட்டோக்களை எடுக்க வழி செய்யும்.

சைமெரா போட்டோ&பியூட்டி எடிட்டர் (Cymera – Photo & Beauty Editor)

சைமெரா போட்டோ&பியூட்டி எடிட்டர் (Cymera – Photo & Beauty Editor)

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைப்பதில் சைமெரா போட்டோ எடிட்டர் செயலி சிறப்பானதாக இருக்கிறது. 100க்கும் அதிகமான ஃபில்ட்டர் மற்றும் எஃபெக்ட்களை கொண்டுள்ள சைமெரா செயலி ஒற்றை கிளிக் மூலம் பேக்கிரவுண்டினை பிளர் செய்யும் ஆப்ஷனை கொண்டுள்ளது.

ஸ்னாப்சீட் (Snapseed)

ஸ்னாப்சீட் (Snapseed)

புகைப்படங்களை சிறப்பானதாக மாற்ற இந்த செயலி சிறப்பான ஒன்றாக இருக்கும். இந்த செயலி உங்களது ஸ்மார்ட்போனில் புரோபஷனல் போட்டோ எடிட்டிங் மென்பொருள் போன்று இயங்குகிறது. மேலும் ஒற்றை கிளிக்கில் பல்வேறு அம்சங்கள் மூலம் புகைப்படங்களை அழகாக்க முடியும்.

கேமரா360 (Camera360)

கேமரா360 (Camera360)

கூகுள் பிளே ஸ்டோரில் டிரென்டிங் செயலிகளில் ஒன்றாக கேமரா360 இருக்கிறது. பியூட்டி கேமரா மற்றும் போட்டோ எடிட்டர் ப்ரோ போன்ற அம்சங்களை கொண்டு புகைப்படங்களில் மிக எளிமையாக ஸ்டிக்கர் மற்றும் அனிமேஷன் எஃபெக்ட்களை சேர்க்க முடியும். இத்துடன் புகைப்படங்களை ஒருங்கிணைக்க பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.

கேமரா எஃப்வி-5லைட் (Camera FV-5 Lite)

கேமரா எஃப்வி-5லைட் (Camera FV-5 Lite)

மொபைல் போன்களுக்கு ஏற்ற புரோபஷனல் கேமரா செயலகளில் இதுவும் ஒன்று. டிஎஸ்எல்ஆர் போன்ற பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டுள்ள இந்த செயலியை கொண்டு எவ்வித புகைப்படங்களையும் அழகாகவும் சிறப்பானதாகவும் மாற்ற முடியும்.

டிஎஸ்எல்ஆப் கேமரா ப்ரோ (DSLR Camera Pro)

டிஎஸ்எல்ஆப் கேமரா ப்ரோ (DSLR Camera Pro)

டிஎஸ்எல்ஆர் போன்ற பல்வேறு அம்சங்கள் நிறந்த செயலியாக இருப்பதோடு புகைப்படங்களை மிக அழகாக வழங்கவும் இந்த செயலி சிறப்பான தேர்வாக இருக்கிறது. மேலும் இதில் உள்ள அனைத்து அம்சங்களும் பயன்படுத்த எளிமையாக இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஏற்ற செயலியாக இது இருக்கிறது.

மேனுவல் கேமரா (Manual Camera)

மேனுவல் கேமரா (Manual Camera)

இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு லாலிபாப் கேமரா ஆகும். ஆண்ட்ராய்டு லாலிபாப் வெளியீட்டில் கேமரா2 ஏபிஐ வாடிக்கையாளர்களுக்கு கேமராவின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கியது. இதனால் கேமராவின் முழு அம்சங்களை இயக்க விருபம்புவோருக்கு ஏற்ற செயலியாக இது இருக்கிறது.

ஓபன் கேமரா (Open Camera)

ஓபன் கேமரா (Open Camera)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் கிடைக்கும் முற்றிலும் இலவச செயலி எனலாம். இத்துடன் தலைச்சிறந்த புகைப்படங்களை எடுக்க ஏற்ற செயலியாக இது இருக்கிறது. விளம்பரங்கள் இல்லாத இந்த செயலியை கொண்டு சீரான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஸ்னாப் கேமரா எச்டிஆர் ( Snap Camera HDR)

ஸ்னாப் கேமரா எச்டிஆர் ( Snap Camera HDR)

புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஒற்றை கிளிக் மூலம் எடுக்கும் இந்த செயலி திரையில் அதிக பட்டன்களை வழங்காமல் அனைத்திற்கும் ஒவ்வொரு எஃபெக்ட்களை வழங்குகிறது. இதனால் தேவையான ஆப்ஷன்களை கிளிக் செய்து சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.

 விஎஸ்சிஓ (VSCO)

விஎஸ்சிஓ (VSCO)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை தலைச்சிறந்த புரோபஷனல் கேமராவாக மாற்றுவதில் இந்த செயலி சிறப்பானதாக இருக்கிறது. புகைப்படங்களை எடுத்து அதன்பின் அவற்றை எடிட் செய்யும் வசதியை கொண்டுள்ள இந்த செயலி அதிகப்படியான அம்சங்கள் நிறைந்தது.

 ப்ரோகேப்ச்சர் (ProCapture)

ப்ரோகேப்ச்சர் (ProCapture)

ஆண்ட்ராய்டு கேமராவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்க்கும் ப்ரோகேப்ச்சர் செயலி அதிகப்படியான ஷூட்டிங் மோட்களை கொண்டுள்ளது. இதனால் புகைப்படங்களை எடுப்பது மிகவும் எளிமையானதாக இருப்பதோடு அழகிய புகைப்படங்களையும் எடுக்க முடிகிறது. ட

லுமியோ கேம் (Lumio Cam)

லுமியோ கேம் (Lumio Cam)

உண்மையான புகைப்பட கேமரா மற்றும் புகைப்பட நிபுணர்கள் உருவாக்கிய இந்த செயலி டிஎஸ்எல்ஆர் தர புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்களின் இன்றைய தொழில்நுட்பத்துடன் இணைந்து வேலை செய்யும் இந்த செயலி சிறப்பான புகைப்படங்களை வழங்குகிறது.

கேமரா சூம் எஃப்எக்ஸ் (Camera ZOOM FX)

கேமரா சூம் எஃப்எக்ஸ் (Camera ZOOM FX)

பர்ஸ்ட் மோட், ரா கேப்ச்சர், எச்டிஆர் ப்ரோ மோட் மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த செயலியாக இது இருக்கிறது. இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்னெட் (Vignette)

விக்னெட் (Vignette)

நூற்றுக்கும் அதிகமான ஃபில்ட்டர் மற்றும் ஃபிரேம்களை கொண்டுள்ள விக்னெட் செயலியில் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் கேமராவினை முழுமையாக கஸ்டமைஸ் செய்ய முடியும் என்பதால் நாம் விரும்பிய புகைப்படங்களை சீராக எடுக்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
These amazing apps will give you pictures like a pro. Download these apps from google play store.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X