இந்த VPN பயன்பாடுகள் உங்கள் போனில் உள்ளதா? அப்போ உடனே Uninstall செய்யுங்கள்!

|

அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களே உஷார்.! உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தகவல்களை உளவு பார்க்கும் மிகப் பிரபலமான பல VPN மற்றும் adblocking பயன்பாடுகள் குறித்த தகவலை பஸ்ஃபீட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்களில் ரூட்டிங் செய்து உங்கள் போனில் உள்ள ஃபைல், போல்டர் மற்றும் அனைத்து தகவல்களையும் அணுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் VPN

தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் VPN

அண்மையில் நடத்தப்பட்ட Buzzfeed விசாரணையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள VPN பயன்பாடுகள் மற்றும் விளம்பரங்களைத் தடுக்கும் அட்-பிளாக்கர் பயன்பாட்டுச் செயலிகள் பயனர்களுக்குத் தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இரகசியமாக டெவலப்பர்களுக்கான குறுக்கு-தள தரவு பகுப்பாய்வு சேவை நிறுவனமான சென்சார் டவரிற்கு அனுப்பூக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Buzzfeed விசாரணையில் சிக்கிய ஆபத்தான VPN செயலிகள்

Buzzfeed விசாரணையில் சிக்கிய ஆபத்தான VPN செயலிகள்

சமீபத்திய Buzzfeed விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல் திருடும் VPN செயலிகள் இவை தான்.

 • Adblock Focus (Android மற்றும் iOS)
 • Free and Unlimited VPN (Android)
 • Luna VPN (Android மற்றும் iOS)
 • Mobile Data (Android)
 • இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

  ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களே உஷார்

  ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களே உஷார்

  இந்த பயன்பாடுகள் உங்கள் சாதனத்தில் உள்ள பைல் மற்றும் போல்டர்-களுக்கான ரூட் அணுகலைப் பெறுவதன் மூலம், உங்கள் போனில் உள்ள பயனர் தரவுகளை கண்காணிக்க முடிகிறது. ஆப்பிள் iOS மற்றும் கூகிள் ஆண்ட்ராய்டு இரண்டு தளங்களும் ரூட் அணுகலை சாதாரணமாகவே செய்ய அனுமதிப்பது கிடையாது. ஆனால், இந்த செயலிகள் ஒரு எளிய லூப்ஹோலை பயன்படுத்தி இந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள்.

  விளம்பரங்களைத் தடுக்கும் adblocker மூலம் சிக்கல்

  விளம்பரங்களைத் தடுக்கும் adblocker மூலம் சிக்கல்

  குறிப்பிடப்பட்டுள்ள பயன்பாட்டு செயலிகள் போலியான கூடுதல் அம்சங்களை வழங்குவதாகக் கூறி பயனர்களிடமிருந்து அனுமதியை வாங்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. சில பைல்களை பதிவிறக்கம் செய்தால், இலவச YouTube adblocker போன்ற விளம்பரங்களைத் தடுக்கும் கூடுதல் அம்சங்களைப் பயனர்கள் வழங்குவதாக கூறியுள்ளது. இதை பயன்படுத்த ரூட் அணுகல் அனுமதிக்கான அனுமதியைப் பயனர்களிடம் கேட்டிருக்கிறது.

  ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!

  உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

  உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்

  ஆப்பிள் மற்றும் கூகிள் ஆகிய இரண்டும் அந்தந்த அப் ஸ்டோர்களில் இருக்கும் விதிமீறல் பயன்பாடுகள் மற்றும் மால்வேர் பயன்பாடுகளைக் கண்டறிந்து நீக்கம் செய்து வருகிறது. மேலும் இந்த VPN பயன்பாடுகள் மூலம் பயனர்கள் ஏமாற்றப்படுவதனால், அவற்றின் பின்னால் உள்ள மேம்பாட்டு நிறுவனங்களை விசாரித்து வருகின்றது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள பயன்பாடுகளைப் பயனர்கள் உடனே அன்இன்ஸ்டால் செய்யும்படி வலியுறுத்தப்படுகிறது.

  சென்சார் டவர் டெவலப்பராக இருந்தால் உடனே இதை செய்யுங்கள்

  சென்சார் டவர் டெவலப்பராக இருந்தால் உடனே இதை செய்யுங்கள்

  உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோனில் பிற VPN அல்லது adblocking பயன்பாடுகள் நிறுவப்பட்டிருந்தால், அவற்றை உருவாக்கியவர் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அந்த பயன்பாட்டின் பெயரைக் கூகிளில் பிரௌஸ் செய்து அதன் டெவலப்பர் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் போனில் உள்ள பயன்பாட்டின் டெவலப்பர் சென்சார் டவர் டெவலப்பராக இருந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.

  ரூட் அணுகலுக்கான அனுமதியை எப்போதும் வழங்காதீர்கள்

  ரூட் அணுகலுக்கான அனுமதியை எப்போதும் வழங்காதீர்கள்

  குறிப்பாக ரூட் அணுகல் அனுமதி ஆகியவற்றில் கவனம் செலுத்த இது மற்றொரு நினைவூட்டலாகும். நீங்கள் ரூட் அணுகலுக்கான அனுமதியை வழங்கிவிட்டால் உங்கள் போனில் உள்ள ஃபைல், போல்டர் மற்றும் அனைத்து தகவல்களையும் வேறு யாரேனும் அணுக முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் ரூட் அணுகலைக் கேட்கும் உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள். அன்இன்ஸ்டால் செய்வது தான் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி.

Best Mobiles in India

English summary
Android And iPhone Users Alert Delete These VPN And Ad-Blocking Apps Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X