Home
Apps

மேக்அப் போட்டு பார்த்து வாங்கும் செயலி : அமேசான் - லோ'ரியால் அசத்தல்!

இணைய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான அமேசான், ஒப்பனை பொருட்கள்(காஸ்மடிக்ஸ்) நிறுவனமான லோ'ரியால் உடன் இணைந்து, அமேசான் செயலியில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கு முன் அதை முயற்சித்து பார்க்க அனுமதிக்க விரும்புகிறது. இணைய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான அமேசான், ஒப்பனை பொருட்கள்(காஸ்மடிக்ஸ்) நிறுவனமான லோ'ரியால் உடன் இணைந்து, அமேசான் செயலியில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம் பயனர்கள் நேரடியாக தங்களின் புகைப்படங்கள் அல்லது லைவ் வீடியோக்களில் லிப்ஸ்டிக்-ன் வெவ்வேறு வண்ணங்களை அமேசான்செயலில் போட்டுப்பார்த்து சோதிக்க முடியும்.

லைவ் மோட்

லைவ் மோட்

'லைவ் மோட்' என்ற இந்த புதிய அம்சமானது அமேசான் செயலியில் இந்த வாரம் முதல் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கும் பட்டியலில், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் முன்புற கேமராவை பயன்படுத்தி வெவ்வேறு லிப்ஸ்டிக் நிறங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.

கேமரா மூலம் உங்கள் முகத்திலேயே முயற்சி செய்யலாம்

கேமரா மூலம் உங்கள் முகத்திலேயே முயற்சி செய்யலாம்

அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் 'இப்போது முயற்சி செய்க'(Try now) என்பதை தேர்வு செய்ய வேண்டும். உடனே இந்த புதிய அம்சம் திரையில் தோன்றி, அந்த குறிப்பிட்ட அழகுசாதன பொருளை நீங்கள் முயற்சிசெய்து பார்க்க வழிவகுக்கும். இதை கேமரா மூலம் உங்கள் முகத்திலேயே முயற்சி செய்யலாம் அல்லது பயனர்களை போலவே தோல் தொனி கொண்ட ஒரு மாடலை தேர்வுசெய்து முயற்சிக்கலாம்.

விரைவில் கிடைக்கும்

விரைவில் கிடைக்கும்

லோ'ரியால் இந்த அம்சத்தின் மூலம் கண் மைகளை பயனர்கள் முயற்சிக்கும் வசதி விரைவில் கிடைக்கும் எனவும், எதிர்காலத்தில் அனைத்து விதமான அழகுசாதன பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நம்புகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும்

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும்

லைவ் மோட்" அம்சமானது கடந்த மார்ச் மாதம் கையகப்படுத்திய,செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆக்குமென்டேட் ரியாலிட்டி தளமான "மோடி ஃபேஸ்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.மோடிபேஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே செபோரா மற்றும் எஸ்டே லுடர் ஆகியவற்றின் ஆக்குமென்டேட் ரியாலிட்டி பியூட்டி செயலிகளை உருவாக்க உதவியுள்ளது என்பதால், இந்த வகையான தொழில்நுட்பம் நமக்கு புதியது இல்லை.

 அழகுசாதன பொருட்கள்

அழகுசாதன பொருட்கள்

எனினும் இதுபோன்ற மேம்பட்ட அம்சங்களை அமேசான் செயலியில் இணைப்பது, இணையத்தில் அல்லது இணைய வர்த்தக செயலியில் அழகுசாதன பொருட்கள் ஷாப்பிங் வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் இது நிச்சயம் வரவேற்கதக்கது.

மெய்நிகர் வசதி

மெய்நிகர் வசதி

"இணையத்தில் அழகுசாதன பொருட்களை வாங்குவதை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக்குவதற்காக, அவர்கள் பொருட்களை வழங்குவதற்கு முன் எளிதாக மெய்நிகர் வசதி மூலம் அவற்றைஸமுயற்சி செய்யக்கூடிய திறனை பயன்படுத்துவதற்காக மோடிஃபேஸ் தொழில்நுட்பத்துடன் இணைவதற்கு ஆவலாக உள்ளோம்" என்கிறார் அமேசான் அழகுசாதான பொருட்கள் பிரிவின் தலைவர் நிக்கோலஸ் லீ.

 அமெரிக்க மற்றும் ஜப்பானில் ஆண்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது

அமெரிக்க மற்றும் ஜப்பானில் ஆண்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது

இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மெய்நிகர் அனுபவத்துடன், தற்போது அமேசான் வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கையுடன் எங்கு இருந்தாலும் எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியும் மற்றும் அவை வீடுகளுக்கே சென்று டெலவிரி செய்யப்படும்.

"வாடிக்கையாளர்கள் அழகுசாதன தயாரிப்புகளை ஆன்லைனில் தேர்ந்தெடுக்கவும் வாங்குவதற்கும் சிறந்த இடமாக அமேசான் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்கான முக்கிய மைல்கல் இது" என்கிறார்.


தற்போது வரை, லைவ் மோட் அம்சமானது அமெரிக்க மற்றும் ஜப்பானில் ஆண்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon-launches-app-lets-users-try-makeup-buy : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X