IRCTC அமேசான் உடன் கூட்டு.! இனி இங்கிருந்தும் கூட சலுகையுடன் டிக்கெட் புக் செய்யலாம்.!

|

அமேசான் இந்தியா இப்போது இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்துகிறது, இது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (IRCTC) உடன் கூட்டு சேர்ந்து துவங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது என்று அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் IRCTC கூட்டு

அமேசான் IRCTC கூட்டு

அமேசான் புதிய ரயில் டிக்கெட் சேவையுடன் ஜீரோ கட்டண நுழைவாயில் சேவை மற்றும் தளர்த்தப்பட்ட சேவை கட்டணங்கள் போன்ற அம்சங்களைக் பயனர்களுக்கு வழங்குகிறது. அமேசான் IRCTC டிக்கெட்களுடன்கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது என்பது குறிபிடத்தக்கது.

1 கிளிக் கட்டண சேவை

1 கிளிக் கட்டண சேவை

இந்த கேஷ்பேக் சலுகை நீங்கள் அமேசான் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது தானாகவே கிடைக்கும். அமேசான் அறிவிப்பின்படி, 1 கிளிக்கில் கட்டண சேவை உடனடியாக செயல்படும்.உங்கள் அமேசான் கணக்கிலிருந்து நீங்கள் புக் செய்யும் டிக்கெட்களுக்கான ரீபண்டு பணத்தை உடனடியாக நீங்கள் திரும்பப் பெறலாம்.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

கேஷ்பேக் சலுகை

கேஷ்பேக் சலுகை

ஆட்டோ-ஃபில் சேவையும் இதில் உள்ளது, இது பயணிகளின் பயண தரவை சேமிக்கும். அமேசானில் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் முறை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு அப்போது என்ன சலுகை இருக்கிறதோ அது வழங்கப்படும்.

இவர்களுக்கு மட்டும் 12% கேஷ்பேக் சலுகையா?

இவர்களுக்கு மட்டும் 12% கேஷ்பேக் சலுகையா?

நீங்கள் பெறும் கேஷ்பேக்கின் அளவு கீழே உள்ள விவரங்களின்படி முன்பதிவு தொகை மற்றும் 'பிரைம் உறுப்பினர்' நிலையைப் பொறுத்து மாறும் என்று அமேசான் கூறியுள்ளது. பிரைம் உறுப்பினர்கள் பிளாட் 12% கேஷ்பேக் சலுகையாகத் திரும்பவும் வழங்கப்படும். இது 120 ரூபாய் வரையில் பொருந்தும்.

SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா?SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.! இனி இந்த வசதியும் உங்களுக்கு இருக்கு தெரியுமா?

இவர்களுக்கு வெறும் 10% மட்டுமே கேஷ்பேக் சலுகை.!

இவர்களுக்கு வெறும் 10% மட்டுமே கேஷ்பேக் சலுகை.!

பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு 10% வரை கேஷ்பேக் வழங்கப்படும். இதில் ரூ .100 வரை பயனர்கள் பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பிய புறப்படும் தேதி மற்றும் இலக்கை நிரப்ப இந்த அமேசான் டிக்கெட் முன்பதிவு முறை அனுமதிக்கிறது.

அமேசான் பே பேலன்ஸ்

அமேசான் பே பேலன்ஸ்

மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அமேசான் பே பேலன்ஸ் போன்ற பல கட்டண விருப்பங்களையும் அமேசான் இதில் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்ய விரும்பினாலும் அமேசான் மூலம் ரத்து செய்துகொள்ளலாம்.

டிக்கெட் ரத்து செய்யப்படும்போது பணம் கிடைக்குமா?

டிக்கெட் ரத்து செய்யப்படும்போது பணம் கிடைக்குமா?

முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎன்ஆர் நிலையை சரிபார்க்கலாம், டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம். மேலே கூறியது போல், நீங்கள் அமேசான் பே பேலன்ஸ் கட்டண முறையாகக் கட்டணம் செலுத்தி இருந்தால், டிக்கெட் ரத்து செய்யப்படும்போது பணம் உடனடி உங்கள் அமேசான் பே பேலன்ஸ் இல் திரும்பிக் கொடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Amazon India Launches New IRCTC Train Ticket Booking Service In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X