Home
Apps

Amazon தளத்தில் இப்பொழுது நீங்கள் வாங்க கூடிய 10 தேவையான பொருட்கள் இதுதான்!

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் மக்கள் வெளியே செல்லலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் கூட அதிலும் ஆபத்து உள்ளது. அத்தியாவசியங்களை வெளியில் சென்று வாங்க வேண்டுமா? காவலர்களிடம் சிக்கினால் நம் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு அமேசான் டோர் டெலிவரி சேவையை வழங்குகிறது.

வாங்க கிடைக்கும் 10 அத்தியாவசிய பொருட்கள்

வாங்க கிடைக்கும் 10 அத்தியாவசிய பொருட்கள்

அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவை நீங்கள் மீரா வேண்டாம். ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றுஅமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் அதன் பயனர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் டோர் டெலிவரிசெய்கிறது. அமேசானில் இப்போது நீங்கள் வாங்கக்கூடிய 10 அத்தியாவசிய பொருட்களை என்ன என்பதைப் பார்க்கலாம்.

1. ஹெல்த் கேர் சாதனங்கள்

1. ஹெல்த் கேர் சாதனங்கள்

இந்த நேரத்தில் தேவைப்படும் ஹெல்த் கேர் சாதனங்களை நீங்கள் அமேசான் தளத்திலிருந்து வாங்கலாம், இப்போது உங்களுக்கு டிஜிட்டல் இரத்த அழுத்த மானிட்டர், டிஜிட்டல் தெர்மோமீட்டர், முகம் அல்லது மூக்கு ஸ்டீம் வேபோரைசர், நெபுலைசர், குளுக்கோமீட்டர் மற்றும் பல சாதனங்களை நீங்கள் வாங்கலாம்.

2. அத்தியாவசிய சமையல் பொருட்கள்

2. அத்தியாவசிய சமையல் பொருட்கள்

அமேசானிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து சமையல் அத்தியாவசியங்களையும் நீங்கள் ஆர்டர் செய்யலாம். இதில் அரிசி பாக்கெட்டுகள், எண்ணெய்கள், நெய், மாவு, பருப்பு வகைகள், மசாலா, மசாலா, சிரப், கெட்ச்அப், இனிப்பான்கள், ஜாம், தேன், பரவுகிறது, சிற்றுண்டி பொருட்கள், உலர்ந்த பழங்கள், முந்திரி போன்று அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கிறது.

3. ரெடிமேட் அத்தியாவசிய சாப்பாட்டுப் பொருட்கள்

3. ரெடிமேட் அத்தியாவசிய சாப்பாட்டுப் பொருட்கள்

வேலை செய்யாமல் உடனுக்குடன் தயார் செய்து சாப்பிட விரும்பும் பயனர்களுக்கான ரெடிமேட் அத்தியாவசிய சாப்பாட்டுப் பொருட்களான தானிய மற்றும் மியூஸ்லி, காபி, தேநீர், பானங்கள், பாஸ்தா, நூடுல்ஸ், மேகி, இனிப்புகள், சாக்லேட், பபில் கம், ஊறுகாய், பால் பவுடர் , சிப்ஸ் மற்றும் பல பொருட்கள் கிடைக்கிறது.

4. சலவை எசென்ஷியல்ஸ்

4. சலவை எசென்ஷியல்ஸ்

அமேசான் அதன் தளங்களில் சலவை அத்தியாவசியங்களைச் சலுகையுடன் வழங்கி வருகிறது. கம்ஃபோர்ட், டைட், ஏரியல், சர்ப் எக்செல் மற்றும் பல பிராண்டுகளிலிருந்து சோப்புகள், சோப்பு தூள், லாண்டரி பேக்ஸ் மற்றும் பலவற்றை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

5. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்

5. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்

சமீபத்தில் பெற்றோராக மாறியவர்களுக்கு இந்த ஊரடங்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும், கவலை வேண்டாம் உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அமேசான் குழந்தைகள் பிரிவின் கீழ் தயாராக வைத்துள்ளது. பேபி பவுடர், பேபி லோஷன்கள், பேபி வேற வைப்ஸ், பிளாங்கெட் போர்வை, டயப்பர்கள் மற்றும் பல பொருட்களை வழங்குகிறது.

6. ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க்

6. ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க்

அமேசான் தனது தளத்தில் ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்ற பாதுகாப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. அமேசானிலிருந்து பயனர்கள் வெவ்வேறு பிராண்டுகளிலிருந்து ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்றவற்றை வாங்கலாம்.

7. கழிப்பறை பொருட்கள்

7. கழிப்பறை பொருட்கள்

பாதுகாப்பு பொருட்களுடன் வாடிக்கையாளர்கள் சமையலறை சுத்தம் செய்யும் பொருட்கள், டவல் பேப்பர் ரோல், ஏர்-ஃப்ரெஷனர், கிருமிநாசினிகள் போன்ற பல தேவையான சுத்திகரிப்பு கழிப்பறை பொருட்களையும் இந்த ஊரடங்கு நாட்களில் அமேசான் மூலம் நீங்கள் வாங்கலாம்.

8. இ-புக்ஸ்

8. இ-புக்ஸ்

நியூஸ்பேப்பர் போன்ற பொருட்களை நீங்கள் தினமும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பது உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாகக் கூட இருக்கலாம். உங்களுக்குப் பொழுது போக வேண்டுமென்றால் அமேசானில் கிடைக்கும் இந்த இ-புக்ஸ்களை வாங்கி படியுங்கள். பல தரப்புகளில், பல பிரிவுகளில் ஏராளமான புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கிறது.

9. ஹெல்த் சப்பிலிமெண்ட்

9. ஹெல்த் சப்பிலிமெண்ட்

அமேசான் உங்களுக்கு இப்பொழுது பல்வேறு சுகாதார ஹெல்த் சப்ளிமெண்ட் பொருட்களையும் விற்பனை செய்கிறது. உங்களுக்குத் தேவையான மல்டிவைட்டமின் மாத்திரைகள், கால்சியம் சப்ளிமெண்ட் மற்றும் பலவற்றை நீங்கள் இப்பொழுது தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

10. செல்லப்பிராணிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்

10. செல்லப்பிராணிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள்

மனிதர்களுடன் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளையும் கருத்தில் கொண்டு அமேசான் வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசியங்களையும் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. இதில் நீங்கள் டாக் பிஸ்கட், பெடிக்ரீ, பறவை உணவு, பூனைகளுக்கான உணவு, நாய்களுக்கான உணவு, மீன் உணவு மற்றும் அக்குவாரியம் பொருட்கள் என்று பலவற்றை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Amazon Big Step During Coronavirus Lockdown 10 Thing You Can Buy Online Now : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X