உங்கள் அந்தரங்க பிரைவசிய கூட இனி பாதுகாக்கலாம்! அல்ட்டிமேட் பாதுகாப்பிற்கு இதான் வழி!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா, தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு சுலபமான வழி இருந்தால் எப்படி இருக்கும்? இனி உங்கள் ஸ்மார்ட்போனை குடும்ப உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ தைரியமாகக் கொடுக்கலாம், பிரைவசிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினால் எப்படி இருக்கும்? நினைத்தாலே சூப்பரா இருக்கா? உங்கள் பிரைவசிக்கான அல்டிமேட் பாதிப்பு இப்போது ரெடி ஆகிவிட்டது.

உங்கள் கற்பனை நிஜமாகிவிட்டது

உங்கள் கற்பனை நிஜமாகிவிட்டது

இப்படி ஒரு தகவலைத் தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று நீங்கள் மனதில் நினைப்பது எங்களுக்குத் தெரிகிறது. உங்கள் கற்பனை இப்போது நிஜமாகி விட்டது. அதுவும் வெறும் டபுள் க்ளிக்கில் நீங்கள் கற்பனை செய்த அத்தனை அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்கும் படி புதிய அம்சம் வெளியாகியுள்ளது.

இது எப்படி சாத்தியம்?

இது எப்படி சாத்தியம்?

உங்கள் டிஸ்பிளேவை இரண்டு முறை தட்டினால் போதும் உங்கள் பிரைவசி தகவல் அனைத்தும் பாதுகாக்கப்படும்.டபிள் கிளிக் செய்து உங்கள் ஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் இனி நீங்கள் ஒப்படைக்கலாம். இதனால் உங்கள் பிரைவசிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது எப்படி சாத்தியம் என்று தானே யோசிக்கிறீர்கள்? AltZ Life என்ற சேவை தான் இதை தற்பொழுது சாத்தியம் ஆகியுள்ளது.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

AltZ Life என்பது என்ன? அது எப்படி செயல்படும்?

AltZ Life என்பது என்ன? அது எப்படி செயல்படும்?

AltZ Life என்பது இந்த டிஜிட்டல் உலகில் நமது பிரைவசியை பயமில்லாமல் பாதுகாக்க உதவும் ஒரு அற்புத அம்சம். இனி தனிப்பட்ட விஷயங்கள் தனிப்பட்டதாகவே இருக்கும்.AltZ Life உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், உங்களின் பிரைவசி தகவல்கள் மேல் மற்றவர்களின் தலையீடு எதுவும் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71

சாம்சங் கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71

இந்தியாவில் முதன்முதலாக சாம்சங் நிறுவனம் தற்போது AltZ Life பிரைவசி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 ஆகிய ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பட்டனை இருமுறை தட்டினால் போதும், தானாக AltZ Life ஓபன் ஆகிவிடும்.

மன உளைச்சலில் பப்ஜி வீரர்கள்: கவலை வேண்டாம்., இதோ மாற்று விளையாட்டு இருக்கே!மன உளைச்சலில் பப்ஜி வீரர்கள்: கவலை வேண்டாம்., இதோ மாற்று விளையாட்டு இருக்கே!

தனிமையாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்

தனிமையாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்

அதில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள், ஆப்ஸ், பிரவுசர், கேலரி, புகைப்படங்கள், மெசேஜ் சாட், பாஸ்வேர்டு போன்றவற்றை ஹைடு செய்துகொள்ளலாம். இப்போது மறுபடியும் டபுள் டச் செய்தால், நீங்கள் தேர்வு செய்த அனைத்து தகவல்களும் உங்கள் போனில் உள்ள பொது இடத்திலிருந்து தனிமையாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

யாரும் ஓபன் செய்ய முடியாது

இப்படி உங்கள் தகவல்கள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பாதுகாக்கப்பட்டால் அதை மற்றவர்கள் யாரும் ஓபன் செய்ய முடியாது. மறுபடியும் அதை பிரைவேட் பாதுகாப்பில் உள்ள தகவல்களை நீங்கள் ஓபன் செய்ய வேண்டுமென்றால், விரல் ரேகை சென்சாரில் மீண்டும் டபிள் கிளிக் செய்ய வேண்டும்.

பிரைவசி கவலை இனி இல்லை

பிரைவசி கவலை இனி இல்லை

இனி பாதுகாப்பாக யார் வேண்டுமானாலும் உங்கள் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்தலாம். ஆனால், உங்களுடைய பிரைவசியை கொஞ்சம் கூட பார்க்க முடியாது. இனி பிரைவசி பற்றிய கவலை நமக்கு தேவையில்லை.

Best Mobiles in India

English summary
Alt Z Life With Most Innovative Privacy Features on Samsung Galaxy A51 and Galaxy A71 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X