நீங்களும் சிட்டி ரோபோட்டா மாறலாம்.! புதிய "2.0" ஏ.ஆர் பில்டர் ட்ரை பண்ணுங்க.!
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருதினங்களுக்கு முன்னாள் திரைக்கு வந்த ரஜினி இன் 2.0 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் தான் வலைத்தளங்களை நிரப்பிக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருதினங்களுக்கு முன்னாள் திரைக்கு வந்த ரஜினி இன் 2.0 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் தான் வலைத்தளங்களை நிரப்பிக்கொண்டுள்ளது.
திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்களும், வசூல் சாதனை செய்திகளும் தான் முக்கிய செய்திகளாக இருந்து வருகிறது.

புது அப்டேட் செய்தி
திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் இல் போட்டோ மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் போட்டுப் படம் பார்க்காத நண்பர்களை கடுப்பேற்றும் ஃபிரண்ட்ஸ்களுக்கு புது அப்டேட் செய்தியை நாங்கள் தருகிறோம்.

ஹீரோவா இல்ல வில்லனா
திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய செய்தி. என்ன புரியலையா இன்னும் மேல படிங்க புரியும்.

ஃபேஸ்புக் ஏ.ஆர் பில்டர்
சிட்டி ரோபோட் போல உங்களை ஏ.ஆர் பில்டர் மூலம், போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொள்ளும் புதிய வசதி தற்பொழுது ஃபேஸ்புக் இல் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் வில்லன் அக்ஷய் குமார் போலவும் உங்களைப் போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்துகொள்ளும் வசதியை தற்பொழுது ஃபேஸ்புக் இல் அறிமுகம் செய்துள்ளனர்.

ஹீரோ சிட்டி லிங்க்
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கென்றே இந்த புதிய ஏ.ஆர் சேவை தற்பொழுது ஃபேஸ்புக் இல் வெளியாகியுள்ளது. நீங்கள் ஹீரோ சிட்டியாக மாற விரும்பினால் இந்த ஃபேஸ்புக் லிங்க்கை பயன்படுத்துங்கள்.
https://m.facebook.com/fbcameraeffects/tryit/1939591022763464/

வில்லன் அக்ஷய் லிங்க்
நீங்கள் வில்லன் அக்ஷய் குமாராக மாற விரும்பினால் இந்த ஃபேஸ்புக் லிங்க்கை பயன்படுத்துங்கள். ஏ.ஆர் பில்டர் மூலம் போட்டோ அல்லது வீடியோ பதிவு செய்து உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
http://www.facebook.com/fbcameraeffects/tryit/310864109642512/


Click it and Unblock the Notifications