இக்காட்டனா சூழலில் சிக்கும் பெண்களுக்கு ஏர்டெல் அறிவித்தது புதிய வசதி.!

ஏர்டெல்லின் இந்த புதிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ததும் தங்களுக்கு எந்த நேரத்திலும் அவசர உதவி செய்யக்கூடிய5பேரின் தொடர்பு எண்களை பதிவு செய்து வைக்கவேண்டும்.

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டி புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்புக்கு வேண்டி மை சர்க்கிள் என்ற மொபைல் அப்ளிகேஷன்
திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல்.

இக்காட்டனா சூழலில் சிக்கும் பெண்களுக்கு ஏர்டெல் அறிவித்தது புதிய வசதி.

ஏர்டெல் நிறவனம் மற்றும் எப்.ஐ.சி.சி.ஐ மகளிர் அமைப்பும் இணைந்து தான் இந்த புதிள அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளன, மை சர்க்கிள் (MyCircle) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அப்ளிகேஷன் பெண்கள் பாதுகாப்புக்கு
உதவக்கூடியது ஆகும்.

5 பேருக்கு அவசர உதவி கேட்டு மெசேஜ் அனுப்பலாம்

5 பேருக்கு அவசர உதவி கேட்டு மெசேஜ் அனுப்பலாம்

இப்போது வெளியிடப்பட்ட இலவச அப்ளிகேஷனை ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களும் பயன்படுத்தலாம், இந்த மொபைல் ஆப் மூலம் இக்காட்டனா சூழலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த 5 பேருக்கு அவசர உதவி கேட்டு மெசேஜ் அனுப்பலாம் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13மொழிகளில்

13மொழிகளில்

மேலும் அவசர உதவி கோரும் மேசேஜை தமிழ் உள்ளிட்ட 13மொழிகளில் அனுப்ப முடியும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த அவசர மேசேஜ் அனுப்புவதை ஐபோன்களில் சிரி மூலமும், ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள்
அசிஸ்டெண்ட் மூலமும் குரல் கட்டளை அளித்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர உதவி

அவசர உதவி

ஏர்டெல்லின் இந்த புதிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ததும் தங்களுக்கு எந்த நேரத்திலும் அவசர உதவி செய்யக்கூடிய 5பேரின் தொடர்பு எண்களை பதிவு செய்து வைக்கவேண்டும். மேப் உடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவசர உதவி கேட்டு அனுப்பும் மெசேஜில் உள்ள இணைப்பின் வழியாக உதவக்கூடியவர்கள் பெண்ணின் அவ்வப்போதைய இருப்பிடத்தை பின்தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

தற்சமயம் இந்த ஏர்டெல் நிறுவனத்தின் மை சர்க்கிள் மொபைல் ஆப் ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, விரைவில் ஐபோன்களுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel, FLO Collaborate to Launch MyCircle App for Women's Safety: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X