Home
Apps

தகவல் திருட்டு: அவசர அவசரமாக தனியுரிமை கொள்கைகளை திருத்தி மாட்டிக்கொண்ட நமோ ஆப்.!

அதாவது ஒரு பயனரின் இயக்க மென்பொருள் (operating software), நெட்வொர்க் வகை, கேரியர், ஈ-மெயில், புகைப்படம், பாலினம் மற்றும் பெயர் ஆகியவை விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.

By Muthuraj

ஆதார் பயன்பாட்டில் உள்ள பிரதான பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து வெளிப்படுத்திய பிரஞ்சு நாடு பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான எலியட் ஆல்டர்சன், ஆண்ட்ராய்டில் இயங்குதளத்தில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் நரேந்திர மோடி பயன்பாட்டிலும் ஒரு நம்பமுடியாத பாதுகாப்பு குறைபாட்டை (இன்னும் சொல்லப்போனால் டேட்டா திருட்டை) கண்டறிந்துள்ளார்.

அவசர அவசரமாக தனியுரிமை கொள்கைகளை திருத்தி மாட்டிக்கொண்ட நமோ ஆப்.!

எலியட் ஆல்டர்சனின் படி, நமோ ஆப் ஆனது அமெரிக்க தகவல் நிறுவனமான கிளெவர்டாப் (CleverTap) உடன் ஆப்பை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்ந்து கொண்டு இருக்கிறது. அதாவது ஒரு பயனரின் இயக்க மென்பொருள் (operating software), நெட்வொர்க் வகை, கேரியர், ஈ-மெயில், புகைப்படம், பாலினம் மற்றும் பெயர் ஆகியவை விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு டொமைனுக்கு அனுப்பப்படுகிறது.!

மூன்றாம் தரப்பு டொமைனுக்கு அனுப்பப்படுகிறது.!

கிளெவர்டாப் என்பது தரவு பகுப்பாய்வு தளமாகும். நமோ பயன்பாட்டில் உள்ள ப்ரொபைல் உள்ளடங்களில் பதிவு செய்யப்படும் பயனரின் விவரங்களானது Wzrkt.com என்ற மூன்றாம் தரப்பு டொமைனுக்கு அனுப்பப்படுகிறது. கிளெவர்டாப் என்பது ஒரு நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆப் எங்கேஜ்மென்ட் பிளாட்பார்ம் ஆகும். இது சந்தையாளர்களுக்கு பயனர்களின் அடையாளம், ஈடுபாடு மற்றும் தக்கவைப்பு சார்ந்த விடயங்களை கண்டறிய உதவுகிறது.

நமோ பயன்பாட்டின் டெவலப்பர்களின் விளக்கம்.!

நமோ பயன்பாட்டின் டெவலப்பர்களின் விளக்கம்.!

இது சார்ந்த விளக்கத்தில், நமோ பயன்பாட்டின் டெவலப்பர்கள், கிளெவர்டாப் என்பது "ஒரு பகுப்பாய்வு சார்ந்த மேடை தளத்தில் மட்டுமே" பயன்படுத்தப்படுவதாகவும், "தரவு மறுபரிசீலனைக்கு பயன்படுத்தப்படுவதில்லை" என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது நமோ ஆப் ஆனது மிகவும் பாதுகாப்பானதும், கிளெவர்டாப் நிறுவனத்திற்கு எந்த அணுகலும் கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளனர்.

"அமைதியான முறையில்" சில திருத்தங்கள்.!

ஆனால் இந்த விளக்கங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு தான் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நமோ ஆப் சார்ந்த குற்றசாட்டுகள் கிளம்பி ஓய்வதற்குள், பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் தனியுரிமைக் கொள்கைகளில் "அமைதியான முறையில்" சில திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

நேற்று வரை வேறு, இன்று வேறு.!

நேற்று வரை வேறு, இன்று வேறு.!

நமோ ஆப் மீதான குற்றசாட்டுகள் வெளிப்படும் முந்தைய நாள்வரை, இணையத்தளத்தின் தனியுரிமைக் கொள்கையானது - "உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் தொடர்பு விவரங்கள் ரகசியமாக இருக்கும், உங்களுடனான தொடர்பைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இது பயன்படுத்தப்பட மாட்டாது. உங்கள் சம்மதமின்றி எந்த விதத்திலும் மூன்றாம் தரப்பினருக்கு தகவல் வழங்கப்படாது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஆகச்சிறந்த சாட்சி, இது தான்.!

ஆகச்சிறந்த சாட்சி, இது தான்.!

தற்போது இந்த படத்தில் காணப்படுவது போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆக பயனரின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படமாட்டாது என்று பிரதமரின் வலைத்தளம் கூறியதும், அதற்கு முற்றிலும் எதிர்மாறாக தான் விடயங்கள் நடந்துள்ளதும் வெளிப்படையாகியுள்ளது. அதற்கு ஆகச்சிறந்த சாட்சி - தனியுரிமைக் கொள்கையில் சத்தமில்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த விரைவான மாற்றங்கள் தான்.

Best Mobiles in India

English summary
After NaMo App Exposé, PM's Website Quietly Changes Privacy Policy. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X