அணுக்குண்டு வீசி லண்டன் நகரைத் தரைமட்டமாக்க ஹிட்லர் தீட்டிய திட்டம்! கடைசியில் என்ன ஆச்சு?

  லண்டன் நகரை அணுக்குண்டு வீசித் தாக்குவதற்கு அடால்ஃப் ஹிட்லர் தீட்டிய திட்டம் பாதியிலேயே முறியடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அழிவு தவிர்க்கப்பட்டது என்கின்ற அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் செய்தி புதிய ஆவணப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

  மர்ம புகைப்படம் : 15 ஆண்டுகளாக மவுனம் காக்கும் நாசா.!?

  அணுக்குண்டு தயாரிப்பதற்கு அணு உலைகளில் பயன்படுத்துவதற்குத் தேவையான கடின நீர் (Heavy Water) அடங்கிய பேரல்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஜெர்மன் நாட்டுக்குச் சொந்தமான பெரிய படகு ஒன்றினை அறிவியலாளர்களும் வரலாற்று அறிஞர்களும் சமீபத்தில் கண்டு பிடித்து உள்ளனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை

  1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தன்னுடைய எதிரி நாடுகளின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

  நியூக்ளியர் ரியாக்டர்களில் பயன்படுத்துவதற்காக கடின நீர் அடங்கிய பேரல்களைச் சுமந்து சென்ற 170 அடி நீளமுள்ள நீராவியால் இயங்கக் கூடிய பெரிய படகினை நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோ நகரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏரியிலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

  நேசனல் ஜியோகிராபிக் தொலைக் காட்சி

  1944 ஆம் ஆண்டு, அப்போதைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் ஆணையின்படி இந்தப் படகினை நார்வே நாட்டுப் படைவீரர்கள் அழித்துக் கடலில் மூழ்கடித்துவிட்டனர்.

  நேசனல் ஜியோகிராபிக் தொலைக் காட்சி அலை வரிசையில் (National Geographic Channel) ஆழ் கடல் அகழ்வாய்வு - Drain the Oceans - என்னும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடருக்காக ஆராய்ச்சி செய்த பொழுதுதான் ஆய்வாளர்கள் 1944 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட படகின் சிதைவுகளைக் கண்டறிந்துள்ளனர்.

  இந்தச் சிதைவுகளை நார்வே நாட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான தின் ஏரியின் (Lake Tinn) 460 அடி ஆழப் பகுதியிலிருந்து கண்டறிந்துள்ளனர்.

  ஏரியின் ஆழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட படகில் இருந்து கடின நீர் (heavy water) அடங்கிய 40 பேரல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

  பீப்பாய்கள்

  "இந்தப் படகை அழித்ததன் மூலம் ஜெர்மனியின் அணுஆயுதத் தயாரிப்புத் திட்டம் முறியடிக்கப்பட்டது" என்கிறார், கடற்படை சார்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எரிக் குரோவ் (Eric Grove).

  கடின நீர் அடங்கிய மேலும் பல பீப்பாய்கள் கண்டெடுக்கப்பட்ட படகுக்கு அருகில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  நாஜிகள்

  நாஜிகள் 1939 ஆம் ஆண்டு தங்களுடைய ஆணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடங்கினர். 1940 ஆம் ஆண்டு நார்வே நாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது அங்கிருந்த வெமோர்க் (Vemork) என்னும் அணு நிலையத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இந்த அணு நிலையம் அருகில் உள்ள ஏரியிலிருந்து கடின நீரை (heavy water) உற்பத்தி செய்து கொண்டிருந்தது. இந்த நிலையத்தை ஹிட்லர் தன்னுடைய அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினார்.

  இதனை அறிந்த கூட்டணி நாடுகள் தங்களுடைய படையை அனுப்பி இந்த அணு நிலையத்தை அழித்தன. இதனால் இந்நிலையத்திலிருந்து தயாரிக்கப்பட்டு அழிந்தது போக மீதமிருந்த கடின நீர் பீப்பாய்களைத் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல ஜெர்மனியர்கள் திட்டமிட்டனர். கடின நீர்ப் பீப்பாய்களை பெரிய படகின் மூலம் ஏரியின் வழியாக எடுத்துச் சென்று பிறகு ரயில் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டனர்.

  நார்வே நாட்டுப் படை வீரா்கள்

  ஆனால் நார்வே நாட்டுப் படை வீரா்கள், அந்தப் படகு ஏரியின மையப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டைம் பாம் மூலமாக வெடிக்கச் செய்தனர்.


  நேசனல் ஜியாகிராபிகல் தொலைக்காட்சிக் குழுவினர் தங்களுடைய தொழில் நுட்பம் மற்றும் அயராத முயற்சியின் மூலம் சிதைந்து போன படகின் பகுதிகளைக் கண்டறிந்துள்ளனர்.

  ஜெர்மனி

  "ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த கடின நீர்ப் பீப்பாய்களைக் கண்டறிந்து ஒரு வரலாற்று உண்மையை நிரூபிக்க முயற்சி செய்தோம், எனவே ஏரியின் ஆழத்திற்குச் சென்று அம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம்." என்கிறார், நார்வே நாட்டுப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பேராசிரியர், டாக்டர் பிரடரிக் சோரிடி (Dr Fredrik Soreide).


  பத்துப் பகுதிகளைக் கொண்ட ஆழ்கடல் அகழ்வாய்வுத் - Drain the Oceans - தொடர் செப்டம்பர் 6 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Adolf Hitler was a ferry ride away from Nazi atomic BOMB material to blow up London: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more