அறிமுகம் : அடோப் ஸ்கேன் ஆப் (ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்).!
இந்த பயன்பாடு பதிவிறக்கம் செய்ய மற்றும் பயன்படுத்த இலவசம் என்றாலும் பயனர்கள் அதன் அம்சங்களை அணுகுவதற்கு அடோப் ஐடி கொண்டிருக்க வேண்டும்.
அடோப் நிறுவனம் ஒருவழியாக அடோப் ஸ்கான் என்ற அதன் புதிய ஆவண ஸ்கேனிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் பலவாகியான ஸ்கேனிங் பயன்பாடுகளில் அடோப் நிறுவனத்தின் இந்த பயன்பாட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற ககேள்விக்கு பல காரணங்களை நிறுவனமே அளிக்கிறது.

இந்த புதிய ஸ்கேனிங் பயன்பாடு அடோப் ஆவண கிளவுட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. இந்த பயன்பாடு பதிவிறக்கம் செய்ய மற்றும் பயன்படுத்த இலவசம் என்றாலும் பயனர்கள் அதன் அம்சங்களை அணுகுவதற்கு அடோப் ஐடி கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறியபடி இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது.
அடோப் ஸ்கேன் கிட்டத்தட்ட எல்லா ஸ்கேனிங் பயன்பாடுகளைப் போலவே செயல்படும் என்ற போதிலும் ஸ்கேன் செய்த உள்ளடக்கத்தை அல்லது கேமரா ரோலிலிருந்து புகைப்படங்களை கூர்மைப்படுத்தும் விருப்பத்தை வழங்குகிறது. பயனர்கள் பல பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎப் கோப்புகளை அடோப் ஸ்கேன் பயன்பாட்டின் உதவியுடன் சேமிக்கவும் முடியும்.

அடோப் ஸ்கேன் வழங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மைக்ரோசாப்ட் லென்ஸால் வழங்கப்பட்டதைப் போலவே உரை அங்கீகாரத்தை (டெக்ஸ்ட் ரிகக்னைசேஷன் ) கொண்டுள்ளது. இது பயனர்களை திருத்தும்படியான ஆவணங்களை ஸ்கேன் செய்கையில் அதிகம் உதவும், மேலும் இந்த தொழில்முறை வல்லுநர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக எளிமையான ஒரு அம்சமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
"இந்த இலவச அடோப் ஸ்கேன் பயன்பாடு உங்கள் சாதனத்தில் தானாகவே டெக்ஸ்ட் ரிகக்னைசேஷனை நிகழ்த்தும். ரெசிப்ட்ஸ், குறிப்புகள், ஆவணங்கள், படங்கள், வணிக அட்டைகள், வைட்போர்ட்ஸ் என எதுவாக இருப்பினும் அதை மறுமுறை பயன்படுத்தும் வண்ணத்திலான அடோப் பிடிப் கோப்பாக மாற்றலாம்" என்று நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரில் பயன்பாட்டு விளக்கத்தில் கூறுகிறது.


Click it and Unblock the Notifications