ரத்ததானம் செய்ய அதிமுகவின் செயலி அறிமுகம்.! முதல்வர் துவக்கி வைத்தார்.!
ரத்ததானம் செய்ய அதிமுக சார்பில் தற்போது பிரத்யேகமாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் பெயர் ரத்தத்தின் ரத்தமே ஆகும். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்
ரத்ததானம் செய்ய அதிமுக சார்பில் தற்போது பிரத்யேகமாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் பெயர் ரத்தத்தின் ரத்தமே ஆகும். இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனால் உலகம் முழுக்க ஏராளமான பொது மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தம் தேவைப்படுவோர்களும் ரத்த தானம் செய்ய விரும்புவோர்களும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரத்தம் தேவைப்படுகின்றது:
நமக்கு விபத்து மற்றும் வேறு காரணத்திற்காக நமது உடலுக்கு ரத்தம் அவசியம் தேவைப்படுகின்றது. மேலும், ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்புகளும் இழக்க நேரிடுகின்றது. இதை தடுக்கும் வகையில் அதிமுக சார்பில் இலவசமாக ரத்ததானம் பெறமுடியும்.

விபரங்கள்:
ரத்த தானம் செய்ய விரும்புவோர் உலகில் எங்கியிருந்தாலும், தங்களது பெயர், ரத்தப்பிரிவு, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ரத்த தானம் செய்ய விரும்புவோர்:
பின்னர் ரத்த தானம் பெற விரும்புவோர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், முதலில் அவர்களின் பெயர், தேவைப்படும் ரத்தப்பிரிவு, முதலிலைற்றையும் இந்த ஆப்பில் பதிவு செய்ய வேண்டும்.

விவரங்கள் சென்றையும்:
பதிவு செய்த சில வினாடிகளில், ரத்தம் தேவைப்படுவோரின் முகவரிக்கு சுமார் 10 கி.மீ அருகாமையில் இருக்கும் ரத்தகொடையாளிகளுக்கு அந்த விபரம் சென்றடையும். இதையடுத்து, கொடையாளிகள் தொலைபேசி எண், அவரது இருப்பிடம் உள்ளிட்ட விபரம் ரத்தம் தேவைப்படுவோருக்கு சென்றடையும்.

ரத்த நன்கொடை:
ரத்தம் தேவைப்படுவோர் தங்களின் இருப்பிடம் அல்லது நோயாளி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக:கு அருகில் இருக்கும் ரத்த கொடியாளிகளுடன் உடனடியாக செல்போனில் பேசி சூழலுக்கு ஏற்றாற் போல் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ரத்த தானம் பெறமுடியும்.

இந்த ஆப்பை பதிவிறக்கும் செய்ய:
உலகளாவிய ரத்த தானம் செய்வோர் ரத்தம் தேவைப்படுவோர்களுக்கு இது ஒரு பாலமாக இருக்கும். இந்த ஆப் மூலம் முற்றிலும் Google play store-ல் RR-Blood AIADMK என்று தேடி பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications