ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு! மிரண்டு போன Elon Musk.. பழைய யூசர்களின் பலத்த சம்பவம்!

|

எலான் மஸ்க் - பெரிய பெரிய மாற்றங்கள், கூட்டம் கூட்டமாக பணிநீக்கம் என ட்விட்டர் நிறுவனத்தை கதிகலங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலைப்பாட்டில், அவரே கதிகலங்கும்படியான ஒரு தரமான சம்பவம் நடக்க தொடங்கி உள்ளது. அதென்ன சம்பவம்? Elon Musk-க்கே மிரண்டு போகும்படி அப்படி என்ன நடந்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நானே ராஜா.. நானே மந்திரி!

நானே ராஜா.. நானே மந்திரி!

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய "உரிமையாளர்" ஆன எலான் மஸ்க், "நானே ராஜா.. நானே மந்திரி" என்கிற போக்கில், ட்விட்டர் தளத்தில் மற்றும் ட்விட்டர் கொள்கைகளில் சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

அந்த மாற்றங்கள், ட்விட்டர் அக்கவுண்ட்டை வைத்து இருக்கும் ஒவ்வொருவரையும் எரிச்சல் அடைய செய்யும் வண்ணம் உள்ளது என்றே கூறலாம்!

எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த எல்லோர் கவனத்தையும் Twitter பக்கம் திருப்பிட்டு.. அமெரிக்காவுல Elon Musk பார்த்த "அடேங்கப்பா" வேலை!

காசு கொடு.. ஓப்பன் ஆக கேட்கும் எலான் மஸ்க்!

காசு கொடு.. ஓப்பன் ஆக கேட்கும் எலான் மஸ்க்!

குறிப்பாக - ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சந்தா தொகை! அறியதோர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்களுக்காக மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர்களை வசூலிக்க தொடங்கவுள்ளது.

அதாவது இனிமேல் ட்விட்டர் வெரிஃபைடு டேக் (Twitter verified tag) ஆனது இலவசமாக இருக்காது என்று அர்த்தம்!

ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு!

ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு!

எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்களை சகித்துக்கொள்ள முடியாத ட்விட்டர் பயனர்கள்.. "ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு தான்!" என்று கூறும்படியான ஒரு எதிர் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

அதாவது கூட்டம் கூட்டமாக ட்விட்டர்-ஐ விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர். ட்விட்டர் தளத்தை விட்டு வெளியேறும் பெரும்பாலான பயனர்கள் வேறு எங்கே செல்கின்றன என்பதே இங்கு எழும் முக்கியமான கேள்வி ஆகும்.

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

ஆல்டர்நேட்டிவ்களுக்கு ஜம்ப் அடிக்கும் பழைய பயனர்கள்!

ஆல்டர்நேட்டிவ்களுக்கு ஜம்ப் அடிக்கும் பழைய பயனர்கள்!

ஆம்! ட்விட்டரை விட்டு வெளியேறும் பெரும்பாலான பயனர்கள் ட்விட்டருக்கு மாற்றாக (Twitter alternatives) கருதப்படும் 5 தளங்களுக்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்!

ஒருவேளை நீங்களும் ட்விட்டரை விட்டு வெளியேற விரும்பினால்.. ட்விட்டரை போலவே செயல்படும் ஒரு நல்ல மாற்று தளத்தை தேடினால்.. ஒன்றல்ல, இரண்டல்ல உங்களுக்கு மொத்தம் 5 ஆப்ஷன்கள் உள்ளன!

1. கூ (Koo)

1. கூ (Koo)

கூ (Koo) என்பது, ட்விட்டரை போலவே செய்திகள் மற்றும் கருத்துக்களை பகிர உதவும் ஒரு மைக்ரோ பிளாக்கிங் தளமாகும்.

சமீபத்திய செய்திகள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் மிகவும் சுவாரஸ்யமான தினசரி தலைப்புகள் போன்றவைகளை விவாதிக்கும் இந்த தளம் 10 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது!

2. மாஸ்டோடன் (Mastodon)

2. மாஸ்டோடன் (Mastodon)

மாஸ்டோடன் (Mastodon) என்பது ஒரு ஓப்பன்-சோர்ஸ், ப்ரீ சாஃப்ட்வேர் ஆகும். இது பயனர்கள் தங்கள் சொந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ்-களை இயக்க அனுமதிக்கிறது.

இது ட்விட்டர் போன்ற மைக்ரோ பிளாக்கிங் அம்சங்களையும் வழங்குகிறது. மேலும் சேவை விதிமுறைகள், தனியுரிமை அமைப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் கொண்டுள்ளது!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

3. டூட்டர் (Tooter)

3. டூட்டர் (Tooter)

டூட்டர் (Tooter) என்பது டூட்ஸ் (Toots) எனப்படும் குறுஞ்செய்திகளை போஸ்ட் செய்ய அனுமதிக்கும் ஒரு தளம் ஆகும். அது டெக்ஸ்ட் ஆக, அல்லது போட்டோக்கள் அல்லது வீடியோக்களாக கூட இருக்கலாம்.

Tooter-இல் ஒருவர் மற்றொருவரை பின்தொடரலாம்; நோட்டிபிஃகேஷன்களை பெறலாம்; செய்யப்பட்ட போஸ்ட்களுக்கு ரிப்ளை செய்யும் விருப்பமும் உள்ளது

4. மித்ராசேது (MitraSetu)

4. மித்ராசேது (MitraSetu)

மித்ராசேது (MitraSetu) என்பது மெசஞ்சருடன் கூடிய இந்தியன் சோஷியல் மீடியா ஆப் ஆகும். இது போட்டோக்கள், ஸ்டிக்கர்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமெண்ட்களை போஸ்ட் செய்ய அனுமதிக்கும்.

மேலும் மற்ற பயனர்களை தொடர்பு கொள்ளவும், குழுக்களை உருவாக்கவும் கூட அனுமதிக்கிறது.

5. ட்ரைபேல் (Tribel)

5. ட்ரைபேல் (Tribel)

ட்ரைபேல் (Tribel) என்பது ஒரு சோஷியல் நெட்வொர்க்கிங் ஆப் ஆகும்.

இது வாடிக்கையாளர்களை இணைக்கவும், அவர்களை ஈடுபாடுடன் வைத்து இருக்கவும் மற்றும் தக்கவைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும் ஒரு தனிப்பயனாக்கக்கூடிய சமூக தளம் (customisable community platform) ஆகும்.

Best Mobiles in India

English summary
Activities of elon musk makes twitter users to looking for best alternatives where are they going

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X