ஆதார் இன்டிகிரேஷன் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஸ்கைப் லைட் செயலி

|

மைக்ரோசாப்டின் வீடியோ கால் செயலியின் லைட் பதிப்பு ஸ்கைப்பிற்கு மைக்ரோசாப்ட் புதிய ஃபர்ம்வேர் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கைப் லைட் செயலி கடந்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதார் இன்டிகிரேஷன் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஸ்கைப் லைட் செயலி

புதிய அப்டேட் மூலம் செயலியின் அல்காரிதம்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீடியோ சாட் செய்யும் போதும் குறைந்தளவு மொபைல் டேட்டாவை ஸ்கைப் லைட் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் வேகம் சீரற்ற நிலையில் இருக்கும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள செயலியாக ஸ்கைப் லைட் இருக்கிறது.

ஆதார் இன்டிகிரேஷன் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஸ்கைப் லைட் செயலி

கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடப்பட்ட சில மாதங்களில் இதுவரை சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை கடந்துள்ளது. இத்துடன் ஸ்கைப் லைட் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆதார் வேலிடேஷன் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதார் இன்டிகிரேஷன் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஸ்கைப் லைட் செயலி

ஆதார் உலகின் மிகப்பெரிய தேசிய அடையாள குறியீட்டு எண் ஆகும். இந்த குறியீட்டு எண் மக்கள் அரசாங்கம், வியாபாரம் மற்றும் பல்வேறு தளங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய ஸ்கைப் லைட் செயலியில் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், மற்றவர்களுடன் அதிக பாதுகாப்புடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

புதிய வசதியை கொண்டு அழைப்புகளை மேற்கொள்பவர் அல்லது அழைப்புகளை மறுமுனையில் பெறுபவர்கள் ஆதார் வெரிபிகேஷன் செய்ய கோரிக்கை விடுக்கலாம், இதை செயல்படுத்த "Verify Aadhaar identity" பட்டனை கிளிக் செய்து, 12-இலக்க ஆதார் நம்பரை பதிவு செய்து ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் (one-time password) மூலம் உறுதி செய்ய வேண்டும்.

ஆதார் எண் மூலம் ஒருமுறை உறுதி செய்துவிட்டால் அடுத்தடுத்த அழைப்புகளில் மீண்டும் ஆதார் எண் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

Best Mobiles in India

Read more about:
English summary
Skype Lite is the fastest and smallest app to date built for the Indian market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X