தரச்சான்றிதழ்களை கடந்த இரண்டு புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு.!

இப்போது, இன்னும் இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ரஷ்யாவின் தரச்சான்றிதழ் தளத்தில் புலப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

|

கடந்த 2016- ஆண்டின் மறக்க முடியாத தொழில்நுட்ப தருணம் எதுவென்று கேட்டால் அது நிச்சயமாக அதிரடி இலவசங்களை அள்ளி வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ தான் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு 2017 என்று கூறியதும் நினைவிற்குள் உடனடியாக குதிக்கும் ஒரு பிராண்ட் பெயர் தான் - நோக்கியா ஆண்ட்ராய்டு.!

நோக்கியாவின் பிராண்ட் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எந்தவிதமான ஆடம்பர செய்லபாடுகளிலும் ஈடுபடாமல் நோக்கியா 6 என்ற சிறப்பான கருவியை வெளியிட்டது முதலே நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு கருவிகள் மீது நன்மதிப்பு ஏற்பட்டு விட்டது. அதன் வெளிப்பாடாக நோக்கியாவின் அடுத்த ஆண்ட்ராய்டு கருவி எது என்ற பல லீக்ஸ் தகவல்கள் உடன் கான்செப்ட் புகைப்படங்கள் வெளியாக தொடங்கின.

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

குறிப்பாக இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வின் போது நோக்கியாவின் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுக்கிறது மறுபக்கம் நோக்கியா 6 கருவியின் இரண்டு பிளாஷ் விற்பனையும் நொடிகளில் விற்று தீர்ந்து எதிர்பார்ப்புகளை இன்னும் பெரிய உயரத்துக்கு கொண்டு சென்று விட்டது.

இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு

இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு

சமீபத்தில் டி.ஏ.-1003 என்ற நோக்கியா 6 கருவியின் க்ளோபல் வேரியண்ட் கருவி தரச்சான்றிதழ் தளத்தில் புலப்பட்டதாக லீக்ஸ் தகவலொன்று வெளியானது. இப்போது, இன்னும் இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ரஷ்யாவின் தரச்சான்றிதழ் தளத்தில் புலப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மாடல்கள்

மாடல்கள்

இந்த மாடல்கள் டி.ஏ.-1008 மற்றும் டி.ஏ.-1030 என்று அறியப்பட்டுள்ளது. எச்எம்டி க்ளோபல் நிறுவனம் தான் விற்பனையாளர் இரு சான்றிதழலில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா இ1, நோக்கியா ஹார்ட்

நோக்கியா இ1, நோக்கியா ஹார்ட்

டி.ஏ.-1008 மற்றும் டி.ஏ.-1030 என்று வெளியான கோட் பெயரின்கீழ் பார்க்கும் போது இந்த கருவிகள் முன்பு லீஸ்ட் தகவலாக வெளியான நோக்கியா இ1, நோக்கியா ஹார்ட் அல்லது மற்றும் நோக்கியா டி1 ஆகிய கருவிகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

6 முதல் 7

6 முதல் 7

இந்த நோக்கியா ஆண்ட்ராய்டு போன்களானது எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் பிப்ரவரி 26-ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் இதுவரை கிடைத்த ஆன்லைன் தகவல்களில் இருந்து எச்எம்டி நிறுவனம் இந்த ஆண்டு குறைந்தது 6 முதல் 7 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017-ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5.!

Best Mobiles in India

English summary
Two new Nokia Android smartphones pass certification. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X