உஷார்.! உங்கள் பேஸ்புக் பேஜில் இருந்து உடனே நீக்க வேண்டிய 9 மேட்டர்கள்.!

இந்த இடத்தில் "உதவி புரிந்த" பேஸ்புக் நிறுவனம் எப்போது இழுத்து மூடப்படும் என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை.

|

பிரபல சமூக ஊடக வலைத்தளமான பேஸ்புக்கின் உதவியுடன், சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய இங்கிலாந்தை அடிப்படையான கொண்ட அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் "உதவி புரிந்த" பேஸ்புக் நிறுவனம் எப்போது இழுத்து மூடப்படும் என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை.

உங்கள் பேஸ்புக் பேஜில் இருந்து உடனே நீக்க வேண்டிய 9 மேட்டர்கள்.!

ஏனெனில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் டேட்டா திருட்டு ஊழல் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக்கை புறக்கணிக்குமாறும், பேஸ்புக் அக்கவுண்ட்டை டெலிட் செய்யுமாறும் உலகம் முழுக்க கோரிக்கைகள் எழுந்தன. அதற்கு செவி சாய்க்கும் வண்ணம், சில பிரபலங்கள் உட்பட பெரும்பாலான பயனர்கள், அவர்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டைகளை டெலிட் செய்தனர்.

டெலிட் செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கிறதா.?

டெலிட் செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கிறதா.?

அப்படி திடீரென்றெல்லாம் பேஸ்புக்கை டெலிட் செய்து விட முடியாது. பேஸ்புக்கை டெலிட் செய்யாமல் வேறு ஏதாவது பாதுகாப்பு வழிமுறைகள் அல்லது செயல்முறைகள் இருந்தால் சொல்லுங்கள், செய்கிறேன் என்பவரா நீங்கள்.? அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, ஒரு பேஸ்புக் அக்கவுண்ட்டை டெலிட் செய்வது முட்டாள்தனம், அதற்கு பதிலாக, பேஸ்புக்கில் உள்ள சில மேட்டர்களை மட்டும் டெலிட் செய்வது - புத்திசாலித்தனம். அப்படியாக, உங்கள் பேஸ்புக் பேஜில் இருந்து உடனே நீக்க வேண்டிய 9 விஷயங்கள் இதோ.!

09. பிறந்தநாள் சார்ந்த விவரங்களை நீக்க வேண்டும்.!

09. பிறந்தநாள் சார்ந்த விவரங்களை நீக்க வேண்டும்.!

உங்களுக்கு இதுநாள் வரை தெரிந்திருக்கவில்லை என்றால், இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருவரின் பிறந்த நாள் விவரங்களை வைத்து, அவரின் பெயர் மற்றும் முகவரி, வங்கிக் கணக்கு போன்ற தனிப்பட்ட விவரங்களை மிக எளிதாக அணுகலாம். ஏனெனில் எல்லாவற்றிலும் பிறந்த தேதி இடம்பெற்று இருக்கும்.

08. மொபைல் நம்பரை நீக்க வேண்டும்.!

08. மொபைல் நம்பரை நீக்க வேண்டும்.!

பிறந்த தேதியை பதிவு செய்தால், டேட்டா திருடர்களுக்கு பாதி வேலை வேலை குறையும். ஒருவேளை மொபைல் நம்பரை பதிவு செய்தால் முழு வேலையும் குறையும். மிக மிக எளிதாக உங்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும். பேஸ்புக்கில் மொபைல் நம்பரை பதிவு செய்வதை விட ஒரு பெறிய முட்டாள்த்தனம் கிடையாது.

07. குறிப்பிட்ட எண்ணைக்கையிலான பேஸ்புக் நண்பர்களை நீக்க வேண்டும்.!

07. குறிப்பிட்ட எண்ணைக்கையிலான பேஸ்புக் நண்பர்களை நீக்க வேண்டும்.!

100 லைக்ஸ், 200 லைக்ஸ் வாங்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக, பேஸ்புக் பக்கத்தில் தென்படும் அத்தனை பேரையும் நண்பர்களாக்கி வைத்திருக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. முன்பின் அறிந்த, நன்கு தெரிந்தவர்களை மட்டுமே பேஸ்புக் பிரெண்ட்ஸ்களாக அமைத்துக்கொள்ளவும். ஏனையோர்களை அன்பிரெண்ட் செய்யவும். பட்டால் தான் திருந்துவேன் என்றால், வைத்துக்கொள்ளுங்கள்.!

06. உங்கள் வீடு குழந்தைகளின் அல்லது சிறுவர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டும்.!

06. உங்கள் வீடு குழந்தைகளின் அல்லது சிறுவர்களின் புகைப்படங்களை நீக்க வேண்டும்.!

நாம் இப்போது தான் ஆன்லைன் உலகத்தை பார்க்கிறோம். ஆனால் எதிர்வரும் காலத்தில், அதாவது நமது பிள்ளைகளின் காலத்தில் எல்லாமே ஆன்லைன் தான். குழந்தைகளின் புகைப்படத்தை ஆன்லைனில் உலவ விடுவது அவர்களுக்கு எம்மாதிரியான சிக்கல்களை, எதிர்காலத்தில் விளைவிக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. ஆக நண்பர்களே பேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை அப்லோட் செய்வதை தவிருங்கள்.

05. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் எங்கே இருக்கிறார்கள்,

05. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் எங்கே இருக்கிறார்கள்,

எங்கே படிக்கிறார்கள் என்கிற விவரங்களை நீக்க வேண்டும்.!
உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள், எங்கு படிக்கிறார்கள் போன்ற விவரங்களை பதிவிடும் பெயரில், குழந்தைகள் சார்ந்த மற்றொரு விடயத்திலும் நாம் கோட்டை விடுகிறோம். இது மாதிரியான விவரங்கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்தும் நபர்களுக்கு எளிமையான வழியை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
04. வீட்டில் இருந்தபடி நிகழ்த்திய லோகேஷன்களை நீக்க வேண்டும்.!

04. வீட்டில் இருந்தபடி நிகழ்த்திய லோகேஷன்களை நீக்க வேண்டும்.!

வெளியூரில் இருந்தபடி லோகேஷன் ஷேர் (ஊட்டியில் அல்லது கொடைக்கானலில் இருக்கிறேன் என்று செக்-இன்) செய்வதற்கும், வீட்டில் இருந்தபடியே செக்-இன் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடி நிகழ்த்தப்படும் லோகேஷன் ஷேரிங் ஆனது உங்களின் துல்லியமான வீட்டு விலாசத்தை கண்டறிய உதவும். உஷார்.!

03. விடுமுறைக்கு, எங்கு, எப்போது போகிறீர்கள் போன்ற விவரங்களை நீக்க வேண்டும்.!

03. விடுமுறைக்கு, எங்கு, எப்போது போகிறீர்கள் போன்ற விவரங்களை நீக்க வேண்டும்.!

அதே போல எங்கே செல்கிறீர்கள், எத்தனை நாட்கள் வெளியூரில் இருப்பீர்கள் போன்ற விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்வது திருட்டு கும்பல்களுக்கு அழைப்பிதழ் போல அமையும். பேஸ்புக் வழியாக திருடர்களா.? சும்மா காமெடி பண்ணதாப்பா என்றால்.. தினமும் க்ரைம் நியூஸ்களை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

02. கிரெடிட் கார்ட் விவரங்களை நீக்க வேண்டும்.!

02. கிரெடிட் கார்ட் விவரங்களை நீக்க வேண்டும்.!

ஒருபோதும். இதை செய்ய வேண்டாம். இது நிச்சயாமாக ஒரு நல்ல யோசனை அல்ல. ரோட்டில் கொண்டு போய் உங்களின் பணத்தை கொட்டுவதும், பேஸ்புக்கில் கிரெடிட் கார்ட் தகவல்களை பதிவு செய்வதும் ஒன்றுதான்.

01. போர்டிங்  பாஸ் படங்களை நீக்க வேண்டும்.!

01. போர்டிங் பாஸ் படங்களை நீக்க வேண்டும்.!

உங்கள் போர்டிங் பாஸின் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டால் என்னவாகும் தெரியுமா.? ஒன்றுமில்லை.. உங்கள் போர்டிங் பாஸில் உள்ள தனித்துவமான பார்கோடு வழியாக, நீங்கள் விமான நிறுவனத்திற்கு வழங்கிய அனைத்து வகையான தகவல்களையும் கண்டுபிடிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
9 things you should delete from your Facebook page. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X