நமக்கு பயன் அளிக்கக்கூடிய கூகுள் மேப்ஸின் 8 அம்சங்கள்

|

நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத வகையில் அமையும் தயாரிப்புகளையும் சேவைகளையும் வாரி வழங்கக் கூடிய நிறுவனங்களில் ஒப்பிட முடியாத நிலையை கூகுள் எட்டியுள்ளது.

நமக்கு பயன் அளிக்கக்கூடிய கூகுள் மேப்ஸின் 8 அம்சங்கள்

நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத வகையில் அமையும் தயாரிப்புகளையும் சேவைகளையும் வாரி வழங்கக் கூடிய நிறுவனங்களில் ஒப்பிட முடியாத நிலையை கூகுள் எட்டியுள்ளது. தற்போது உலகில் வாழும் பெரும்பாலானோருக்கு கூகுள் சேவை இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது எனலாம்.

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் அம்சங்களில் கூகுள் மேப்ஸும் ஒன்று. நமக்கு அதிகம் பழக்கம் இல்லாத பகுதிகளுக்கு சென்று வர, கூகுள் மேப்ஸை வழக்கமாக நாம் பயன்படுத்துகிறோம்.

இந்நிலையில் தனது பயனர்களுக்காக, தயாரிப்புகளை அவ்வப்போது புதுப்பிப்பது கூகுள் நிறுவனத்தின் வழக்கமாக உள்ளது. இதற்கு போட்டியாக உள்ள மற்ற வழிகாட்டி தயாரிப்புகள் மற்றும் சேவைகள், எந்த வகையிலும் தனது தயாரிப்பிற்கு நிகராக வந்துவிடாத வகையில், தனித்தன்மையோடு அதை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. பெரும்பாலான ஆன்ட்ராய்டு பயனர்களால் இன்னும் பயன்படுத்தப்படாத ஒருசில அம்சங்களை நாங்கள் கீழே அளிக்கிறோம்.

ஆஃப்லைன் மேப்ஸ்

ஆஃப்லைன் மேப்ஸ்

கூகுள் மேப்ஸில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை உட்கொள்ளும் வரைபடத்தை பதிவிறக்கம் செய்து, உங்கள் மோட்டார் சைக்கிள் அல்லது காரில் உள்ள பழைய ஸ்மார்ட்போனை ஒரு ஜிபிஎஸ் சாதனமாக பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேஷனின் ஆஃப்லைன் மேப்ஸ் பிரிவில் ஒரு கிடைமட்டமான தேர்வு கருவி உட்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப்லைன் மேப்ஸிற்காக எவ்வளவு இடம் செலவிடப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு அது அறிவிக்கிறது. வைஃபை-யில் இணைக்கப்பட்ட உடனே இந்த வரைபடம் தானாக புதுப்பிக்கப்படுகிறது.

வழக்கமான முகவரியை அமைத்தல்

வழக்கமான முகவரியை அமைத்தல்

ஆஃப்லைன் மேப்ஸை பதிவிறக்கம் செய்த பிறகு, இதில் உள்ள இரட்டை பயன்கள் செயல்பாட்டை பயன்படுத்தி, உங்கள் வீட்டு முகவரியையும் பணியிட முகவரியையும் அதில் சேர்த்து கொள்ளலாம். இது விரைவாக வழிகாட்டலுக்கு உதவுவதோடு, அந்த வழிகளில் உள்ள சாலை நெரிசல் தொடர்பான எச்சரிப்புகளை அளிக்கும்.

உங்கள் இருப்பிடத்தை பகிர்தல்

உங்கள் இருப்பிடத்தை பகிர்தல்

கூகுள் அறிமுகப்படுத்தி உள்ள இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்கு உங்கள் இருப்பிடத்தை கூகுள் மேப்ஸ் மூலம் நண்பர்களுடன் நிகழ்-நேரத்தில் பகிர்ந்து கொள்ள எதுவாக உள்ளது. தாங்கள் இருக்கும் இருப்பிடத்தை தங்கள் நண்பர்களுக்கு தெளிவாக கூற முடியாமல் தவிப்பவர்களுக்கு, இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கிறது.

பக்கத்தில் உள்ள இடங்கள் மற்றும் வியாபாரங்கள்

பக்கத்தில் உள்ள இடங்கள் மற்றும் வியாபாரங்கள்

உங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் வியாபாரங்களைக் குறித்து தேடி அறிந்து கொள்ள கூகுள் மேப்ஸ் உதவுகிறது. இதற்கான தகுந்த கீவேர்டுகளை நீங்கள் அளித்து கூகுள் தேடல் என்ஜினிடம் இருந்த சரியான தீர்வுகளைப் பெற்று கொள்ளலாம்.

விண்டோஸில் ஸ்கைப்-பிற்கு 'ஆப்பு' வைக்க கூடிய 5 மாற்றுகள்விண்டோஸில் ஸ்கைப்-பிற்கு 'ஆப்பு' வைக்க கூடிய 5 மாற்றுகள்

ஒற்றை கை விரிவுப்படுத்துதல்

ஒற்றை கை விரிவுப்படுத்துதல்

நீங்கள் வழிகாட்டலில் இருக்கும் போது, வரைபடத்தை பெரிதாக்குவது சிரமமான ஒரு காரியம் ஆகும். இதற்கு தீர்வாக, வரைபடத்தின் பகுதியை இரண்டு முறை தட்டுவதன் மூலம் அதை விரிவுப்படுத்த முடியும். திரும்பவும் பெரிதுப்படுத்த விரும்பினால், மீண்டும் இரு முறை தட்டினால் போதுமானது.

ரயில் மற்றும் பஸ் கால அட்டவணை

ரயில் மற்றும் பஸ் கால அட்டவணை

இந்தியாவில் உங்கள் நகரத்தில் உங்கள் ரயில்கள் மற்றும் பஸ்களின் கால அட்டவணையை, கூகுள் மேப்ஸ் உட்படுத்தி உள்ளது. நீங்கள் செல்ல வேண்டிய வழிக்கான பஸ் ரூட்களை தேடலாம் என்பதோடு, பல்வேறு வகையான பொது போக்குவரத்து விவரங்களைப் பெற தீர்வுகளை வடிகட்ட முடியும். பஸ் ரூட்கள், நிறுத்தங்கள், சென்றடைய எடுத்து கொள்ளும் நேரம் ஆகியவை வழிகளைப் பொறுத்து மாறுபடுகின்றன.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
உங்கள் நகர்வை கண்காணிக்க

உங்கள் நகர்வை கண்காணிக்க

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் எல்லா நகர்வுகளை குறித்த வரலாறும், கூகுள் மேப்ஸிடம் இருக்கும். இதில் உள்ள டைம்லைன் என்ற ஒரு தேர்வின் மூலம் நீங்கள் சென்ற இடங்கள், பயணித்த வழிகள் ஆகியவற்றை அது காட்டும்.

ஒரு உள்ளூர் வழிகாட்டி ஆகலாம்

ஒரு உள்ளூர் வழிகாட்டி ஆகலாம்

கணக்கெடுப்புகளின் மூலம் செயல்படும் சேவைகளுக்கு கருத்துகளைத் தெரிவிக்க, நீங்கள் நேரத்தை செலவிடுவதற்கு உங்களுக்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் எடுத்துள்ள ஒரு முயற்சியே, கூகுள் ரிவார்டு என்று அழைக்கப்படுகிறது. கூகுள் மேப்ஸில் உள்ள உள்ளூர் வழிகாட்டி பகுதியில், இந்த வசதி காணப்படுகிறது. வியாபாரங்கள் தொடர்பான விவரங்களை சேர்த்து, உங்கள் புகைப்படங்களோடு கூடிய மதிப்புரைகளையும் வழங்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Google has become an integral part of our lives as it provides us access to products and services that cannot be compared with the rest. We can say that a life without Google is unimaginable for most people in the world. Google Maps is one of the most commonly used features from Google. We usually refer to Google Maps to commute in areas that we are not familiar with.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X