இந்த 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலிட் செய்யவும்; கூகுள் பிளே எச்சரிக்கை.!

  சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி 2017 மறுஆய்வு அறிக்கை வெளியிட்டது, இது நிறுவனத்தின், 2017 ஆம் ஆண்டிற்கான நான்காவது தவணை செக்யூரிட்டி மறுஆய்வு அறிக்கை ஆகும் என்பதும், இது பயனர்கள் சந்திக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தெளிவை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தகவல்களில், பிஎச்ஏ எனப்படும் பொடென்ஷியல் ஹார்ம்புல் ஆப்ஸ் (Potentially Harmful Apps) பற்றிய விவரங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டில், சுமார் 60.3% தீங்கு விளைவிக்கும் பயன்பாடுகள் (PHA) ஆனது, இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்) வழியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அபாயகரமான மற்றும் தனியுரிமை-ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தும்.!

  கூகுளின் மெஷின் லேர்னிங் சேவையானது, Google Play Protect என 2 பில்லியன் சாதனங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அது, ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் நிகழும் தீங்கிழைக்கும் செயல்பாடுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து, அவைகளில் அபாயகரமான மற்றும் தனியுரிமை-ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பட்டியலிட்டுள்ளது; அந்த ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலிட் செய்வது நல்லது.!

  01. குட் வெதர் ஆப் (Good Weather app) :

  ESET வலைப்பதிவின் படி, இந்த குறிப்பிட்ட ஆப்பை ஹேக்கர்கள் ஒரு ட்ரோஜன் (trojan) ஆக பயன்படுத்துகின்றன. அதாவது, Trojan.Android/Spy.Banker.HU என்கிற பேங்கிங் மால்வேர் வழியாக உங்களின் போன் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. ஒருமுறை இந்த ஆப் டவுன்லோட் செய்யப்பட்ட பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக், அன்லாக், டெக்ஸ்ட்களை இடைமறிப்பு செய்வது போன்ற கட்டுப்பாடுகளை பெறலாம். கூடுதலாக, பயனரின் வங்கி சார்ந்த தகவல்களையும் அணுக முடியும்.

  02. ட்ரா சம்திங் ஃப்ரீ (Draw Something Free) :

  இந்த பயன்பாடானது, தொலைதூர நண்பர்களிடம் விளையாட அனுமதிக்கும் பிக்ஷ்நரியின் ரிமோட் பதிப்பாகும். இதர டெவெலப்பர்கள் வழியாக உருவாக்கம் பெற்ற இந்த ஆப்பின் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்கள் வழியாக, ஸ்மார்ட்போனில் உள்ள எந்தவொரு ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்குமாம். அதாவது, உங்கள் போன் எண், அழைப்பு பதிவு, சிக்னல் தகவல், கேரியர் மற்றும் இன்னும் பல தகவல்களை குறிப்பிட்ட விளம்பரதாரர்களால் அணுக முடியும் என்று அர்த்தம்.

  03. கோ லாக்கர் (GO Locker) :

  உங்கள் ஸ்மார்ட்போன் லாக் ஸ்க்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஆப் ஆனது பின்புலத்தில் சில நம்பமுடியாத கட்டுப்பாடுகளை கொண்டுள்ளதென்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம், கோ லாக்கர் ஆப் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் மீதான அணுகலை கொண்டு இருப்பதால், அது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் முதல் உங்கள் லோக்கேஷன் வரையிலாக கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் அணுகும். இது விளம்பரதாரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது, மூன்றாம் தரப்பு பயன்பாட்டு அங்காடிகளுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  04. கேமரா 360 (Camera360) :

  இந்த கேமரா டூல் ஆனது, உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவிற்கான கூடுதல் மோட்ஸ், பிரத்தியேக பில்டர்ஸ், ப்ரீ க்ளவுட் ஸ்டோரேஜ், முக அங்கீகார மென்பொருள், நிகழ் நேர "டச்-அப்கள்" உடன் விளம்பரங்களையும் வழங்கும் ஒரு ஆப் ஆகும். இந்த ஆப்பில் சீனாவின் கூகுள் என்று அழைக்கப்படும் பைடு (Baidu) இன்-பில்ட் ஆக இணைக்கப்பெற்றுள்ளது. அது இந்த ஆப்பை பயன்படுத்தி, உங்கள் WiFi ஐ ஆப் மற்றும் ஆன் செய்யும் வல்லமையை கொண்டுள்ளதாம்.

  How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
  05. க்ளீன் மாஸ்டர் (Clean Master):

  05. க்ளீன் மாஸ்டர் (Clean Master):

  சிக்கல் செய்யும் ஆப்ஸ்களை சரி செய்ய மற்றும் கேட்ச் கோப்புகளை உடனடியாக அழிக்க உதவும் க்ளீன் மாஸ்டர் மற்றும் இதே போன்ற மற்ற ஆப்ஸ்கள் வழியாக, பெரிய அளவிலான டேட்டா திருட்டு பாதிப்புகள் இல்லை என்றாலும் கூட, உங்களின் ஸ்மார்ட்போனின் வாழ்நாளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது க்ளீன் மாஸ்டர் போன்றே ஆப்ஸ்கள் ஆனது, பயன்பாட்டின் போது, உங்கள் பேட்டரியை பலவீனமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நாளடைவில், உங்களின் பேட்டரி திறன் ஆனது அரை மணி நேரம் கூட தாக்குபிடிக்காமல் போகலாம்.

  06. மை டால்க்கிங் டாம் (My Talking Tom) :

  பெரியவர்களுக்கு பொழுதுபோக்காக மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட உதவும், இந்த பயன்பாடானது, தனியுரிமை மீறல் போன்ற ஆபத்துகளை கொண்டிருக்கவில்லை. பதிலாக, இந்த ஆப், பதிவாகும் உங்களின் குரல்களை மைக்ரோபோன் வழியாக விளம்பரதாரர்களுக்கு அனுப்பி வைக்கிறதாம்.

  07. வைஃபை ஆப்ஸ் (Wi-Fi Apps) :

  பெரும்பாலான வைஃபை ஆப்ஸ்கள் ஆனது, "சட்டவிரோத விளம்பர வருவாயை" உண்டாக்குகின்றன. அதாவது பயனர்களை வேண்டுமென்ற தவறான இணைப்புகளை கிளிக் செய்ய வைத்து, அல்லது குறிப்பிட்ட இணைப்புக்கு செலுத்தி விளம்பரங்களை காண வைக்கிறது. மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறும், அதன் வழியாக வைஃபை அனலைசர், ஸ்பீடு டெஸ்ட், இலவச வைப்பாய் ப்ரோ, நெட்வொர்க் ப்ரொடெக்டர் மற்றும் ஸ்மார்ட் ஃப்ரீ வைஃபை ஆகியவை பெருமாறும் தூண்டுமாம், அதுவும் விளம்பரங்களில் தான் முடியுமாம். அம்மாதிரியான சில ஆப்ஸ்களின் பட்டியல் : Master WiFi Key, Free WiFi Connect, WiFi Security Master - WiFi Analyzer, Speed Test, Free WiFi Pro, Network Guard, and Smart Free WiFi.

  08. பிளாஷ்லைட் ஆப்ஸ் (Flashlight Apps) :

  சைபர்செக்யூரிட்டி நிறுவனமான செக் பாயிண்ட்டின் படி (Check Point) பெரும்பாலான பிளாஷ்லைட் ஆப்ஸ்கள் ஆனது, மேற்குறிப்பிட்ட அதே "சட்டவிரோத விளம்பர வருவாயை" உண்டாக்குகின்றன. அம்மாதிரியான சில ஆப்ஸ்களின் பட்டியல் : Brightest LED Flashlight-Pro, Brightest Flashlight, Cool Flashlight, and LED Flashlight.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  8 Dangerous Android Apps It’s Better to Delete Immediately. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more