போட்டோ ஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்வேர்கள் இதுதான்.!

போட்டோஷாப் என்றாலே யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு புகைப்படத்தை எடிட் செய்ய, கலர் மாற்ற, இரண்டு புகைப்படங்களை ஒன்றிணைக்க, உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. மாணவர்கள் முதல் தொழில்முற

|

போட்டோஷாப் என்றாலே யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு புகைப்படத்தை எடிட் செய்ய, கலர் மாற்ற, இரண்டு புகைப்படங்களை ஒன்றிணைக்க, உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. மாணவர்கள் முதல் தொழில்முறையில் உள்ள டிசைனர்கள் வரை போட்டோஷாப்பை ஒரு வரப்பிரசாதமாகவே பார்த்து வருகின்றனர்.

போட்டோ ஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்வேர்கள் இதுதான்.!

ஆனால் இவ்வாறு பல்வேறு பயன்கள் உள்ள போட்டோஷாப்பின் விலை கொஞ்சம் அதிகம். இதனை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் பட்ஜெட் அனைவருக்கும் ஒத்து வராது. ஆனால் கிட்டத்தட்ட போட்டோஷாப் தரும் அனைத்து அம்சங்களையும் கொண்ட இலவச சாப்ட்வேர் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட ஏழு சாப்ட்வேர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

அஃபனிட்டி போட்டோ:

அஃபனிட்டி போட்டோ:

நீங்கள் மேக் ஓஎஸ் பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இந்த அஃபனிட்டி போட்டோ சாப்ட்வேர் நிச்சயம் பயனளிக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த செயலிகளில் ஒன்றான இந்த அஃபனிட்டி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலவசமாக கிடைத்து வருகிறது. டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கூட எளிதில் எடிட் செய்யும். குறிப்பாக பி.என்.ஜி, ஜே.ஜி.ஜி, பி.எஸ்.டி உள்பட அனைத்து வகை போட்டோக்களையும் ஒவ்வொரு லேயராகவும் எடிட் செய்யலாம் என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம் ஆகும். அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாப்ட்வேரில் போட்டோஷாப்பில் உள்ள பெரும்பாலான எடிட்டிங் டூல்ஸ் இருக்கின்றன

ஜிம்ப்:

ஜிம்ப்:

விண்டோஸ், மேக், லீனஸ் ஆகிய மூன்று ஓஎஸ்கள் கொண்டவர்கள் இந்த ஜிம்ப் சாப்ட்வேரை பயனப்டுத்தி கொள்ளலாம். ஜி.என்.யூ மானிபுலேஷன் புரோக்ராம் என்பதன் விரிவாக்கத்தை கொண்ட இந்த ஜிம்ப், இலவசமாக கிடைக்கும் ஒரு போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் ஆகும். எளிய வகையில் புகைப்படத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் ஒரு புகைப்படத்தை முற்றிலும் மாற்ற வேண்டும் என்றாலும் இந்த ஜிம்ப் உங்களுக்கு கைகொடுக்கும். இந்த சாப்ட்வேர் எம்.ஐ.டி.ஐ கண்ட்ரோலர்கள் உள்பட ஒருசில வெளி உபகரணங்களில் இருந்து செயல்படுகிறது

பெயிண்ட்.நெட்:

பெயிண்ட்.நெட்:

போட்டோஷாப் உள்ளிட்ட பல புகைப்படங்கள் எடிட்டிங் சாப்ட்வேரில் பல்வேறு விதமான எடிட்டிங் ஆப்சன்கள் இருக்கும். ஆனால் முக்கிய அம்சங்கள் மட்டும் நமக்கு போதும் என்றால் நீங்கள் தாராளமாக பெயிண்ட்.நெட் சாப்ட்வேரை பயன்படுத்தலாம். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், ஒருசில தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துபவர்கள் இந்த பெயிண்டிங்.நெட்டை எளிமையாகவும், இலவசமாகவும் பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும் இதில் ரெட் ஐ ரிமூவல், எம்போஸ் உள்பட ஒருசில ஸ்பெஷல் எபெஃக்ட்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாப்ட்வேர் பிளக் இன்ஸ்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கோரல் பெயிண்ட்ஷாப் புரோ:

கோரல் பெயிண்ட்ஷாப் புரோ:

ஒரு புகைப்படத்தில் பல்வேறு சிக்கலான விஷயங்களை மாற்ற வேண்டும் என்றால் இந்த சாப்ட்வேரை நீங்கள் போட்டோஷாப்புக்கு பதில் பயன்படுத்தலாம். மேலும் புகைப்படத்தில் டெக்ஸ்ட்களும் சேர்க்க வேண்டும் என்றால் போட்டோஷாப்பை அடுத்து இந்த சாப்ட்வேரில்தான் எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் பார்டரையும் அழகுபடுத்தலாம். மேலும் ஃபேஸ்புக், பிளிக்கர் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்களையும் மிக எளிதில் இதன்மூலம் எடிட் செய்யலாம்.

தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்! பயனரின் டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் அளித்த பதில்!தீப்பிடித்து எறிந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்! பயனரின் டிவிட்டர் பதிவிற்கு ஒன்பிளஸ் அளித்த பதில்!

ஃபாஸ்ட் ஸ்டோன் இமேஜ் வியூவர்:

ஃபாஸ்ட் ஸ்டோன் இமேஜ் வியூவர்:

மிகவும் சிக்கலான புகைப்படங்களாக இருந்தாலும் மிக எளிமையாக, ஆரம்ப நிலையில் உள்ளவர்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்தான் இந்த ஃபாஸ்ட் ஸ்டோன் இமேஜ் வியூவர். கிராப் செய்வது, சைஸ் அளவை மாற்றுவது, ரெடி ஐ ரிமூவல், கலர் மாற்றுவது ஆகிய அம்சங்களும் புல்ஸ்க்ரீன் மோட் அம்சங்களும் இதில் உள்ள சிறப்பு அம்சம். மேலும் இந்த சாப்ட்வேர் மூலம் புகைப்படங்களை வைத்து மியூசிக்கல் ஸ்லைட்ஷோக்களையும் உருவாக்கலாம்.

உங்களை மகிழ்ச்சிபடுத்துமா டாடா ஸ்கை மல்டி டிவி விலை.!உங்களை மகிழ்ச்சிபடுத்துமா டாடா ஸ்கை மல்டி டிவி விலை.!

இர்பான் வியூ:

இர்பான் வியூ:

இந்த சாப்ட்வேர் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமின்றி ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பி.என்.ஜி, ஜே.ஜி.ஜி, டிஃப் போன்ற வகை புகைப்படங்களை எளிதில் எடிட் செய்ய ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளது. மேலும் போட்டோஷாப்பின் பிளக் இன்களும் இதில் உள்ளது. இதனால் கலர் மாற்றுவது, எபெக்ட்டுக்களை மாற்றுவது உள்பட பல விஷயங்களை மிக எளிதில் இதில் செய்யலாம்.

அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!

 ரா தெரபி:

ரா தெரபி:

தொழில்முறை போட்டோகிராபர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு சாப்ட்வேர் தான் இந்த ரா தெரபி. புகைப்படங்கள் உயர் தரங்களுடன் இருக்க வேண்டும் என்றால் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக் மற்றும் லீனக்ஸ் ஆகிய ஓஎஸ்களில் பயன்படுத்தப்படும் இந்த சாப்ட்வேர் கடினமான புகைப்படங்களையும் எளிதில் எடிட் செய்ய உதவுகிறது. எக்ஸ்பிளோஷர், டோனல் கண்ட்ரோல் ஆகியவைகளுடன் எடிட்டிங் செய்ய தனித்தனி டேப் வசதியும் உண்டு. டி.எஸ்.எல்.ஆர் கேமிரா பயன்படுத்துபவர்களுக்கு இந்த சாப்ட்வேர் நிச்சயம் பயனளிக்கும்

Best Mobiles in India

English summary
7cool photoshop alternatives you must try paint : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X