அட நம்புங்க.. வாட்ஸ்ஆப்பில் இல்லாத 6 அம்சங்கள் - அதென்னது.??

உலகளாவிய மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு ஹை எண்ட் உடனடி செய்தி பயன்பாடாக திகழும் ஒரே காரணத்தினால் வாட்ஸ்ஆப்பில் எந்த விதத்திலும் குறைபாடும் இல்லை என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடா

|

வழக்கமாக வாட்ஸ்ஆப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்களை பற்றி தானே தகவல்கள் வெளியாகும், இதென்ன புதிதாக வாட்ஸ்ஆப்பில் இல்லாத அம்சங்கள் என்று குழப்பம் அடைய வேண்டாம்.

உலகளாவிய மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் ஒரு ஹை எண்ட் உடனடி செய்தி பயன்பாடாக திகழும் ஒரே காரணத்தினால் வாட்ஸ்ஆப்பில் எந்த விதத்திலும் குறைபாடும் இல்லை என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. நம்மில் பலருக்கு வாட்ஸ்ஆப் போன்றே பல ஆப்ஸ் இருக்கிறது என்றே தெரியாது.

ஆனால், உண்மை என்னவென்றால் வாட்ஸ்ஆப்பிற்கு பலமாக ஈடு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு குறையே இல்லை. அப்படியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வாட்ஸ்ஆப்பை விட ஒரு படி மேல் சுவாரசியமான அம்சங்கள் கொண்ட ஒரு ஆப் தான் - டெலிகிராம்.

நகலெடுத்தது மட்டுமல்லாமல்

நகலெடுத்தது மட்டுமல்லாமல்

ஆனால், வாட்ஸ்ஆப் ஆனது ஸ்னாப்சாட் ஆப்பை நகலெடுத்தது மட்டுமல்லாமல், அதன் மற்றும் டெலிகிராம் ஆப் செயல்பாடுகள் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.சரி இப்போது வாட்ஸ் ஆப் கொண்டிருக்காத என்னென்ன அம்சங்களை டெலிகிராம் ஆப் கொண்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.

1. மல்டிபிள் பிளாட்பார்ம்

1. மல்டிபிள் பிளாட்பார்ம்

டெலிகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் இடையே இருக்கும் முதல் வேறுபாடு இரண்டு பயன்பாடுகளும் ஆதரிக்கும் தளங்களில் உள்ளது. டெலிகிராம் ஆனது ஆண்ட்ராய்டு, ஐபோன்/ ஐபாட், விண்டோஸ், வெப் வெர்ஷன், மேக் ஓஎஸ், பிசி/மேக்/லினக்ஸ் இயங்கும். மறுபக்கம் வாட்ஸ்ஆப் ஆனது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், வெப் வெர்ஷன், மேக் மற்றும் விண்டோஸ் பிசி ஆகிய தளங்களில் இயங்கும்.

2. வெப் வெர்ஷன்

2. வெப் வெர்ஷன்

டெலிகிராம் ஆப்பை பொறுத்தம்மட்டில் உலாவி மற்றும் மொபைலின் சுயாதீனமான பதிப்பை ஆதரிக்கிறது. இதன் வெப் வெர்ஷனை பயன்படுத்த உங்கள் மொபைலை பயன்படுத்த தேவையில்லை. மறுபக்கம் வாட்ஸ்ஆப்பும் வெப் வெர்ஷன் கொண்டுள்ளது.எனினும், அது ஒரு ஹெவியான ஒன்றாக உள்ளது. அசேதமயம் உங்கள் கணினி அல்லது மடிக்கணினி இணைய பதிப்பு இணைக்க, நீங்கள் உங்கள் மொபைல் மூலம் அதை செய்ய வேண்டும் மற்றும் அது ஒரு இணைய உலாவி உள்ள வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் போது உங்கள் மொபைலை நீங்கள் அருகில் வைத்திருக்க வேண்டும்.

3. தரவு பயன்பாடு

3. தரவு பயன்பாடு

ஒரு ஆய்வின் படி, டெலிகிராம் ஆனது வ ஆட்ஸ் ஆப் தரவுகளில் கிட்டத்தட்ட பாதி தான் செலவழிக்கிறது. அதை நிரூபிக்க, ஆராய்ச்சி குழு ஒரே நேரத்தில் செய்திகளை அனுப்பும் மற்றும் ஒரு மணி நேரத்தில் தரவு நுகர்வு அளவிடும் என பல்வேறு உடனடி செய்தி பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது. வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்பாட்டை அதிக தரவு பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.

4. க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ்

4. க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ்

டெலிகிராம் பயன்பாட்டில், ஒரு குழுவில் 5000 பங்கேற்பாளர்களை இணைக்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப்பில் 256 நபர்களை மட்டுமே குழுக்களில் இணைக்கலாம்.

5. பேமன்ட்ஸ்

5. பேமன்ட்ஸ்

டெலிகிராம் பயன்பாடு பயனர்களை பணம் அனுப்ப அனுமதிக்கிறது, இது ஏற்கனவே பேஸ்புக் மெஸஞ்சர் போன்ற மற்ற பயன்பாடுகளை அனுமதிக்கும் செயல்பாடு போன்றது தான். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பேமன்ட்ஸ் சார்ந்த பணிகளில் இன்னமும் ஈடுபட்டு வருகிறது.

6. சாட்ஸ் தனியுரிமை

6. சாட்ஸ் தனியுரிமை

டெலிகிராம் இரகசிய அரட்டைகளை உருவாக்க அனுமதிக்கிறது, ஏனெனில் டெலிகிராம் ஒரு படி மேலே சென்று யாராவது உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் பயன்பாட்டை விழிப்பூட்டுகிறது. இதில் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யாருக்காவது செய்தி அனுப்ப விரும்பினால், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும் போது அந்த நேரத்தில் நீங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்பை தேடலாம் மற்றும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பற்றிய தனியுரிமை அம்சங்கள் பற்றிய விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

Best Mobiles in India

English summary
Let us see the differences between Telegram and WhatsApp now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X