6 புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் : உங்களுக்கு எதெல்லாம் தெரியும்.?

Written By:

இன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆப் என்று கூறியதுமே சட்டென்று நமக்கு உதயமாகும் வாட்ஸ்ஆப் ஆனது மிக நன்றாக அறியப்பட்ட ஒரு செய்தி பரிமாற்ற பயன்பாடாகும். அப்படியாக நன்கு அறியப்பட்ட வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு க்ராஸ் பிளாட்பார்ம் இன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆப் ஆகும் மற்றும் உலகம் முழுவதும் மேற்பட்ட பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் முதல் நிகழ் நேர தொடர்பு என எல்லாமே தினசரி அடிப்படையில் பகிர்ந்து கொள்ள உதவும் வாட்ஸ் ஆப் ஆனது சமீப காலமாக பல அப்டேட்களை பெற்றுள்ளது.

நம்மில் பெரும்பாலானோர்கள் வாட்ஸ்ஆப்பை உரையாடல்கள் மற்றும் ஊடக பகிர்விற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வாட்ஸ்ஆப் தன்னுள் இன்னும் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது. அவைகள் என்னென்னவென்று அறிய வேண்டுமா.? இதோ வாட்ஸ்ஆப் கொண்டுள்ள 6 புதிய அம்சங்கள் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கால் பேக்

கால் பேக்

பெரும்பாலும் நாம் வாட்ஸ்ஆப் அழைப்புகளை தவற விடுகின்றோம் அதற்காக வெளியான அம்சம் தான் கால் பேக் அம்சம். வி2.16.189, வாட்ஸ்ஆப்பில் ஒரு 'கால் பேக்' என்ற விருப்பம் ஒரு அழைப்பு தவற விடப்பட்ட பின்னர் திரையில் தோன்றும்.

அனிமேஷன் கிப்

அனிமேஷன் கிப்

நண்பர்களுடன் படங்களை பகிர்வது வேடிக்கையான விடயமாகும் அதுவே அனிமேஷன் கிப் (GIF) என்றால் இன்னும் அதிக வேடிக்கையாக இருக்கும். அதை நிகழ்த்த நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படும் ஒரு கிப் (GIF) பைல்களை தேர்வு செய்து யாருக்கு அல்லது எந்த க்ரூப்பிற்கு அனுப்ப விரும்புகிறீர்கள் அதை தேர்வு செய்ய வேண்டியது தான்.

கிப் தேடல் ஆதரவு

கிப் தேடல் ஆதரவு

வாட்ஸ்ஆப்பில் நீங்கள் கிப் பைல்களை ஷேர் மட்டுமல்ல நீங்கள் நேரடியாக அவைகளை கண்டுபிடிக்கவும் முடியும். வாட்ஸ்ஆப்பின் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் கிப் தேடல் ஆதரவு தொடங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தல் பிறகு, பயனர்கள் பயன்பாட்டின் உள்ளேயே பல வகையான கிப்களை தேடலாம்.

பெர்சனலைஸ்

பெர்சனலைஸ்

வாட்ஸ்ஆப்பில் உள்ள கேமரா கொண்டு எடுக்கும் புகைப்படங்களில் நீங்கள் எமோஜிக்கள் போன்றவைகளை இணைத்து அதிக அளவிலான பெர்சனலைஸ் செய்து கொள்ளலாம், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாட்ஸ்ஆப்பின் பில்ட் இந்த கேமரா கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியது மட்டும் தான்.

சென்ட்

சென்ட்

ஆப்பிள் ஐபோன் பயனர்கள் இப்போது மோசமான அல்லது இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் கூட மெசேஜ்களை சென்ட் செய்ய முடியும். இதை 'சென்ட்' என்றே அழைக்கப்படுகிறது.

ஊடக கோப்பு

ஊடக கோப்பு

சமீபத்திய அப்டேட்டின்படி ஒரே நேரத்தில் மற்ற பயனர்களுடன் அதிகபட்சமாக 30 ஊடக கோப்புகளை ஷேர் செய்து கொள்ள முடியும் முன்பு ஒரு நேரத்தில் பகிரக்கூடிய ஊடக கோப்புகள் அதிகப்படியாக 10 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

தெரியுமா.? வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
6 'new features' of WhatsApp. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot