விரைவில் :வாட்ஸ்அப்பில் 6 புதிய சிறப்பம்சங்கள்.!
இனிவரும் அப்டேட் பொறுத்தவரை மெசேஜை திரும்பபெற்றுக்கொள்ளும் வசதி இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர், மேலும் செய்திகள், தகவல்கள், புகைப்படம், வீடியோ போன்ற அனைத்திற்க்கும் பயன்படும் வகையில் வாட்ஸ்அப் உள்ளது. மேலும் தற்போது வாட்ஸஅப்பில் புதிய தொழில்நுட்பங்களை சேர்க்கும்
வண்ணம் பல முயற்சிகளை செய்துவருகிறது.
பொதுவாக வாட்ஸ்அப் மெசேஜ், வாய்ஸ் கால் போன்றவை தான் அதிகம்பயன்படுகிறது, தற்போது புதிய அப்டேட் கொண்டுவருகிறது அந்நிறுவனம் இந்த அப்டேட் பொறுத்தவரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா வெர்ஷன்:
தற்போது அதிரடியாக வாட்ஸ்அப் பகுதியில் புதிய தொழில்நுட்பங்களை சேர்ப்பதற்காக பீட்டா வெர்ஷன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

யூடியூப்:
வாட்ஸ்அப் பொறுத்தவரை நேரடியாக யூடியூப் வீடியோவை பார்க்க வசதி செய்யப்படுகிறது, இனிமேல் யூடியூப் லிங்க் பயன்படுத்தும் அவசியம் இல்லை.

மெசேஜ்:
இனிவரும் அப்டேட் பொறுத்தவரை மெசேஜை திரும்பபெற்றுக்கொள்ளும் வசதி இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுபிஐ:
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிமாற்றங்கள் செய்து வசதி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு யுபிஐ அமைப்பை ஒருங்கினைக்க மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.

வாட்ஸ்அப் எண்:
வாட்ஸ்அப் எண்ணை வேறொரு எண்ணுக்கு மாற்றும்போது, காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஒரு செயல்திட்டம் கொண்டுவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லொகேஷன்:
லைவ் லொகேஷன் என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் கொண்டுவருகிறது.இதன் மூலம் பயனர்கள் தங்களுடைய இருப்பிடத்தை லைவ்வாக ஷேர் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








