வாட்ஸ் அப்-இல் பாதுகாப்பாக இருக்க உதவும் ஐந்து முக்கிய விஷயங்கள்

By Siva
|

உலகின் ஒரு பில்லியன் பயனாளிகள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் ஒருசில மிரட்டல்களும் இதில் உள்ளன.

வாட்ஸ் அப்-இல் பாதுகாப்பாக இருக்க உதவும் ஐந்து முக்கிய விஷயங்கள்

உலகின் தலை சிறந்த ஹேக்கர்கள் வாட்ஸ் அப்-இல் உள்ள நமது பெர்சனல் விபரங்களையும் நாம் பதிவு செய்யும் பதிவுகளையும் ஹேக் செய்துவிடுவதால் சில சமயம் மிரட்டலுக்கும் தொந்தரவுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் வாட்ஸ் அப்-இல் நாம் செய்யும் பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய டேட்டாக்களை ஒருசில எளிய வழிமுறையின்படி பாதுகாத்து கொள்ளலாம். அவை என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

இந்த விஷயத்தை முதலில் செய்யுங்கள்:

இந்த விஷயத்தை முதலில் செய்யுங்கள்:

வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவருக்கும் அதில் லாஸ்ட் சீன் (கடைசியாக வாட்ஸ் அப்பில் இருந்த நேரம்) என்றொரு ஆப்சன் இருக்கின்றது என்பது அறிந்ததே. இதை அனைவரும் பார்க்கும் வகையில் அதாவது 'Everyone' என்ற ஆப்சனை வைக்காமல் உங்கள் போனில் உள்ள காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் வைத்தால் உங்கள் வாட்ஸ் அப் கணக்கின் பாதுகாப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்தால் உங்களது புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ் உள்பட அனைத்துமே உங்கள் போன் காண்டாக்ட்டில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

யார் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்:

யார் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்:

உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கின் மூலம் யார் யார் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் கையில்தான் உள்ளது. ஒருவேளை நீங்கள் விரும்பாத நபர் உங்கள் வாட்ஸ் அப்புக்கு வந்தால் உடனே அவரை பிளாக் செய்துவிடுங்கள்

பரிமாற்றத்தில் கவனம் வேண்டும்:

பரிமாற்றத்தில் கவனம் வேண்டும்:

உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஒரு தகவலை அல்லது டேட்டாவை அல்லது புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும்போது ஒருமுறைக்கு இருமுறை கவனமாக யோசிக்க வேண்டும்.

இதே அலுவலக டாக்குமெண்ட் ஆக இருந்தால் மிகுந்த கவனம் வேண்டும். மேலும் நிறுவனத்தின் முக்கிய, ரகசிய மற்றும் பாதுகாப்பான ஃபைல்களை அனுப்பும்போது, அனுப்பிய பின்னர் அந்த டாக்குமெண்ட்டை நீக்கிவிடுவது நன்று

உங்கள் இன்டர்வியூ மற்றும் வேலையை உறுதி செய்யும் 8 வலைத்தளங்கள்.!

புகார் கொடுப்பது எப்படி?

புகார் கொடுப்பது எப்படி?

ஒருவேளை உங்களது வாட்ஸ் அப் கணக்கை யாராவது டிராக் செய்கிறார்கள் என்ற சந்தேகம் தோன்றினால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றால்: WhatsApp > Menu Button > Settings > About and help > Contact Us சென்று குறிப்பிட்டவரை தொடர்பு கொள்ள வேண்டும்

ஐபோன்கள் என்றால்: WhatsApp > Settings > About and Help > Contact Us சென்று சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்

விண்டோஸ் போன்கள் என்றால்: WhatsApp > more > settings > about > support என்ற ஆப்சனுக்கு சென்று புகார் அளிக்கலாம்

புகார் மற்றும் தடை செய்தல்:

புகார் மற்றும் தடை செய்தல்:

வாட்ஸ் அப்-க்கு ஒரு குறிப்பிட்ட எண் குறித்து எல்லை மீறியதாக புகார் வந்தால் முதலில் புகார் குறித்த தகவலை தெரிவிக்கும். இருப்பினும் எந்தவிதமான நோட்ட்பிகேசனும் அளிக்காமல் புகார் கூறப்பட்ட எண்களை தடை செய்யவும் வாட்ஸ் அப்புக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp is one of the major messaging apps with a huge active users base of around one billion. Having said that, there might be lots of threats to it, as it might get hacked easily by expert hackers around the world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more