ஃபேஸ்புக் அக்கவுண்டை பாதுகாக்க ஐந்து சிறந்த வழிகள்

ஃபேஸ்புக்கை மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து கொள்வது நமது கடமைகளில் ஒன்றாக உள்ளது.

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மில்லியன் கணக்கானோர்களின் அக்கவுண்டை வைத்திருக்கும் நிலையில், நீங்கள் கூகுள் தேடுதளத்தில் இந்த ஃபேஸ்புக்கை தேடினால் அது ஹேக்கிங் அக்கவுண்டுகள் முதல் பலவிதமான தேடுதல் முடிவுகளை தரும்

ஃபேஸ்புக் அக்கவுண்டை பாதுகாக்க ஐந்து சிறந்த வழிகள்

ஹேக்கர்கள் உங்களை குழப்புவதற்காக உங்கள் அக்கவுண்டின் விபரங்கள் குறித்த கேள்வி கேட்டு இமெயில் அனுப்பி அதன் மூலம் ஹேக் செய்வதும், வலிமை இல்லாத பாஸ்வேர்டை கொண்டிருந்தால் மிக எளிதால் அக்கவுண்டை ஹேக் செய்தும் வருகின்றனர்.

எனவே ஃபேஸ்புக்கை மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து கொள்வது நமது கடமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நமது ஃபேஸ்புக் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்து ஐந்து வழிகளை தற்போது பார்ப்போம்

HTTPSஐ எனேபிள் செய்ய வேண்டும்

HTTPSஐ எனேபிள் செய்ய வேண்டும்

சர்வர் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு இடையேயான தொடர்பில் நீங்கள் கண்டிப்பாக HTTPSஐ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஃபேஸ்புக்கிற்கு மட்டுமின்றி அனைத்து இணையதளங்களுக்கும் இதுவே பாதுகாப்பான வழி. ஒருசில பிரெளசர்கள் HTTPS குறித்து ஹைலைட்டாக திரையில் காண்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த HTTPSஐ எனேபிள் செய்ய நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டில் லாக்-இன் செய்து அதன் பின்னர் Account-> Account Settings" செல்ல வேண்டும். அதில் Account Security என்பதை தேர்வு செய்து அதில் உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை செக் செய்து கொள்ளலாம்

இரண்டு ஸ்டெப் வெரிபிகேசன்:

இரண்டு ஸ்டெப் வெரிபிகேசன்:

ஃபேஸ்புக் சமீபத்தில் இரண்டு ஸ்டெப் வெரிபிகேசன் நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்வது மட்டுமின்றி உங்கள் மொபைலுக்கு ஒரு வெரிபிகேசன் கோட் நம்பரை அனுப்பி, அதை பதிவு செய்தால் மட்டுமே உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் உங்களை தவிர வேறு யாரும் உங்கள் அக்கவுண்டை வெரிபிகேசன் கோட் எண் இல்லாமல் ஓப்பன் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

ரூ.39,000க்கு கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன்.!ரூ.39,000க்கு கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன்.!

வலிமையான பாஸ்வேர்டை உருவாக்குங்கள்:

வலிமையான பாஸ்வேர்டை உருவாக்குங்கள்:

நீளமான, வலிமையான பாஸ்வேர்ட் அமைத்திருந்தால் ஹேக்கர் உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்ய அதிக நாட்கள் ஆகும். குறிப்பாக யூசர் நேம், பிறந்த தேதி, மொபைல் எண், செல்ல பெயர் ஆகியவற்றை கொண்டு பாஸ்வேர்ட் அமைக்க வேண்டாம். மேலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை மாற்றி அமைத்து கொள்வதும் பாதுகாப்புக்கான சிறந்த வழிமுறை ஆகும்

 பிரைவசி செட்டிங்கை செக் செய்யுங்கள்:

பிரைவசி செட்டிங்கை செக் செய்யுங்கள்:

செட்டிங் ஷார்ட்கட் சென்று அதில் உள்ள பிரைவைசி ஆப்சனை கிளிக் செய்தால் அதில் மூன்று விதமான ஆப்சன்கள் இருக்கும். அதில் யார் நமது அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார்கள், யார் நம்மை தொடர்பு கொண்டிருந்தார்கள், யார் நமது தகவல்களை பார்த்துள்ளார்கள் என்ற விபரம் இருக்கும்.

இவை அனைத்தும் நமது நண்பர்கள் மட்டுமே இருக்கின்றார்களா? என்பதை செக் செய்து கொள்ளுங்கள் மேலும் நம்முடைய தகவல்களை நம்முடைய நண்பர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் செட்டிங் செய்து கொள்வது மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும்

தேவையில்லாத லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்?

தேவையில்லாத லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்?

ஹெக்கர்கள் பலவிதமான விளம்பரங்கள் என்ற போர்வையில் பல லிங்குகளை அனுப்பி வைப்பார்கள். எந்த ஒரு லிங்க்கும் உங்கள் நன்கு பரிட்சயமாக இருந்தால் மட்டுமே கிளிக் செய்யுங்கள், இல்லாவிட்டால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

ஒருமுறை நீங்கள் ஹேக்கர்களின் லிங்க்கை கிளிக் செய்துவிட்டால் அது உங்களை தவறான இணையதளத்திற்கு அழைத்து செல்வதோடு உங்களது பர்சனல் விபரங்களை மிக எளிதில் கைப்பற்ற ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அதேபோல் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is one of the major social networks with millions of account in it. If you search on the Internet, it will show you various ways to hack the account. Today, we are going to tell 5 ways of keeping your account safe and sound.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X