இந்த ஐந்து செயலிகள் உங்கள் ஸ்மார்போனில் கண்டிப்பாக தேவை

மழையில் நனையாமல், வீட்டில் இருந்தபடியே நீங்கள் நினைத்ததை சாப்பிட உதவும் இந்த செயலிகள் குறித்து தற்போது பார்ப்போமா!

By Siva
|

மழைக் காலம் ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த நேரத்தில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை இருக்கலாம். இந்த நேரத்தில் சூடாக ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கும், காபி போன்ற பானங்கள் அருந்துவதற்கும் வெளியே செல்லாமல் கிடைப்பதற்கு என்றே ஒருசில செயலிகள் நமக்கு உதவுகின்றன.

இந்த ஐந்து செயலிகள் உங்கள் ஸ்மார்போனில் கண்டிப்பாக தேவை

மழையில் நனையாமல், வீட்டில் இருந்தபடியே நீங்கள் நினைத்ததை சாப்பிட உதவும் இந்த செயலிகள் குறித்து தற்போது பார்ப்போமா!

உபேர் ஈட்ஸ் (UberEATS)

உபேர் ஈட்ஸ் (UberEATS)

சூடான பஜ்ஜி மற்றும் மசாலா டீ சாப்பிட்டால் இந்த மழை காலத்திற்கு இதமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் மழையில் நனைந்து சென்று வாங்க வேண்டுமே என்ற கவலையா? கவலையை விடுங்கள், உங்களுக்கு இருக்கவே இருக்கின்றது உபேர் ஈட்ஸ். உங்களுக்கு தேவையான பஜ்ஜி சொஜ்ஜி வகைகளும், சூடான காபி, டீ போன்ற பானங்களும் குறித்த நேரத்தில் விரைவாக அளித்து சேவை செய்கிறது இந்த உபேர் ஈட்ஸ்

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

குரோஃபர்ஸ் (Groffers)

குரோஃபர்ஸ் (Groffers)

மழை காலத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் ஸ்பெஷல் ஐட்டம் செய்து சாப்பிட விருப்பமா? அப்படியென்றால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க மழையில் நனைந்து கொண்டு எப்படி செல்வது? அந்த கவலை வேண்டாம். இதோ அதற்காகத்தான் இருக்கின்றது குரோஃபர்ஸ்.

நீங்கள் மழையில் நனைந்து கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்று வாங்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் இந்த செயலி மூலம் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும். குறித்த நேரத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உங்கள் வீடு தேடி வந்து உங்களை மழையில் இருந்து காப்பாற்றுகிறது.

எனவே உங்களுக்கு தேவையான பொருட்களை இந்த செயலி மூலம் உடனே தேர்வு செய்யுங்கள், அந்த பொருட்களை எந்த இடத்தில் எந்த நாளில் எந்த நிமிடத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டால் போதும். உங்கள் வேலை முடிந்தது. பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும்

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

அர்பன் கிளாப் (Urban Clap)

அர்பன் கிளாப் (Urban Clap)

மழைக்காலத்தில் உணவு மட்டுமா முக்கியம். இன்ன பிற தேவைகளுக்கும் மழையில் நனைந்து செல்ல வேண்டுமா? குறிப்பாக மேக்கப் செய்ய வெளியே சென்றே ஆகவேண்டுமா? தேவையில்லை.

இந்த செயலி மூலம் தகவல் தந்தால் உடனே உங்கள் வீட்டை தேடி வரும் மேக்கப் சாதனங்கள் மற்றும் மேக்கப்மேன்கள் இந்த செயலியில் மணமகள் அலங்காரம், மசாஜ், போன்ற எந்த தேவையாக இருந்தாலும் உங்கள் வீட்டில் இருந்தபடியே மழையை ரசித்து கொண்டே உங்கள் வேலையை முடித்து கொள்ளலாம்

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 நைக்கா (Nykaa)

நைக்கா (Nykaa)

வெளியே அவசரமாக கிளம்ப வேண்டிய நிலை. மேக்கப் போடும்போது திடீரென உங்கள் கண்மை பென்சில் காலியாகிவிட்டால் என்ன செய்வது? இதுபோன்ற தர்ம சங்கடங்களை தவிர்க்கும் செயலி தான் இந்த நைக்கா. இந்த செயலியில் உங்களுக்கு தேவையான மேக்கப் சாதனங்களை ஆர்டர் செய்தால் டோர் டெலிவரியில் கிடைக்கும். குறிப்பாக மொத்தமாக ஆர்டர் செய்து அதனால் கிடைக்கும் சலுகைகளின் பயன்களையும் அனுபவிக்கலாம்

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பிராக்டோ (Practo)

பிராக்டோ (Practo)

மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் வருவது ஜலதோஷம் மற்றும் அதனால் ஏற்படும் தலைவலி. திங்கட்கிழமை காலையில் தூங்கி எழுந்ததும் ஜலதோஷம் மற்றும் தலைவலி வந்தால் உங்களுடைய மொத்த வேலையும் கெட்டுவிடும்.

எனவே மழை காரணமாக ஏற்படும் சின்ன சின்ன மருத்துவ தேவைகளுக்கு டாக்டர் தேவையா? உடனடியாக இந்த செயலியை ஆன் செய்தால் போதும். உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிளினிக், டாக்டர் மற்றும் மெடிக்கல் ஸ்டோர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும்

டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Read more about:
English summary
5 must-have smartphone apps this monsoon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X