வாட்ஸ்ஆப் க்ரூப்பின் ஒவ்வொரு மெம்பரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.!

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், சமீப காலமாக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.

|

பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், சமீப காலமாக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாக, மொபைல் சேமிப்பகத்தில்இருந்து டெலிட் செய்யப்பட்ட பின்னரும் கூட வாட்ஸ்ஆப் வழியாக மறுமுறை டவுன்லோட் செய்யும் அம்சம் திகழ்கிறது.

வாட்ஸ்ஆப் க்ரூப் மெம்பர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 டிப்ஸ்.!

அதற்கு அடுத்தபடியாக டபுள் ஸ்டிக்கர்ஸ் மற்றும் லோகேஷன் ஸ்டிக்கர்ஸ் உட்பட பல புதிய அம்சங்கள் அப்டேட் வரிசையில் உள்ள நிலைப்பாட்டில், ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் இருந்தும், நம்மில் பெரும்பாலானோர்களுக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் க்ரூப் அம்சங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் காணவுள்ளோம். இந்த ஐந்து வாட்ஸ்ஆப் க்ரூப் அம்சங்களையும் ஒவ்வொரு வாட்ஸ்ஆப் க்ரூப் மெம்பரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றே கூறலாம்.

க்ரூப் அட்மின் டிஸ்மிஸல் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

க்ரூப் அட்மின் டிஸ்மிஸல் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் பதிப்பில், அட்மின்களை டிஸ்மிஸ் செய்ய உதவும் க்ரூப் அட்மின் டிஸ்மிஸல் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் பல மெம்பர்களை அட்மின்களாக நியமிக்கலாம். அவருள் ஒருவரை நீக்க வேண்டும் எனில், அவரை ஒட்டுமொத்தமாக க்ரூப்பில் இருந்து நீக்க வேண்டும். அப்போது தான் அவரின் அட்மின் பதவி பறிபோகும். பின்னர் மீண்டும் அவரை மெம்பராக இணைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த சமீபத்திய அப்டேட்டின் படி, ஒருவரை க்ரூப்பை விட்டு நீக்காமலேயே அவரின் அட்மின் பொறுப்பை விடுவித்துக் கொள்ளலாம். இது ஐஓஎஸ் பதிப்பில் மட்டுமின்றி ஆண்ட்ராய்டு பதிப்பிலும் டிஸ்மிஸ் அஸ் அட்மின் என்கிற பெயரில் உருட்டப்பட்டு வருகிறது.

க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

கடந்த பிப்ரவரியில் அறிமுகமான இந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் பெயர்களுடன், க்ரூப்பின் இதர முழு விளக்கங்களையும் சேர்க்க உதவுகிறது. இந்த க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்ஸ் ஆனது க்ரூப் பெயரின் கீழே தோன்றும். இந்த அம்சம் 'குரூப் இன்பாக்ஸின்' கீழ் கிடைக்கிறது. இந்த அம்சத்தினை எல்லா மெம்பர்களாலும் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது அட்மின்களுக்கு மட்டு தான் என்று மட்டுப்படுத்தப்படவில்லை.

க்ரூப் மென்ஷன்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

க்ரூப் மென்ஷன்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

இந்த அம்சம் பெரும்பாலும் நம் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஏனெனில் இது கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. வாட்ஸ்ஆப் க்ரூப்பில் யார் யாருடன் பேச விரும்புகிறார் மற்றும் யார் எவரின் மெசேஜிற்கு ரிப்ளை செய்துள்ளார் போன்றே பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் க்ரூப் மெஷன்ஸ் அம்சம் அறிமுகமானது. இதை @ என்கிற குறியீட்டை பயன்படுத்தி குறிப்பிட்ட நபரின் பெயரை உள்ளிடுவதின் வழியாக, அது குறிப்பிட்ட நபருக்கான மெசேஜ் என்பதை எளிமையாக வெளிப்படுத்த முடிந்தது.

வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் அம்சம் ஆனது இன்னமு பரிசோதனை தளமான பீட்டா பதிப்பில் உள்ளது தான், இருந்தாலும் கூட அனைத்து பயனர்களுக்கும் தற்போது அணுக கிடைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்ஆப் க்ரூப்பிற்குள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அம்சம் என்பது பலருக்கும் தெரியாது. ஆண்ட்ராய்டில் 'அட்டாச் பாயில் என்பதின் கீழும், ஐஓஎஸ்-ல் '+' ஐகானின் கீழும் இது அணுக கிடைக்கும். அதனுள் கட்டண விருப்பங்கள் இருக்கும். அதில் நீங்கள் பணம் அனுப்பு விரும்பும் ஒரு க்ரூப் மெம்பரை தேர்ந்தெடுக்கலாம். இந்த இடத்தில, ஒரே நேரத்தில் பல மெம்பர்களை தேர்வு செய்யும் திறன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
க்ரூப் கால்ஸ் (பீட்டா)

க்ரூப் கால்ஸ் (பீட்டா)

வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ வாய்ஸ் அம்சம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம், இதே அம்சம் ஒரே நேரத்தில் பல க்ரூப் மெம்பர்களுக்கு வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பு நிகழ்த்த உதவும் வண்ணம் வாட்ஸ்ஆப் க்ரூப்பிலும் இணைக்கப்பட உள்ளது. தற்போது வரை ஒரு நேரத்தில் ஒரே ஒரு நபருடன் மட்டும் தான் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பை நிகழ்த்தமுடியும் என்பதும், இது பரிசோதனை கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5 important tips and tricks every WhatsApp Group user should know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X