ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் செய்ய உதவும் டாப் 5 செயலிகள்

|

தகவல் பரிமாற்றம் செய்ய டெக்ஸ்டிங் தான் முக்கியமானதாக இருக்கும் நிலையில், இந்த சேவையை வழங்கும் பல்வேறு செயலிகள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன. இவற்றில் டாப் 5 பட்டியலை பார்ப்போம்.

ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் செய்ய உதவும் டாப் 5 செயலிகள்

ஸ்மார்ட்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய டெக்ஸ்டிங் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் என பல்வேறு சேவைகள் பழைய எஸ்எம்எஸ் வழிமுறைகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது.

வழக்கமான டெக்ஸ்டிங் செயலிகளில் உள்ள பழைய அம்சங்கள் போரடித்து விட்டதா? இங்கு நீங்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

கோ எஸ்எம்எஸ் ப்ரோ

கோ எஸ்எம்எஸ் ப்ரோ

இந்த செயலி வழக்கமான அன்லிமிட்டெட் டெக்ஸ்டிங் வசதிகளை வழங்குகிறது. இதுதவிர இந்த செயலியில் பல்வேறு தீம்களும், ஸ்டிக்கர்களும் வழங்கப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தீம்கள் வித்தியாச தோற்றத்தை வழங்குகிறது. இதன் டிலே டூ சென்ட் அம்சம் அனுப்பிய மெசேஜ்களை திருத்திக் கொள்ள வழி செய்கிறது.

ஹேன்ட்சென்ட் நெக்ஸ்ட் எஸ்எம்எஸ்

ஹேன்ட்சென்ட் நெக்ஸ்ட் எஸ்எம்எஸ்

இந்த செயலியில் அதிகப்படியான கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் யூசர் இன்டர்ஃபேஸ் மிக எளிமையாகவும், பல்வேறு பண்டிகைகளின் இ-கார்டுகளை வழங்குகிறது.

இத்துடன் பிறந்தநாள் டெக்ஸ்ட் மற்றும் ஊக்கமளிக்கும் மெசேஜ்தளையும் வழங்குகிறது. இந்த செயலியில் பல்வேறு தீம்களும் டெக்ஸ்டிக் செய்ய வித்தியாச அனுபவத்தை வழங்குகிறது.

மை எஸ்எம்எஸ்

மை எஸ்எம்எஸ்

இந்த செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு, விண்டோஸ், மேக் மற்றும் வெப் பிரவுசர்களில் கிடைக்கிறது.

இதனால் கம்ப்யூட்டர் அல்லது டேப்லெட் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு போன் நம்பரை பயன்படுத்தி அனுப்பலாம். இத்துடன் க்ரூப் மெசேஜிங், எம்எம்எஸ், மெசேஜ் ஷெட்யூலிங், மெசேஜ் எக்ஸ்போர்ட் மற்றும் எவர்நோட், டிராப் பாக்ஸ் மற்றும் கூகுள் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட் N வகை ஸ்மார்ட்போன்கள்நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட் N வகை ஸ்மார்ட்போன்கள்

சிக்னல் பிரைவேட் மெசென்ஜர்

சிக்னல் பிரைவேட் மெசென்ஜர்

பாதுகாப்பு அவசியம் என்பவர்களுக்கு பிரைவேட் மெசென்ஜர் சிறப்பான செயலியாக இருக்கும். இந்த செயலி உங்களது மொபைல் போன் நம்பருடன் இணைத்து விட்டால், தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முடியும். இத்துடன் டெக்ஸ்ட் மற்றும் அனைத்து அட்டாச்மென்ட்களும் என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

சோம்ப் எஸ்எம்எஸ்

சோம்ப் எஸ்எம்எஸ்

இந்த செயலி நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு மெசேஜிங் செய்வோருக்கு ஏற்ற செயலியாக பல்வேறு எமோஜி, பாஸ்கோடு ஆப் லாக், மெசேஜ் லாக்ஸ், அதிக பாதுகாப்பு வழங்கும் ஆப்ஷன்கள், பிளாக்லிஸ்ட், குவிக் ரிப்ளை பாப்அப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Texting is one of the most common ways of communication these days. Even though we have Whatsapp and Facebook, some time we use the good old SMS to communication.......

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X