விண்டோஸில் ஸ்கைப்-பிற்கு 'ஆப்பு' வைக்க கூடிய 5 மாற்றுகள்

|

விஓஐபி, வீடியோ சாட்டிங் அல்லது வீடியோ கருத்தரங்கம் செய்வதற்கு பயன்படும் ஸ்கைப்-பிற்கு பதிலாக, மற்றொரு மாற்றை தேடுபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு உதவும் சிறந்த தேர்வுகள் சிலவற்றை கீழே அளிக்கிறோம்.

விண்டோஸில் ஸ்கைப்-பிற்கு 'ஆப்பு' வைக்க கூடிய 5 மாற்றுகள்

வீடியோ சாட்டிங் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவிற்கு வருவது ஸ்கைப் தான். வீடியோ அழைப்புகளுக்கான ஒரு பிரபலமான தளமாக ஸ்கைப் விளங்குகிறது. இந்நிலையில் ஸ்டீஃபன் காந்தக் என்ற ஒரு ஆராய்ச்சியாளர், ஸ்கைப்பில் உள்ள குறைபாடுகளைக் குறித்து சமீபத்தில் கண்டறிந்தார். மேலும் இதை குறித்து அவர் பொதுவாகவும் வெளியிட்டார். அப்படியென்றால் இப்போது நாம் என்ன செய்வது?

மேலும், எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தற்போது அது சிறப்பானது அல்ல என்பதோடு, பாதுகாப்பானதும் அல்ல என்று தெரியவந்துள்ளது. இதனால் விண்டோஸில் ஸ்கைப்பிற்கு பதிலாக மாற்று வழியை கண்டறிய வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்து உள்ளோம். எனவே ஸ்கைப்பிற்கு மாற்றாக விளங்கும் 5 வழிகளை கீழே அளித்து உள்ளோம்.

கூகுள் ஹேங்அவுட்ஸ்

கூகுள் ஹேங்அவுட்ஸ்

ஸ்கைப்பில் காணக் கிடைக்கும் பெரும்பாலான அம்சங்கள் கூகுள் ஹேங்அவுட்ஸிலும் காணப்படுகிறது. இதில் ஒரு வீடியோ அழைப்பை செய்யும் வகையில், ஒரு நபரின் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் நம்பரை பயன்படுத்தி தேட முடியும். வீடியோ அழைப்பை தவிர, செய்திகள் மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் மேற்கொள்ளும் தொடர்புகளுக்கும், கூகுள் ஹேங்அவுட்ஸ் உதவுகிறது.

10 பேர் வரை உள்ள ஒரு குழு கலந்துரையாடலை கூட இதில் நீங்கள் செய்ய முடியும். உங்களுக்கு ஆப்பிள் சாதனத்தை பயன்படுத்தாத நண்பர்கள் இருக்கும் பட்சத்தில், தொடர்பு கொள்ள கூகுள் ஹேங்அவுட்ஸ் ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 ஓவூ

ஓவூ

ஓவூ, அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றாலும், குழு கருத்தரங்க அழைப்பு செய்ய ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. ஒரு இலவச குழு கருத்தரங்க அழைப்பில் 12 பேர் வரை இணைக்கக் கூடிய அதிகபட்ச வரம்பை, இது பெற்றுள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற அம்சங்கள் காணப்படுகின்றன.

இதில் வீடியோ தரத்துடன் கூடிய ஆடியோ தரமும் மிகச் சிறப்பாக உள்ளது. இதில் வீடியோ அழைப்பை பதிவு செய்து, வீடியோ மெசேஜ்ஜாக அனுப்பவும் முடிகிறது. மேலும், நீங்கள் உங்கள் நண்பர்கள் உடன் திரையை பகிர்ந்து கொண்டு, ஒரு யூடியூப் வீடியோவை இருவரும் ஒருங்கே கண்டுக் களிக்க முடியும்! இதில் சில இன்-ஆப் வாங்க வேண்டியது இருந்தாலும், அடிப்படை தேவைகள் அனைத்தும் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

லைன்

லைன்

ஒரு மெசேஜ்ஜிங் அப்ளிகேஷனாக லைன் பிரபலமடைந்து வந்தாலும், இலவச வீடியோ அழைப்புகளைச் செய்ய இது ஒரு கச்சிதமாக அப்ளிகேஷன் என்பது ஒரு சிலருக்கும் மட்டுமே தெரியும். இதன்மூலம் ஒரு குழுவிற்கு இலவச வாய்ஸ் அழைப்புகள் மற்றும் உரை செய்திகளை அனுப்ப முடியும். எல்லா ஸ்மார்ட்போன் சாதனங்களிலும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கப் பெறுகிறது.

இந்த அப்ளிகேஷன் வழங்கும் ஆக்கப்பூர்வமான அனிமேடேட் ஸ்டிக்கர்கள் மூலம் நீங்கள் உரையாடலை நிகழ்த்த முடியும். ஸ்கைப்பில் இருப்பதை விட, லைனில் அதிகளவிலான அம்சங்கள் காணப்படுகின்றன. லைன் மூலம் நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை கூட உங்களால் அனுப்ப முடியும். மேலும், ஒரு சிறிய விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் ஒரு எளிய சர்வதேச அழைப்பை இலவசமாக செய்ய முடியும்.

அறிமுகம்: மிரட்டும் அம்சங்களுடன் 2018-ஆம் ஆண்டை ஆளப்போகும் 5 நோக்கியா கருவிகள்.!

டொக்ஸ்

டொக்ஸ்

ஸ்கைப்பிற்கு பதிலாக ஒரு பாதுகாப்பான மாற்றை நீங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால், டொக்ஸ் அப்ளிகேஷனை பயன்படுத்த முயற்சிக்கலாம். இது ஒரு பொது மூல கருவி ஆகும். இதை யாரும் வேவு பார்க்கவோ அல்லது கண்காணிக்கவோ முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு எளிய பயனர்-இடைமுகத்தை பெற்றுள்ளது. இது கீழ்க்காணும் இரு பதிப்புகளில் அளிக்கப்படுகிறது:

1. க்யூடொக்ஸ், ஒரு முழுமையான அம்சங்களைக் கொண்ட அப்ளிகேஷன்

2. யூடொக்ஸ், எளிமையான அமைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டது

விளம்பரங்களைப் பார்த்து எரிச்சலடைய வேண்டிய நிலை இல்லாமல், இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும். டொக்ஸ் மூலம் அளிக்கப்படும் எல்லா விதமான தொடர்புகளும் பாதுகாப்பானவை. நீங்கள் பகிர விரும்பும் தகவல் மற்றும் கோப்புகளுக்கு என எந்த விதமான அளவும் நிர்ணயிக்கப்படவில்லை.

 வைப்பர்

வைப்பர்

உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போனில் வைப்பரை பயன்படுத்த முடியும். வீடியோ அழைப்பு, குழு சாட்டிங், ஆடியோ அழைப்பு மற்றும் உரைச் செய்தி என்று எல்லா வித தரமான வசதிகளையும் இதில் பெற முடிகிறது. பொது சம்பாஷனைகளைப் பிரபலப்படுத்துவதோடு, பிரபலமான இணையதளங்களுடன் உங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி தர, வைப்பர் உதவுகிறது.

மேலும், சிலரது அழைப்பு அல்லது செய்திகளின் மூலம் நீங்கள் களைத்து போகும் நேரத்தில், இதில் கேம்களை விளையாட முடியும். ஸ்கைப்பிற்கு இருக்கும் மாற்றுகளில் இது ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
முடிவரை

முடிவரை

ஸ்கைப்பிற்கு மாற்றாக விளங்கும் மேற்கூறிய ஏதாவது ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி, பாதுகாப்பான தொடர்பை நீங்கள் பெற முடியும். இதில் உங்களுக்கு பிடித்த ஸ்கைப் மாற்றை எது என்று அறிய விரும்புகிறோம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
If you've ever made a video call, it was probably via Skype. But just because it's popular doesn't mean it's the best. And more importantly, it's not the most secure, either. If you are looking for an alternative to Skype for VoIP, video chat or video conferencing, there are some of the best options available.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X