கேம்ஸ்கள் விளையாட, வாங்க உதவும் 5 முக்கிய இணையதளங்கள்

|

கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் கேம் விளையாடுவது என்றால் இன்றைய இளைஞர்களுக்கு நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்கில் ஏன் நாட்கணக்கில் விளையாடும் நபர்கள் கூட ஒருசிலர் உண்டு. ஆனால் ஓய்வு நேரத்தில் விளையாடும் மிகக்குறைந்த நேரத்தில் விளையாடும் கேம்ஸ்களும் ஆன்லைனில் உண்டு. குறைந்த நேரத்தில் விளையாடும் கேம் என்றாலும் சந்தோஷமாக, ஆர்வமாக விளையாடும் கேம்ஸ்களூம் உண்டு. இந்த மாதிரி ஏராளமான கேம்ஸ்கள் உள்ளது

கேம்ஸ்கள் விளையாட, வாங்க உதவும் 5 முக்கிய இணையதளங்கள்

ஏராளமான இணையதளங்கள் நீங்கள் விரும்பிய சில கேம்ஸ்களை சொந்தமாக வாங்குவதற்கும் அனுமதிக்கின்றன. அவற்றை நீங்கள் வாங்கி விளையாடி மகிழலாம். அதேபோல் நீங்கள் வாங்கிய கேம்ஸ்களை விற்கவும் செய்யலாம். இதற்காக பல இணையதளங்கள் வாங்கவும் விற்கவும் உதவி செய்யும் வகையில் உள்ளது. மேலும் ஒருசில இணையதளங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை பெற்றுக்கொண்டு கேம்ஸ்களை வாடகைக்கும் தரும். அந்த கட்டணத்தை செலுத்தி வாடகைக்கு வாங்கி விளையாடிவிட்டு பின்னர் ஒப்படைத்துவிடலாம்

இந்த சேவைகளை செய்து தரும் இணையதளங்களில் ஐந்து முக்கிய இணையதளங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

கேம் எக்ஸ்.எஸ்:

கேம் எக்ஸ்.எஸ்:

இந்தியாவில் கேம் கலாச்சாரத்தை ஆன்லைனில் வளர்த்துவிடும் இணையதளங்களில் ஒன்று. ஐடி பட்டதாரிகளால் உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் கேம் எக்ஸ்.எஸ் அல்லது கேம் எக்சஸ் என்று அழைக்கப்படுகிறது. கேம்ஸ் குறித்த முழு தகவல்களை பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு உதவுவது இந்த இணையதளத்தை உருவாக்கியதன் நோக்கமாக கருதப்படுகிறது.

இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் சொந்தமாக கேம்ஸ் வாங்கி கொள்ளலாம் அல்லது விற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த இணையதளம் வாடகைக்கு கேம்ஸ்களை பைரசி பிரச்சனை காரணமாக அனுமதிப்பதில்லை.

கேம் லூட்

கேம் லூட்

அனைத்து வகை கேம்ஸ்களையும் தன்னகத்தே கொண்ட இணையதளங்களில் ஒன்று. குறிப்பாக PS4, PS3, எக்ஸ்பாக்ஸ் ஒன், எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் பிஎஸ் விட்டா ஆகிய கேம்ஸ்கள் இதில் உண்டு. மேலும் இந்த இணையதளத்தில் கேம்ஸ்களின் குறிப்புகள் மற்றும் அதற்கு தேவையான சில பொருட்களும் கிடைக்கும். பிசிக்கு சப்போர்ட் செய்யும் கேம்ஸ்களை இவர்கள் விற்பனை செய்வதில்லை இருப்பினும் விரைவில் இந்த வசதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேம்ஸ்திஷாப்

கேம்ஸ்திஷாப்

www.gamestheshop.com என்ற முகவரியில் இயங்கும் இந்த இணையதளம் விர்ட்டியுவல் கேம்ஸ் மார்க்கெட்டில் சிறந்து விளங்குகிறது. இதில் PS4, PS3, PS2, PSP, எக்ஸ் பாக்ஸ் 360, நிண்டெண்டோ வி, மற்றும் என்.டி.எஸ் போன்ற வகை கேம்ஸ்கள் கிடைக்கும். மேலும் பல்வேறு வகையான கேம்ஸ் சாப்ட்வேர்கள் மற்றும் கேம்ஸ் விளையாட தேவையான பொருட்களும் இந்த இணையதளத்தின் மூலம் கிடைக்கும்

கேம்ஸ் என் கேட்ஜெட்

கேம்ஸ் என் கேட்ஜெட்

இந்த இணையதளமும் மற்ற இணையதளங்கள் போல் சந்தைக்கு வரும் புதிய கேம்ஸ்களை விற்பனை செய்யவும், உங்களுக்கு சொந்தமாக்கவும் உதவும். ஆனால் அதே நேரத்தில் இந்த இணையதளத்தில் கம்ப்யூட்டர் கேம்ஸ்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.!அம்பானியின் சம்பளம் உட்பட, அவரைப்பற்றி ஜீரணிக்க முடியாத 10 உண்மைகள்.!

கேமர்சாட்டா

கேமர்சாட்டா

இந்த இணையதளத்தில் கம்ப்யூட்டரில் விளையாடும் கேம்ஸ் உள்ளிட்ட பலவகையான கேம்ஸ்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த இணையதளம் கேம்ஸ்களை விற்பனை செய்யவும், பெற்று கொள்ளவும் உதவுகிறது. இந்த இணையதளம் மூலம் நீங்கள் எந்த வகையான கேம்ஸ்களை வாங்கி, விற்று பயனடையலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
A number of websites let you buy pre-owned games. And if you have games from your collection that you wish to sell, then you can do it online as some websites let you sell games. Some websites also let you rent games by paying a nominal fee instead of a hefty amount in purchasing them. Here are five such websites to buy pre-owned games.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X