ஸ்மார்ட்போன் கொண்டு ஆன்லைனில் மருந்துகளை வாங்க சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகள்

|

ஆன்லைன் மூலம் மருந்துகளை வாங்க செயலிகள் மிகவும் பயனுள்ள சேவைகளாக மாறி வருகின்றன. குறிப்பிட்ட சில மருந்து வகைகளை வாங்க பல்வேறு கடைகளுக்கு ஏறி இறங்குவது பலருக்கும் சிரமமான காரியம் தான். செயலி மூலம் மருந்து வகைகளை வாங்குவது மிகவும் சுலபமான விஷயம் ஆகும். செயலியில் மருந்து சீட்டை பதிவேற்றம் செய்து, நீங்கள் வாங்க விரும்பும் மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.

மருந்து வாங்கும் போது சலுகை மற்றும் தள்ளுபடி

மருந்து வாங்கும் போது சலுகை மற்றும் தள்ளுபடி

ஆர்டர் செய்யும் மருந்துகளை வீட்டு வாசலிலேயே டெலிவரி செய்யப்படும் என்பதால் இதுபோன்ற செயலிகள் மிவும் பயனுள்ளவை ஆகும். இதுதவிர மருந்து வாங்கும் போது சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை பெற முடியும். இதுபோன்று ஆன்லைனில் மருந்துகளை வாங்க பல்வேறு செயலிகளில் சிறந்தவற்றை தேர்வு செய்ய முடியும். கீழ்வரும் ஆன்லைன் மருந்து செயலிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பல்வேறு மருத்துவ குறைபாடுகளுக்கான மருந்து வகைகளை வாங்கிட முடியும்.

நெட்மெட்

நெட்மெட்

ஆன்லைன் மருத்துவ செயலியில் இது மிகவும் பிரபலமான செயலி ஆகும். இந்த செயலியை இந்தியா முழுக்க பயன்படுத்த முடியும். மேலும் இதை கொண்டு பொருட்களுக்கு மதீப்பீடு வழங்குவது மற்றும் முன்பதிவு செய்த ஆர்டர்கள் எங்கு இருக்கிறது என்பதையும் டிராக் செய்ய முடியும். இந்த செயலியில் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. எனினும், இவை வாங்கும் மருந்து வகைகளுக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே பெற முடியும். இத்துடன் மருந்துகளை பற்றி இந்த செயலியில் அதிக விவரங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும். நெட்மெட் உதவியாளர் பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர்.

மெட்லைஃப்

மெட்லைஃப்

ஆரோக்கியம் மற்றும் மருந்து பிரிவில் இதுவும் பிரபலமான செயலி எனலாம். அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற செயலியாகவும் இது இருக்கிறது. இந்த செயலியில் ரூ. 100 மற்றும் அதற்கும் அதிக தொகை கொடுத்து மருந்து வாங்கினால், மருந்தினை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கும் கட்டணம் இலவசமாகும். மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த செயலியில் மருந்து வாங்கும் போது கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் ஆர்டர் செய்த மருந்துகள் ஒன்றிரண்டு நாட்களில் டெலிவரி செய்யப்பட்டு விடும். இதில் மருந்து சீட்டு இல்லாமலும் மருந்து வகைகளை வாங்கிட முடியும். இந்த செயலியில் இருந்த படியே மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கான முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் மூடுவிழாவா?- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் ஒரே நாளில் குட்-பைபிஎஸ்என்எல் மூடுவிழாவா?- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் ஒரே நாளில் குட்-பை

பிராக்டோ

பிராக்டோ

மருத்துவரை சந்திக்க முன்கூட்டியே தகவல் தெரிவிக்க பெயர்பெற்ற பிராக்டோ செயலியில் தற்சமயம் மருந்து வகைகளை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பயனர் வாங்கும் மருந்து விவரங்களை டிஜிட்டல் முறையில் இந்த செயலி சேமித்து வைத்துக் கொள்கிறது. மேலும் இந்த செயலி பயனர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேயான மருத்துவ குறிப்புகளையும் வழங்குகிறது. இந்த செயலியிலும் ஆர்டர் செய்யும் மருந்து வகைகள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன.

பாம்ஈசி

பாம்ஈசி

இந்த செயலி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு தேவையானவற்றை முன்பதிவு செய்ய பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. இத்துடன் உடல் ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விதமான மருந்து வகைகளையும் இந்த செயலி மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இந்த செயலியில் மாதாந்திர அடிப்படையில் மருந்துகளை வாங்குவதற்கான அம்சம் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அம்சம் மருந்து குறைந்து போவதை தவிர்க்க செய்வதோடு, அதிக தள்ளுபடிகளையும் வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மருத்து பரிசோதனை வசதிகளும் வழங்கப்படுகிறது.

Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!

மெட்பிளஸ் மார்ட்

மெட்பிளஸ் மார்ட்

ஆன்லைன் மருந்துகள் பிரிவில் இது மிகவும் பிரபலமான செயலி ஆகும். இதை கொண்டு மருந்து வகைகள், ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு இதர பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே அருகாமையில் உள்ள மெட்லபிளஸ் மருந்தகங்களை இயக்க முடியும். இதன் இன்டர்ஃபேஸ் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
5 Best Online Medicine Apps for Android and iOS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X