தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்ய உதவும் 5 செயலிகள்

By Siva
|

மொபைல் போன் என்பது உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களிடம் தொடர்பு கொள்ள மொபைல் போன் என்பது மிகவும் உபயோகமான ஒரு பொருளாக உள்ளது.

தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்ய உதவும் 5 செயலிகள்

ஆனால் அதே நேரத்தில் நாம் பிசியாக இருக்கும் நேரத்தில் நம்மை தொல்லைப்படுத்தும் விளம்பர அழைப்புகள், டெலி மார்க்கெட் அழைப்புகள் மற்றும் சில நேரங்களில் வரும் மிரட்டல் அழைப்புகள் ஆகியவை நமக்கு பெரும் தொந்தரவாக இருக்கும்.

இந்த நிலையில் நமக்கு வரும் வேண்டாத அழைப்புகளை தவிர்த்துவிட நமக்கு சில செயலிகள் உதவுகின்றன. இதற்கெனவே மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் அவற்றில் சிறந்த ஐந்து செயலிகளை தற்போது பார்ப்போம்

ட்ரூ காலர் (True Caller)

ட்ரூ காலர் (True Caller)

வேண்டாத அழைப்புகளை தவிர்க்க உதவும் செயலிகளில் முதன்மையானதும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதும் இதுதான். அழைப்பவர்கள் யார், எங்கிருந்து அழைக்கின்றனர் ஆகிய விபரங்களுடன் அவர்கள் இனியும் தொடராமல் இருக்க பிளாக் வசதியும் உண்டு.

மேலும் தவிர்க்க விரும்பும் எண்களை ஸ்பேம் செய்தும் பிளாக் செய்து விடலாம். ஆனால் இந்த செயலி இயங்குவதற்கு இண்டர்நெட் கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி தன்னுடைய சர்வதேச நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்பவர் எங்கிருந்தாலும் எந்த பெயரில் இருந்தாலும் நமக்கு அந்த நபருடைய பெயர் மற்றும் இடத்தை கண்டுபிடித்து கொடுத்துவிடும். சிலசமயம் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்தையும் பெறலாம்.

கால் பிளாக்லிஸ்ட்-கால் பிளாக்கர்:

கால் பிளாக்லிஸ்ட்-கால் பிளாக்கர்:

தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும்.

மேலும் டெலிமார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு. மேலும் ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக்கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

கால் பிளாக் ஃப்ரீ - பிளாக்லிஸ்ட்:

கால் பிளாக் ஃப்ரீ - பிளாக்லிஸ்ட்:

மற்ற செயலிகள் போலவே இந்த செயலியும் நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும்.

மேலும் நமக்கு தேவையில்லாத எண்களை நேரடியாகவோ அல்லது கால் ஹிஸ்ட்ரியில் இருந்தோ வகைப்படுத்தி அனைத்தையும் பிளாக் செய்யும் வசதி இதில் உண்டு. அதேபோல் சென்ற செயலியில் பார்த்தது போன்று ஒயிட்லிஸ்ட் உருவாக்கும் வசதியும் இதில் உண்டு

போன்:

போன்:

கூகுளுக்கு சொந்தமான இந்த செயலியும் நமக்கு வரும் அழைப்புகளில் வேண்டாதவற்றை பிரித்தெடுத்து பிளாக் செய்தும் வல்லமை கொண்டது. மேலும் டெலிமார்க்கெட்டிங் மற்றும் முறைகேடு செய்பவர்களின் கால்களை இதன் மூலம் அடையாளம் கண்டு அழைப்பையே தவிர்த்துவிடலாம்.

மேலும் இந்த செயலி எந்த நிறுவனத்தில் இருந்து வருகிறது, அதன் பெயர் என்ன, அந்நிறுவனம் இருக்கும் இடம் ஆகியவற்றையும் நமக்கு ஸ்க்ரீனில் காட்டும் தன்மை உடையது

ஹூஸ்கால் (Whoscall)

ஹூஸ்கால் (Whoscall)

தேவையில்லாத, ரோபோட், டெலிமார்க்கெட்டிங் ஆகிய அழைப்புகளை இந்த செயலி இனம் கண்டு தவிர்க்க உதவும். மேலும் இதில் உள்ள ஷோகார்ட் என்ற ஆப்சனில் உங்களுக்கு தேவையான பிசினஸ் எண்களை சேமித்து வைத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Mobile phones are one of the most used electronic devices to keep in touch with friends and family, anywhere around the world. While this appreciable, the other side which is advertisement calls, telemarket calls might annoy you more and that too when you are busy.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X