டாப் 5 ஆடியோ மற்றும் வீடியோ கட்டர் / ஜாயினர் ஆப்ஸ் (ஆண்ட்ராய்டு).!

|

உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு வீடியோவின் விரும்பிய பகுதியை நீங்கள் கட் செய்யவோ அல்லது வேறொரு விடியோவை இணைக்கவோ விரும்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு பிடித்த இசைத்தொகுப்புகளை ஒன்றாக்க அல்லது ஒரு பாடலை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்க விரும்புகிறீர்களா? அவற்றை உங்கள் ரிங்டோனாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களா?

அல்லது ஒரு படத்திலிருந்து ஒரு பாடலை வெட்ட விரும்புகிறீர்களா? உங்களின் தேவை எதுவாக இருப்பினும் சரி ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த ஆடியோ / வீடியோ கட்டர் மற்றும் ஜாயினர் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த இலவச ஆண்ட்ராய்டு பயன்பாடுகளைப் பயன்படுத்தி, உங்கள் ஆண்ட்ராய்டில் எந்த ஆடியோ மற்றும் வீடியோ கோப்பையும் நீங்கள் மிக எளிதாக உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கையாள முடியும்.

இன்ஷாட்

இன்ஷாட்

இன்ஷாட் வீடியோ எடிட்டர் என்பது மிகவும் பிரபலமான புகைப்படம் / வீடியோ எடிட்டர் மற்றும் ப்ளே ஸ்டோரில் காணப்படும் ட்ரிம்மர் ஆகும். கூகுள் ப்ளே ஸ்டோரின்படி, இந்த பயன்பாட்டை உலகெங்கிலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிறுவியுள்ளனர் மற்றும் 960,000 க்கும் மேற்பட்ட பயனர்களின் சராசரி மதிப்பீடு 4.6 ஆகும். இன்ஷாட் வீடியோ எடிட்டர் ஒரு உள்ளுணர்வு பயனர் இடைமுகத்துடன் வருகிறது, இது எடிட், கிராப் மற்றும் வீடியோ மற்றும் படங்களை ஒழுங்கமைக்க தேவையான கருவிகளை வழங்குகிறது.

விட்ட்ரிம்

விட்ட்ரிம்

விட்ட்ரிம் (VidTrim) என்பதிப்பு மற்றொரு பிரபலமான வீடியோ எடிட்டர் ஆகும். இது ஆண்ட்ராய்டில் வீடியோக்களை ஒழுங்கமைக்க கிடைக்கும் மற்றொரு பயனுள்ள பயன்பாடாகும். ஒரு பயனர் நட்பு இடைமுகம் கொண்ட இது வடிவமைக்க மற்றும் கையாள மிகவும் எளிது. இந்த பயன்பாட்டின் சிறந்த பகுதியானது தானாகவே வீடியோவின் தேவையான அனைத்து விவரங்களையும் கண்டறிந்து காண்பிக்கும் என்பதுதான். அதாவது பயன்பாட்டின் பிரதான திரையில் இருந்து ஒரு வீடியோவை தேர்ந்தெடுத்ததும், கால அளவு, கோப்பு அளவு, பட அளவு மற்றும் வீடியோவின் பல விவரங்கள் ஆகியவற்றைக் காண்பிக்கும்.

ஆண்ட்ரோவிட்

ஆண்ட்ரோவிட்

ஆண்ட்ரோவிட் (AndroVid) என்பது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான மற்றொரு சிறந்த வீடியோ கட்டர் மற்றும் எடிட்டர் ஆகும். மேலே உள்ள பயன்பாடுகளைப் போலன்றி, இது உங்கள் வெளியீட்டு வீடியோக்களில் வாட்டர்மார்க் தனை சேர்க்காது. எம்பி4, 3ஜிபி, ஏவிஐ போன்ற முதன்மையான வீடியோ வடிவங்களை இது ஆதரிக்கிறது. ஆண்ட்ரோவிட் ஆனது வீடியோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையை ஒழுங்கமைக்க உதவுகிறது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி (வீடியோக்களின் மத்தியில் உள்ள தேவையற்ற பாகங்கள் நீக்கப்படாமல்) வீடியோவின் முழு பகுதியை வெட்ட உதவுகிறது. மற்றும் இதில் வீடியோவை ட்ரிம் செய்த பின்னர் மறுபெயரிடலாம், நீக்கலாம் அல்லது பகிரலாம்.

வீடியோ டிரிம்மர் குரு

வீடியோ டிரிம்மர் குரு

வீடியோ டிரிம்மர் குரு ஆனது ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு இலவச வீடியோ கட்டர் மற்றும் ஜாயினர் ஆப் ஆகும். இது பயன்படுத்த மிகவும் எளிதானது. பயன்பாட்டின் கீழ் மையத்தில் உள்ள "+" பொத்தானைத் தட்டுவதன் மூலம் பயன்பாட்டிற்கு எந்தவொரு வீடியோவையும் எளிதாக இறக்குமதி செய்யலாம். வீடியோவின் பொருத்தமான பகுதியை விரைவாகத் தேர்ந்தெடுத்து, வெட்டுவதற்கு எதுவாக அதை நீங்கள் முன்னோட்டம் காணவும் முடியும். இதில் நீங்கள் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை ஒழுங்கமைக்கலாம் மற்றும் ஒன்றிணைக்கலாம். மேலும் நீங்கள் குறைந்த, நடுத்தர அல்லது உயர் தரத்தில் எடிட் செய்த வீடியோவை சேமிக்கும் ஆதரவையும் ஆப் வழங்கும்.

எம்பி3கே கட்டர் அண்ட் மெர்ஜர்

எம்பி3கே கட்டர் அண்ட் மெர்ஜர்

எம்பி3கே கட்டர் அண்ட் மெர்ஜர் என்பது ஒரு ஆண்ட்ராய்டு பயன்பாடாகும், இது உங்கள் பாட்டின் எந்தவொரு குறிப்பிட்ட பகுதியையும் ஒரு சில வழிமுறைகளுடன் குறைக்க உதவுகிறது. நீங்கள் இரண்டு வெவ்வேறு ஒலிப்பதிவுகளையும் ஒன்றாக சேர்க்கலாம். உங்கள் இசையை அலைவடிவத்தில் திறக்கும் இந்த பயன்பாடானது நீங்கள் வலது மற்றும் இடது பக்க ஸ்லைடர்களை நகர்த்துவதன் மூலம் அலைவடிவத்தில் உங்கள் இசையின் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம். (வேவ் எடிட்டர்)அசைவூட்டப்பட்ட திருத்தியின் ஒலித்தடத்தின் தேர்ந்தெடுத்த பிரிவையும் நீங்கள் தேடலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
5 Best Audio Video Cutter And Joiner For Android Mobile. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X