டூப்ளிகேட் போட்டோக்களை நீக்க உதவும் 5 சிறந்த அப்ளிகேஷன்கள்.!

இந்த அப்ளிகேஷன் மூலம் நீக்குவதற்கு தகுதியான ஒரு கூட்டம் போட்டோக்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த போட்டோக்கள் ஒரே மாதிரியான ஒத்தவையாகவோ, மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பவையாகவோ இருக்கலாம்.

|

உங்கள் உள்ளக நினைவகத்தில் உள்ள சேமிப்பகத்தை சுத்தம் செய்ய பயன்படும் 5 சிறந்த அப்ளிகேஷன்களை குறித்து காண்போம்.


ஒரு சிறந்த போட்டோவை எடுப்பதற்கு, சில தெளிவு இல்லாத படங்களை எடுக்க வேண்டியுள்ளது. இந்த வகையில், ஒரு சிறந்த செல்ஃபீ படத்தை எடுக்க முயற்சிக்கும் போது பல தேவையில்லா படங்களை எடுத்திருப்போம். மேலும் எண்ணற்ற மீம்ஸ்களை பதிவிறக்கம் செய்து, அது உங்கள் கேலரியில் பொங்கி வழியலாம். இந்த நிரம்பி வழியும் நிலையை சரிசெய்ய அவ்வப்போது சென்று தேவையில்லாத கோப்புகளையும் படங்களையும் நீக்க வேண்டியுள்ளது. ஆனால் இதற்கு நீண்டநேரம் செலவிட வேண்டியுள்ளது என்பதால், எப்போதும் இது சாத்தியப்படுவது இல்லை. சிலர் மறந்தும் போகலாம். இதனால் கேலரி நிரம்பி வழிந்து, பெரிய தொல்லையாக மாறும்.


இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் வகையில் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. அதில் சிறந்த 5 அப்ளிகேஷன்கள் இதோ

கூகுள் பைல்ஸ் கோ

கூகுள் பைல்ஸ் கோ

கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் இருக்கும் 'ப்ரீ அப் ஸ்பேஸ்' தேர்வு செய்யும் அதே பணிகளை தான், இந்த அப்ளிகேஷன் செய்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், 11 காரியங்களை கொண்டுள்ளது. இதனால் போட்டோக்களை நீக்குவதை விட சிறப்பான சேவையை பெற முடிகிறது.

உங்கள் கேலரிக்கு மட்டும் என்பதை விட, உங்கள் முழு ஸ்மார்ட்போனுக்கும் ஒட்டுமொத்தமாக உதவும் ஒரு அப்ளிகேஷனாக உள்ளது.

கேலரி டாக்டர் - போட்டோ கிளீனர்

கேலரி டாக்டர் - போட்டோ கிளீனர்

இந்த அப்ளிகேஷன் மூலம் நீக்குவதற்கு தகுதியான ஒரு கூட்டம் போட்டோக்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த போட்டோக்கள் ஒரே மாதிரியான ஒத்தவையாகவோ, மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பவையாகவோ இருக்கலாம்.


இந்த அப்ளிகேஷன் மூலம் நகல்கள், ஸ்கிரீன்சாட்கள் மற்றும் பொதுவாக தரம் குறைந்த படங்கள் ஆகியவற்றை நீக்கலாம்.

கிளீன் மாஸ்டர்

கிளீன் மாஸ்டர்

உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் இடவசதியை ஏற்படுத்துவதற்கான பொதுவான ஸ்டோர் நிர்வாக தீர்வாக, இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் அருமையான போட்டோ ஷார்ட்டிங் மற்றும் நீக்கும் திறன்களும் காணப்படுகிறது.

இது தவிர ஒத்த போட்டோக்கள், ஏறக்குறைய ஒரே மாதிரியான போர்ட்ரெயிட்ஸ் மற்றும் மங்கலான படங்கள் ஆகியவற்றை கண்டறியும் தேர்வு அளிக்கிறது. இந்த வாட்ஸ்அப் கிளீனிங் கருவியை பயன்படுத்தி, வாட்ஸ்அப் மீடியோ கோப்பில் உள்ள கும்பல் படங்களையும் கண்டறியலாம்.

நாக்ஸ்கிளீனர்

நாக்ஸ்கிளீனர்

கிளீனர் மாஸ்டரை போலவே, நாக்ஸ்கிளீனரும், போட்டோ நிர்வாகத்தை அளிக்கக் கூடிய ஒரு அப்ளிகேஷன் அல்ல என்றாலும், அதை செய்யக்கூடிய திறன் இதற்கு இருக்கிறது. இதன்மூலம் செய்யப்படும் ஸ்கேன் முடிந்த பிறகு, வெவ்வேறு கோப்புகளில் இருக்கும் ஒத்த படங்கள், ஸ்கிரீன்ஷார்ட்கள், அதிக இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போட்டோக்கள், மங்கலான படங்கள் ஆகியவற்றை குறித்த ஒரு ஒட்டுமொத்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.

இதன்மூலம் குறிப்பிட்ட கோப்பில் நீங்கள் நீக்க விரும்பும் படங்களை தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், ஸ்கேன் செய்து முடிக்க கொஞ்சம் நேரத்தை எடுத்து கொள்ளும். ஆனால் இதில் உள்ள சாதகமான காரியங்களால், பாதகமான காரியங்கள் மறைக்கப்பட்டு, இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தகுதி உள்ளதாக மாறுகிறது.

ரேமோ டூப்ளிகேட் போட்டோஸ் ரிமூவர்

ரேமோ டூப்ளிகேட் போட்டோஸ் ரிமூவர்

இந்த பட்டியலில் உள்ள மற்ற எல்லா அப்ளிகேஷன்களையும் வைத்து பார்க்கும் போது, ஒத்த போட்டோக்கள் தொடர்பான பிரச்சனைக்கு மட்டுமே உதவும் இந்த அப்ளிகேஷன் நிர்ணயிக்கப்பட்ட பணியை மட்டுமே செய்வது போல தெரிகிறது. ஆனால் அதன் வேகமான செயல்பாடு, பயன்படுத்துவதற்கு தகுதி கொண்டதாக உள்ளது.

உங்கள் போனில் தனது ஸ்கேனை ரேமோ முடித்து விட்டால், மொத்தம் உள்ள எல்லா போட்டோக்களும் பிரித்தறியப்பட்டு, நகலானவை அல்லது ஒத்த படங்களை பட்டியலிட்டு, அவற்றை எளிதாக நீக்கிவிடலாம். சமூக இணையதளங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நீங்கள் போட்டோக்களை போடும் போது, அந்த படங்களின் நகல் உங்கள் போனில் நகலாக இருக்கும் என்பதால், இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

Best Mobiles in India

English summary
5 best Android apps that help you delete duplicate and blurry photos : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X