Subscribe to Gizbot

ஸ்லெக்-க்கு மாற்றாக அமையும் 5 அப்ளிகேஷன்கள்

By: Jijo Gilbert

எந்தொரு நிறுவனமாக இருந்தாலும், பணியில் ஈடுபடும் ஒரு அணியின் இடையே தகவல் தொடர்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. கடந்த காலங்களில், பெரும்பாலான தகவல் தொடர்புகள் அனைத்தும் மின்னஞ்சல் வழியாகவே நடைபெற்று வந்தன. ஆனால் தானியங்கி மின்னஞ்சல்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, அதன்மூலம் கிடைக்கும் உற்பத்தியும் பலனும் வெகுவாக குறைந்துவிட்டன.

ஸ்லெக்-க்கு மாற்றாக அமையும் 5 அப்ளிகேஷன்கள்

இதற்கு ஒரு தீர்வாக, ஸ்லெக் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் அணியின் தகவல்தொடர்பு, கூட்டுறவு மற்றும் நவீன தகவல்களை அறிந்து கொள்ளுதல் என்ற மூன்று பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக இருந்தது. இதுதவிர, மின்னஞ்சலின் இன்பாக்ஸ் மற்றும் மற்ற மென்பொருட்களில் உள்ள எல்லா முக்கிய தகவல்தொடர்புகளையும் ஒரே இடத்தில் திரட்டி வைத்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஸ்லெக் பயன்படுத்தி உங்கள் அணிக்கு சலித்துவிட்டால், அதற்கு பதிலாக பயன்படுத்தும் வகையிலான 5 மாற்று அப்ளிகேஷன்களை இங்கே அளிக்கிறோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் ஹேங்அவுட்ஸ்

கூகுள் ஹேங்அவுட்ஸ்

கூகுள் ஹேங்அவுட், வீடியோ மெசேஜிங்கில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது என்றாலும், அதற்கு மெசேஜிங் திறனும் அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் பணியிடத்தில் கூகுள் டிரைவ் மற்றும் டாக்ஸ் ஆகியவற்றை அதிகமாக நம்பிக் கொண்டிருக்கும் பட்சத்தில், கூகுள் அப்ளிகேஷன்கள் எளிதில் ஒருங்கிணைக்க கூடியது என்பதால், இந்த அப்ளிகேஷன் கைக்கு அடக்கமாக அமையும்.

மேலும், சென்டெஸ்க், ஊபர்கான்ஸ்ஃபிரன்ஸ் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்க அல்லது ஹிப்சாட் செய்ய முடியும்.

ஃபிலிப்

ஃபிலிப்

ஃபிலிப் அமைப்பிற்கு வெளியே இருந்தாலும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கொண்ட எந்தொரு நபருக்கும் இந்த ஃபிலிப் மூலம் செய்திகளை அனுப்ப முடியும். ஒரு மூடப்பட்ட அணி அமைப்பை உருவாக்குவதற்கு பதிலாக, யாரோடு வேண்டுமானாலும் வெளிப்படையாக தொடர்புகொள்ளலாம். இதற்கு ஒரு முடிவில்லாத மெசேஜ் வரலாறு அம்சம் இருப்பதோடு, அதன் இலவச பேக்கேஜ்ஜில் முடிவில்லாத கூட்டிணைவையும் பெற முடிகிறது.

பிட்ரிக்ஸ் 24

பிட்ரிக்ஸ் 24

ஸ்லெக்-க்கு பதிலாக பயன்படுத்த கூடிய சிறந்த மாற்றுகளில் இதுவும் ஒன்று. இதில் ஒரு மாதத்திற்கு $39 முதல் $199 வரையிலான கட்டணத் திட்டங்களுடன் கூடிய ஏராளமான தேர்வுகள் காணப்படுகின்றன. நீங்கள் கட்டணம் செலுத்த விரும்பாத பட்சத்தில், இலவசமாக உள்ள ஒரே ஒரு திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்லெக் உடன் ஒப்பிட்டால், இலவச ஸ்கிரீனிங் பகிர்வு, வரம்பில்லா தேடல் வரலாறு மற்றும் இலவச வீடியோ சாட் போன்ற சில அம்சங்களின் மூலம் பிட்ரிக்ஸ் 24 தனித்தன்மையோடு நிற்கிறது. யாராவது கோப்புகளைத் திருத்தினால், அதை கொண்ட உங்கள் எல்லா சாதனங்களிலும் திருத்தத்தை ஏற்படுத்தி, அது குறித்த அறிவிப்புகளை அளிக்கிறது.

பதறிப்போன பிஎஸ்என்எல்: 8 திட்டங்களின் அதிரடி திருத்தம்.!

கிலிப்

கிலிப்

இது பட்டியல்கள், காலெண்டர்கள், கோப்புகள், குறிப்புகள், வீடியோ காலிங் மற்றும் மெசேஜிங் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ஒருங்கே பெற்ற அப்ளிகேஷனாக அமைந்துள்ளது.

இதில் திட்டங்களை நிர்வகித்தல், பயணத்திலும் வேலை செய்தல், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்களைப் பெற்று, மின்னஞ்சலுக்கு ஒரு மாற்றாக அமைய திறன் கொண்டதாக உள்ளது. மற்ற அப்ளிகேஷன்களுடன் ஒப்பிடும் போது, இலவசமாக மற்றும் கட்டணம் செலுத்தி பெறுதல் என்ற முறைகளில் சிறப்பான மதிப்பில் இது கிடைக்கிறது.

ரைவர்

ரைவர்

அணி தகவல்தொடர்பு மற்றும் பணி மேலாண்மை என்ற அம்சங்களின் சிறந்த ஒருங்கிணைப்பை ரைவரில் காண முடிகிறது. இந்த உள்ளூர் பணி நிர்வாகத்தை தவிர, கூகுள் ட்ரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் பலவற்றுடன் பயனர்கள் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் செயல்பட்டு, கோப்பு சேமிப்பகத்தில் இருந்து நேரடியாக கோப்புகளைத் தேர்ந்தெடுத்து கொள்ள முடிகிறது.

மேலும் இதில் உள்ள ஒருங்கிணைப்பு கட்டமைப்புடன் கூடிய இலவச கான்பிரன்ஸ் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் அம்சத்தை பயனருக்கு அளித்து, 400 பேர் வரையிலான மக்களோடு தொடர்பை ஏற்படுத்த முடிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
When it comes to work, team communication is more important for any enterprises. If in case, your team got bored of Slack, we provide you 5 alternative apps that you can try.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot