Subscribe to Gizbot

இன்ஸ்டாகிராம் வீடியோவில் இசையை இணைக்க உதவும் 5 அப்ளிகேஷன்கள்

Posted By: Jijo Gilbert

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்செட் ஆகியவற்றில் "ஸ்டோரீஸ்" என்ற அம்சம், சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மற்றவர்கள் இடையே அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. வெறும் 24 மணிநேரங்களுக்கு மட்டுமே நிலைநிற்க கூடிய தற்காலிகமான இந்த ஸ்டோரீஸ் அம்சம், ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்ஸ்டாகிராம் வீடியோவில் இசையை இணைக்க உதவும் 5 அப்ளிகேஷன்கள்

சுமார் 15 வினாடிகளுக்கு நிலைநிற்க கூடிய வகையில் அமையும் ஒரு வீடியோ அல்லது படங்களின் ஒரு தொடர் மூலம் இந்த ஸ்டோரீயை அமைக்க முடியும். ஒரு சிறந்த வீடியோ உடன் ஒரு சிறந்த ஆடியோ இணைக்கப்படாத வரை, அதை சிறப்பானது என்று கூற முடியாது.

இன்ஸ்டாகிராமிலேயே காணப்படும் திருத்தம் செய்ய பயன்படும் கருவிகள் மூலம் நம் வீடியோக்களுடன் எந்தொரு இசையையும் இணைக்க அனுமதிக்கப்படாத நிலையில், இந்த இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள மற்ற சில கருவிகளின் மூலம் நம் வீடியோ டிராக் உடன் ஆடியோவை இணைக்க உதவுகின்றன.

எந்த ஒரு வீடியோ உடனும் ஒரு இசை டிராக்கை எளிதாக இணைக்க உதவும் சில அப்ளிகேஷன்களைக் கீழே பட்டியலிட்டு உள்ளோம். இதன்மூலம் உங்கள் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை அதிக விறுவிறுப்பு மிகுந்ததாக மாற்றும் ஒரு கடைமட்ட பணியைச் சேர்க்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விட்லேப்

விட்லேப்

இந்த பன்முக அப்ளிகேஷன் மூலம் உங்கள் வீடியோவில் எங்கு வேண்டுமானாலும் இடைநிறுத்தி, உங்கள் சாதனத்தில் இருந்து எந்தொரு ஆடியோ கோப்பையும் தேர்ந்தெடுக்க முடியும் என்பதோடு, அது இன்-ஆப் ஒலி விளைவுகளை கச்சிதமாக ஏற்படுவதாக அமையும். இதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதே இடத்தில் நேரடியாக ஆடியோ பதிவை செய்வதை தேர்ந்தெடுத்து இணைக்கலாம்.

மேலும், ஐட்யூன்ஸ் அல்லது கூகுள் ப்ளே மூலம் ஆடியோ கோப்புகளைத் தேடி பெற்று கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை எளிய கட்டணம் செலுத்தி வாங்குவதன் மூலம் உங்கள் வீடியோவில் இருந்து விட்லேப் வாட்டர்மார்க் நீக்கிவிட்டு, கூடுதல் விளைவுகள் அல்லது ஃபான்ட்களைச் சேர்த்து, இந்த அப்ளிகேஷனை முழுமையாக பயன்படுத்த முடியும்.

வீடியோஷாப்

வீடியோஷாப்

விட்லேப் போலவே, மேலே நாங்கள் குறிப்பிட்ட சில பணிகளைத் தவிர, இதற்கே உரிய சில பணிகளையும், இந்த அப்ளிகேஷன் மூலம் செய்ய முடியும். ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு இது இலவசம் என்றாலும், ஐஓஎஸ் பயனர்கள் $2 கட்டணம் செலுத்தி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, பல சிறு வீடியோக்களை கிடைமட்டமாக வைத்து, ஒரே வீடியோவில் பல்வேறு கிளிப்களுக்கான இணைக்கலாம் என்பதோடு, ஒவ்வொரு கிளிப் இடையே அனிமேடிட் படங்களைச் சேர்க்க முடியும். ஐஓஎஸ் 8.2 மற்றும் அதற்கு பிறகு வந்தவை மற்றும் ஆன்ட்ராய்டு பதிப்பான 4.3+ ஆகியவை உடன் இந்த அப்ளிகேஷன் சுமூகமாக செயல்படுகிறது.

ஃபிளிப்கிராம்

ஃபிளிப்கிராம்

மற்றொரு எளிய அப்ளிகேஷனான இதில், வீடியோக்களைத் திருத்தம் செய்வதற்கான எண்ணற்ற சல்லடைகள் மற்றும் விளைவுகளைக் கொண்டு, சிறந்த இசையை அணுக முடிகிறது. இதன்மூலம் எந்த கஷ்டமும் இல்லாமல் வீடியோக்களை உருவாக்கவும் பகிரவும் எதுவாக உள்ளது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் விரும்பும் வீடியோக்களைப் பகிர முடிகிறது.

ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ ஜி6.!

வீடியோவிற்கான பின்னணி இசை

வீடியோவிற்கான பின்னணி இசை

உங்கள் பணியை எளிமையாகவும் கச்சிதமாகவும் முடிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு நபராக இருக்கும் பட்சத்தில், இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கலாம். ஒரு வீடியோவில் இசையை விரைவாக சேர்க்க வேண்டும் என்று விரும்பும் பயனர்களுக்கு, இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த அப்ளிகேஷனை ஐடியூன்ஸில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
க்விக் பை கோப்ரோ

க்விக் பை கோப்ரோ

இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, உங்கள் ஸ்டோரீ உடன் செய்தி, இசை மற்றும் பலவற்றை எளிதாக இணைக்க முடியும். உங்கள் கோப்ரோ, ஃபோன் அல்லது மற்ற சாதனங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களைக் கொண்டு, இந்த அப்ளிகேஷன் வேலைச் செய்கிறது.

உங்கள் வீடியோ கிளிப்களை ஆராய்ந்து அறிந்து, கச்சிதமான கத்திரிப்புகளை செய்து, ஃபான்ட்களை ஒழுங்குப்படுத்தி, அதற்கு ஏற்ப வடிகட்ட உதவுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஆகியவற்றில் இருந்து இதை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
In the recent times, the feature called as "Stories" is getting quite famous among youths and others in Instagram, Whatsapp and Snapchats. However, these stories stay temporarily for just 24 hours, but that doesn't mean it shouldn't be entertaining.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot