புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி?

சமீபத்தில் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை கசியவிட்டதன் மூலம் ஃபேஸ்புக் பலகோடி வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.

By GizBot Bureau
|

ஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த அனுபவம் பெரும்பாலும் புளோட்வேர் மற்றும் தேவையற்ற மூன்றாம்-தரப்பு பயன்பாடுகள் இருப்பதால் சங்கடத்தை கொடுக்கின்றது. ஓ.இ.எம்.கள் உங்களிடம் தேவையில்லாத விஷயங்களைப் பயன்படுத்தி உங்கள் போனை ஒழுங்கற்ற நிலையில் வைக்க ஒரு காரணமாகிவிடுகிறது. இதுபோன்ற தேவையில்லாத செயலிகளான காலண்டர், கிளாக் வரிசையில் ஃபேஸ்புக் செயலியும் ஒன்று.

புதிய ஆண்ட்ராய்டு போனில் ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி?

சமீபத்தில் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை கசியவிட்டதன் மூலம் ஃபேஸ்புக் பலகோடி வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. ஒருவேளை உங்கள் புதிய ஸ்மார்ட்போனில் ஏற்கனவே ஃபேஸ்புக் செயலி இருந்தால் உடனே அதை யோசிக்காமல் அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இது ஒரு பெரிய வேலையாக உங்களுக்கு இருக்காது. அதனை ஜஸ்ட் அன் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்தால் போதுமானது. அதே சமயத்தில் உங்கள் போன் வாரண்டி காலத்தில் இருப்பதால் இதுபோன்ற செயலிகளை அன் இன்ஸ்டால் செய்தால் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். அதற்கு நீங்கள் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி ஃபேஸ்புக் மற்றும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தேவையில்லாத செயலிகளை நீக்கலாம்.

 ஆப் செட்டிங் சென்று டிஸேபிள் செய்யுங்கள்

ஆப் செட்டிங் சென்று டிஸேபிள் செய்யுங்கள்

ஃபேஸ்புக் செயலியை டிஸேபிள் செய்யும் ஆப்சன் அதன் செட்டிங்கில் இருக்கும். இருப்பினும் இந்த செயலியை டிஸேபிள் செய்ய நீங்கள் முதலில் செட்டிங் ஆப்ஸ் என்ற ஆப்சனுக்கு செல்ல வேண்டும். புதிய வகை ஆண்ட்ராய்டு மாடல் போன்களில் 'சீ ஆல் ஆப்ஸ்' என்ற ஆப்சனுக்கு முதலில் செல்ல வேண்டும். அதன் பின்னர் அதில் ஃபேஸ்புக் செயலியை கண்டுபிடித்து அதனை டிஸேபிள் செய்ய வேண்டும். இதில் டிஸேபிள் மற்றும் ஃபோர்ஸ் ஸ்டாப் என்ற இரண்டு ஆப்சன் இருக்கும். அதில் டிஸேபிள் ஆப்சனை தேர்வு செய்து ஓகே செய்துவிட்டால் உங்கள் போனில் இருந்து ஃபேஸ்புக் செயலி மறைந்துவிடும்

மொத்தமாக டிஸேபிள் செய்யும் முறை:

மொத்தமாக டிஸேபிள் செய்யும் முறை:

ஃபேஸ்புக் மட்டுமின்றி இதுபோன்ற ஒருசில செயலிகளை எல்ஜி மற்றும் சாம்சங் போனில் இருந்து மொத்தமாக டிஸேபிள் செய்வதற்கே என்றே ஒருசில ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் உள்ளது. ஆனால் எல்ஜி வெர்ஷன் டிஸேபிளை செய்ய $1.99 நீங்கள் செலவு செய்ய வேண்டும். ஆனால் அதேபோல் சாம்சங் போனிலும் தேவையில்லாத செயலிகளை டிஸேபிள் செய்யும் ஆப்ஸ்கள் உண்டு. ஆனால் அதன் விலை எல்ஜி போன்று குறைந்தது இல்லை அதன் விலை $3.49 என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிடி கமாண்ட்களை பயன்படுத்துங்கள்:

ஏபிடி கமாண்ட்களை பயன்படுத்துங்கள்:

காசு கொடுத்து இவ்வகை செயலிகளை நீக்குவதற்கு பதிலாக இலவசமாக நீக்குவதற்கு ஏபிடி கமாண்ட்களை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் முதலில் ஏபிடி கமாண்ட்களை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து அதன்பின்னர் அதனை இன்ஸ்டால் செய்யுங்கள். இதற்கு உங்கள் போனின் யூஎஸ்பி டிரைவர் இருந்தால் தான் போனுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையிலான கனெக்சனை பெற முடியும்

இந்த முறையில் நீங்கள் தேவையில்லாத செயலிகளை நீக்க வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட செயலியின் முழுமையான பேக்கேஜ் பெயரை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று ஆப் இன்ஸ்பெக்டர் என்ற செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஆப் சென்று அதில் உள்ள செலக்ட் ஆப் தேர்வு செய்து அதன் பின்னர் ஃபேஸ்புக் செயலியை தேர்வு செய்யுங்கள். அதில் அந்த செயலியின் பேக்கேஜ் எப்யர் அதன் கீழே இருக்கும். இது காம் அல்லது நெட் என்ற வார்த்தைகளில் போதுமான இடைவெளியில் கமாவுடன் இருக்கும்.

பேக்கேஜ்

பேக்கேஜ்

இதன்பின்னர் உங்கள் போனை கம்ப்யூட்டருடன் யூஎஸ்பி மூலம் கனெக்ட் செய்ய வேண்டும். அதன் பின்னர் பேக்கேஜ் பெயர் இருக்கும் இடத்தில் கீழே உள்ள கமாண்டை பதிவு செய்ய வேண்டும். adb shell pm uninstall -k --user o XX . இவ்வாறு செய்துவிட்டால் உங்களுக்கு தேவையில்லாத செயலி இனி உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்காது.

Best Mobiles in India

English summary
3 ways to remove preinstalled Facebook app on your Android phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X