ஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.!

இவை பொதுவாக ஆண்ட்ராய்டு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றின் ஷேர் மெனு நீங்கள் விரும்பும் செயலியை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது.

|

ஸ்மார்ட்போன் யுகத்தில் ஷேரிங் இல்லாமல் எதுவும் முழுமை பெறுவதில்லை எனலாம். இதனாலேயே சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான செயலிகளில் ஷேரிங் வசதி வழங்கப்படுகிறது. இவை பொதுவாக ஆண்ட்ராய்டு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றின் ஷேர் மெனு நீங்கள் விரும்பும் செயலியை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. ஷேர் ஐகானை கிளிக் செய்ததும் திரையில் தோன்றும் விண்டோ தான் ஷேர் மெனு. எனினும் இது அவ்வளவு எளிமையாக இருப்பதில்லை. வடிவமைப்பில் துவங்கி, மெனுவில் பட்டியலிடப்படும் பெரும்பாலான செயலிகள் நீங்கள் விரும்பும் செயலியை தேடச் செய்யும்.

ஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.!

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகளவு கஸ்டமைஸ் செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி உங்களது ஷேர் மெனுவினை பலவழிகளில் பயன்படுத்த முடியும். அவ்வாறு உங்களின் ஷேரிங் தேவைகளை பூர்த்தி செய்யும் மூன்று பயனுள்ள செயலிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.!

அண்ட்மேட் ஷேர் (Andmade Share)
2013ம் ஆண்டில் இருந்து இதுவரை அப்டடேட் செய்யப்படாத செயலியாக இருந்தாலும், இந்த செயலி சிறப்பாக வேளை செய்கிறது. எவ்வித மெட்டீரியல் வடிவமைப்பும் இன்றி, இலவசமாக கிடைக்கும் இந்த செயலியை மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். முதலில், செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இனி, நீங்கள் விரும்பும் தரவுகளில் ஒன்றை ஷேர் செய்து செயலியை பயன்படுத்த துவங்கலாம்.

இவ்வாறு செய்யும் போது ஆண்ட்ராய்டு தரப்பில் இருந்து உங்களை அண்ட்மேட் செயலியை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். இங்கு 'Always' என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். முதற்கட்டமாக பெயர் அடிப்படையில் செயலிகள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இவற்றை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றிக் கொள்ள செயலிகளை அழுத்திப் பிடித்து பின் நீங்கள் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

செயலியின் வலது புறம் மேல்பக்கமாக கியர் ஐகான் தெரியும். இதை கிளிக் செய்து செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இனி 'Hidden Apps' ஆப்ஷன் சென்று ஷேர் மெனுவில் சேராத செயலிகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.!
ஃப்ளிக்டு ஷேர் ஃபாஸ்ட் (Fliktu: Share Fast)
ஃப்ளிக்டு செயலி அதிநவீன அம்சங்களை கொண்டது. இதனை டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்த பின் டீஃபால்ட் ஷேரிங் ஆப்ஷனாக ஃப்ளிக்டுவை செட் செய்ய வேண்டும். பின் அதிகம் ஷேர் செய்யப்பட்ட செயலிகள் முதலில் தெரியும். இதனை கஸ்டமைஸ் செய்ய ஃப்ளிக்டு செயலியை திறந்து உங்களுக்கான மெனு வரும் வரை ஸ்வைப் செய்ய வேண்டும்.

வலதுபுறம், இடதுபுறம் மற்றும் நடுவே இருக்கும் செயலிகள் தானாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும். இவற்றை நீங்கள் விரும்பும் படி மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் தேவையற்ற செயலிகள் உங்களது மெனுவில் இடம் பிடிக்காமல் இருக்க அவற்றை Hide Apps ஆப்ஷன் மூலம் மறைத்து வைக்க முடியும்.

ஃப்ளிக்டு செயலியின் மிகமுக்கிய அம்சமாக இதன் ஜெஸ்ட்யூர்கள் இருக்கின்றன. லின்க்களை ஷேர் செய்யும் வசதியை செயல்படுத்தினால், லின்க்கை கிளிக் செய்து போனினை மென்மையாக அசைத்தால் ஷேர் மெனு திறக்கும். இதேபோன்று தரவுகளை காப்பி செய்யும் இவ்வாறு செய்யலாம். இதனை கிளிப்போர்டு டேபில் செயல்படுத்த வேண்டும்.

ஆண்ட்ராய்டு ஷேர் மெனுவினை கஸ்டமைஸ் செய்ய மூன்று பயனுள்ள செயலிகள்.!

கஸ்டம் ஷேர் (CustomShare)
இந்த செயலியை பயன்படுத்த உங்களின் ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன் யு.ஐ. மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் நீங்கள் விரும்பும் செயலிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதேபோன்று நீங்கள் விரும்பாத செயலிகளை மறைத்து வைத்துக் கொள்ளலாம். ஷேர் மெனுவினை சிறப்பாக வழங்கும் தலைசிறந்த செயலியாக கஸ்டம்ஷேர் இருக்கிறது.
Best Mobiles in India

English summary
3 useful apps to customize Android's Share menu: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X