நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத வாட்ஸ்அப் செயலியின் பயனுள்ள அம்சங்கள்.!

|

வாட்ஸ்அப் செயலியில் உள்ள பல்வேறு அம்சங்கள் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

பணம் அனுப்பும் வசதி உட்பட பல்வேறு

இருந்தபோதிலும் பணம் அனுப்பும் வசதி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் வாட்ஸ்அப் வழியாக அணுக கிடைக்கும் பல்வேறு இந்த தந்திரங்களை இத்தொகுப்பில் பட்டியலிட்டு உள்ளோம் ஏற்கனவே தெரிந்தவர்கள் இன்னும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள், தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

 GIF அம்சம்

GIF அம்சம்

வாட்ஸ்அப் செயலியின் இன்-ஆப் கேமரா ஆனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து நமது தொடர்புகளுக்கு அனுமதிக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் வாட்ஸ்அப் செயலியில் ஒரு உள்ளமைக்கப்பட்ட GIF கருவிஉள்ளதென்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

அதாவது எந்தவொரு மூன்றாம் தரப்பு பயன்பாடு இல்லாமல் நேரடியாக வாட்ஸ்அப்-ல் GIF-களை உருவாக்கலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த ஒரு வீடியோவை பதிவுசெய்து, மேல் வலது மூலையில் உள்ள GIF ஐகானை தேர்ந்தெடுக்கவும், அதன்பின்பு உங்கள் GIF கிளிப்பின் கால அளவை கூட நீங்கள் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi 9 Prime பயனர்களின் கவனத்திற்கு.. புதிய MIUI 12 அப்டேட்டில் என்ன மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது?

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப் பயனர்கள், ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸையும் ஃபேஸ்புக்கில் ஸ்டோரியையும் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என இரண்டு இயங்கு தளங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் My status பகுதிக்குக் கீழேயே இருக்கும் "Share to Facebook Story" என்பதை தேர்வு செய்வதன் மூலம், நீங்கள் வாட்ஸ் அப்பில் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் பக்கத்துக்குச் செல்கிறது.

ஸ்டார்டு மெசேஜஸ்

ஸ்டார்டு மெசேஜஸ்

வாட்ஸ்அப் செயலியில் ஒரு குறிப்பிட்ட மெசேஜை நீங்கள் ஸ்டார்டு ஆக மாற்றுவதின் வாயிலாக அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மறுபடியும் அணுகலாம். அதாவது குறிப்பிட்ட சாட்டின் முக்கியமான மெசேஜ்களை தனியாக சேமிக்கலாம் என்று அர்த்தம். ஒரு மெசேஜை நீங்கள் வெறுமனே லாங் பிரஸ் செய்ய, மேலே நட்சத்திர ஐகான் ஒன்று தோன்றும். அதை டேப் செய்யவும் அந்த மெசேஜ் ஆனது "ஸ்டார்டு மெசேஜஸ்" டேப்பின் கீழ் சேமிக்கப்படும்.

எழுத்து உருவங்களை மாற்றும் அம்சம்

எழுத்து உருவங்களை மாற்றும் அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் எழுத்து உருவங்களை மாற்றுவது என்பது ஒரு அசத்தலான வசதியாகும். அதாவது வாட்ஸஅப் உங்களை போல்ட், இடாலிக்ஸ் உட்பட சில ஃபான்ட்களை பயன்படுத்த அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இரட்டை அங்கீகாரம்

இரட்டை அங்கீகாரம்

வாட்ஸ்அப் கணக்கில் பிறர் யாரும் ஊடுருவ வேண்டாம் என்றால் இரட்டை அங்கீகாரம் அதாவது Two Factor Authentication பயன்பாட்டை செயல்படுத்த வேண்டும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியை திறந்து வாட்ஸ்அப் செட்டிங்ஸ் ஆப்ஷனை திறக்க வேண்டும். பின் Tab Account ஆப்ஷனை கிளிக் செய்து two step verification ஆப்ஷனை enable செய்ய வேண்டும். பின் ஆறு இலக்கு Pin எண்ணை தங்களது தேர்வுப்படி பதிவிட்டு உறுதி செய்ய வேண்டும்.

அதன்பின் நீங்கள் அணுகக்கூடிய இமெயில் ஐடியை பதிவிட வேண்டும் அல்லது இமெயில் ஐடியை சேர்க்க விரும்பவில்லை என்றால் அதை ஸ்கிப் செய்துவிட வேண்டும். இமெயில் ஐடி பதிவிட்டால் அதை உறுதி செய்து சேமிப்பு தேர்வை கிளக் செய்யவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கு கைரேகை லாக்(Finger print Lock) செய்து தங்களது தனியுரிமை தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பாதுகாக்கலாம்.

வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

வாட்ஸ்அப் வெப் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனுள்ள கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்-ஐ தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இந்த ஷார்ட்கட்ஸ் ஆனது ஒரு சில வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகிறது. இப்போது தனித்துவமான வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.

 வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

 • Alt + Ctrl + n ஆனது புதிய சாட்-ஐ ஆரம்பிக்க (New Chat) உதவும் என்பது குறிப்பிடத்தக்கது
 • Alt + Ctrl + p வசதியானது ப்ரொபைல் விவரங்களை காண (Profile And About) உதவுகிறது.
 • Alt + Ctrl + / ஷார்ட்கட்ஸ் ஆனது குறிப்பிட்ட தேடலை நிகழ்த்த (Search) பயன்படுகிறது
 • Alt + Ctrl + e வசதியானது ஒரு சாட்-ஐ ஆர்ச்சிவ் செய்ய (Archive Chat) அனுமதிக்கும்.
 • Alt + Ctrl + U ஆனது ஒரு மெசேஜை அன்ரீட் என்று மார்க் செய்ய அனுமதிக்கும் (Mark as Unread)
 • Alt + Ctrl + Tab வசதியானது அடுத்த சாட்-டிற்கு செல்ல (Next Chat) பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 • Alt + Ctrl + N ஷார்ட்கட்ஸ் ஆனது புதிய க்ரூப் உருவாக்க (New Group) பயன்படுகிறது.
 • Alt + Ctrl + , வசதியானது செட்டிங்ஸ் -ற்கு செல்ல (Settings) அனுமதி கொடுக்கும்.
 • Alt + Ctrl + F ஷார்ட்கட்ஸ் ஆனது குறிப்பிட்ட சாட்-ஐ தேட (Search Chat) உதவுகிறது.
 • Alt + Ctrl + M வசதியானது ம்யூட் செய்ய (Mute) அனுமதிக்கும்.
 • Alt + Ctrl + Backspace வசதியானது குறிப்பிட்ட சாட்-ஐ டெலிட் செய்ய (Delete Chat) அனுமதிக்கிறது.
 • Alt + Ctrl + Shift + Tab ஷார்ட்கட்ஸ் ஆனது முந்தைய சாட்-டிற்கு செல்ல (Previous Chat) உதவுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
15 WhatsApp Tricks in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X