13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

|

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள 13 வயது பள்ளி மாணவர் புதிதாக ஜெட் லைவ் சாட் என்ற ஸ்மார்ட்போன் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள இந்த புதிய செயலிக்கு தற்பொழுது கூகிள் நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவரின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ஆப்ஸ் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.

13 வயது மகன்

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து மற்றும் இவரின் மனைவியான நாகலட்சுமி என்பவரின் 13 வயது மகன் தான் எம்.என்.பிரனேஷ். இவர் திண்டுக்கல் தனியார்ப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

வடமதுரை

இவரின் தான் வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரனேஷ் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பற்றிக் கூடுதலாகப் படித்துவந்திருக்கிறார். அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் ஆப்ஸ் உருவாக்கச் செய்துள்ளது.

ஜெட் லைவ் சாட்

'ஜெட் லைவ் சாட்' (jet live chat) என்ற புதிய மொபைல் பயன்பாட்டு செயலியை உருவாக்கி அதைக் கூகிளில் சேர்க்கவும் பிரனேஷ் விண்ணப்பித்துள்ளார். இரு வார முயற்சியில் இந்த செயலியை உருவாக்கியதாக பிரனேஷ் தெரிவித்திருக்கிறார். பிரனேஷ் உருவாக்கிய செயலியைக் கூகிள் பல கட்ட ஆய்விற்குப் பின் பரிசீலித்து, தற்பொழுது அவரின் செயலிக்கு ஒப்புதலும் வழங்கி, கூகிள் பிளே ஸ்டோரிலும் கூகிள் நிறுவனம் சேர்த்துள்ளது.

சிறப்பே

இந்த செயலியின் சிறப்பே இதில் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். டெலெக்ராம் ஆப்ஸ் போல அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் இதில் பயனர்கள் எளிதில் அனுப்பிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். உதாரணத்திற்கு ஒரு முழு திரைப்படத்தைக் கூட நீங்கள் இந்த பயன்பாட்டின் வலி பகிர்ந்துகொள்ளலாம் என்கிறார் பிரனேஷ்.

விருப்பத்திற்கு

அதேபோல், பேஸ்புக் பதிவுகளில் 'லைக்' பதிவிடுவது போல, இந்த செயலியிலும் தகவல்களின் மீது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல 1000க்கும் மேற்பட்ட இமோஜிகளை பதிவிட இவரின் ஆப்ஸ் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இவரின் ஜெட் லைவ் சாட் செயலிக்குக் கூகிள் நிறுவனம் 2048 ஆண்டு வரை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்பொழுது உள்ள ஆண்ட்ராய்டு சாதனம் மற்றும் 2018-ம் ஆண்டுக்கு பிந்தைய மாடல் வெர்ஷன்களில் இந்த ஆப் செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
13 Year Old School Boy Created Mobile Apps Has Been Added To Google Play Store With 28 Years Of Contract : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X