கூகுள் போட்டோஸ்: நீங்கள் அறியாத பயனுள்ள சூப்பர் சிறப்பம்சங்கள்.! ட்ரை செஞ்சு பாருங்க.!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் போட்டோஸ் செயலி அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

|

கூகுள் நிறுவனத்தின் கூகுள் போட்டோஸ் செயலி அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூகுள் போட்டோஸ் செயலி உங்களின் புகைப்படங்களை பாதுகாப்புடன் பேக்கப் செய்து சேமித்து வைத்துக்கொள்கிறது. இத்துடன் நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் புகைப்படங்களை உடனே ஷேர் செய்யவும் அனுமதிக்கிறது.

கூகுள் போட்டோஸ்: நீங்கள் அறியாத பயனுள்ள சூப்பர் சிறப்பம்சங்கள்.!

உங்களின் புகைப்படங்களை ஒரிஜினல் குவாலிட்டியில் அப்படியே பேக்கப் செய்து சேமிக்க விரும்பினால், அந்தச் சேவைக்கு தனியாய் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச சேவையில் உங்கள் புகைப்படங்களை சேமிக்கும் பொழுது 16 மெகா பிக்சல்ளுக்கு அதிக அளவில் உள்ள புகைப்படங்களை தானாகவே இந்தச் செயலி கம்ப்ரெஸ் செய்து பேக்கப் ஸ்டோரேஜ் இல் சேமித்து வைக்கிறது. இந்த கிளவுட் ஸ்டோரிங் முறைப்படி உங்கள் மொபைல் இல் அதிகப்படியான ஸ்டோரேஜ் இடம் கிடைப்பதுடன் உங்கள் மொபில் இன் செயல்திறனும் வேகமாக இருக்குமென்கிறது கூகுள் நிறுவனம்.

பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!பட்ஜெட் விலையில் பேஸ்அன்லாக், டூயல் கேம் வசதியுடன் மிரட்டும் ஹானர் 9என்.!

அனிமேஷன்

அனிமேஷன்

உங்கள் போட்டோஸ் செயலி மூலம் நீங்கள் அனிமேஷன்களை உருவாக்கலாம். உங்களுக்குக் கூகுள் போட்டோஸ் செயலி ஸ்டாப் மோஷன் அனிமேஷன் மற்றும் ஸ்லைடுஷோ சேவைக்கான அனுமதியை வழங்குகிறது. உங்கள் கேலரியில் உள்ள 2-50 புகைப்படங்களை செலக்ட் செய்து அதை கிப் இமேஜாக மாற்றிக்கொள்ளும் சேவையும் இந்த புதிய அப்டேட் இல் வழங்கப்பட்டிருக்கிறது.

கொலாஜ்

கொலாஜ்

இந்தச் செயலி உங்களுக்கு கொலாஜ் சேவையை வழங்குகிறது, இதன் மூலம் இரண்டு முத்தம் ஐம்பது புகைப்படங்கள் வரை தேர்வு செய்து கொலாஜ் செய்து ஷேர் செய்யும் சேவையை நொடியில் செய்துமுடிகிறது.

குயிக் போட்டோ எடிட்

குயிக் போட்டோ எடிட்

உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தின் கீழ் உள்ள எடிட் சேவையின் மூலம் பலதரப்பட்ட எடிட்டிங் சேவைகளைக் கூகுள் போட்டோஸ் செயலி வழங்குகிறது. இந்த எடிட் சேவையின் உள் கலர் பில்டர்கள், அடிப்படை சீரமைப்புகளுக்கான ஆப்ஷன்கள் மற்றும் கிராப் சேவையுடன் கூடிய பல சேவைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்லைடுஷோ

ஸ்லைடுஷோ

உங்கள் போட்டோஸ் செயலியில் ஸ்லைடுஷோ சேவையை அணுக வலது மேற் மூலையில் உள்ள முந்திரி புள்ளிகளை கிளிக் செய்து ஸ்லைடுஷோ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். உங்களின் புகைப்படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ப்ளெ செய்யப்படும்.

ஸ்கேன் போட்டோஸ்

ஸ்கேன் போட்டோஸ்

உங்களின் பழைய புகைப்படங்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கிறதா? அதை எப்படி டிஜிட்டலுக்கு மாற்றுவது என்ற குளம் இருக்கிறதா? இனி அந்தக் குழப்பம் வேண்டாம் கூகுள் போட்டோஸ் செயலி மூலம் உங்களின் பழைய புகைப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் காபிகளாக கிளவுட் இல் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்தச் சேவையின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஸ்கேன் செய்யும் புகைப்படத்தில் உள்ள காகித ஒளிரை(Glare) நீக்கி புகைப்படங்களை கட்சிதமாக ஸ்கேன் செய்கிறது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

கூகுள் போட்டோஸ் செயலியின் இடது மெனு பட்டனை கிளிக் செய்து பிரீ அப் ஸ்பேஸ் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். உங்கள் மொபைல் இல் உள்ளஅனைத்து புகைப்படங்களும் பேக்கப் செய்யப்பட்டு ஸ்டோரேஜ் இன் அளவை நீடித்துத் தருகிறது.

சர்ச்

சர்ச்

நீங்கள் எடுத்த பல புகைப்படங்களில் நீங்கள் தேடும் புகைப்படத்திற்கான குறியீட்டை சர்ச் சேவையில் கொடுத்து பயனை பெற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் புகைப்படம் பற்றிய அதிக தகவலிற்கு சர்ச் சேவை உதவியாய் இருக்கிறது.

போட்டோஸ் & கூகுள் டிரைவ்

போட்டோஸ் & கூகுள் டிரைவ்

உங்கள் போட்டோஸ் செயலியின் செட்டிங்ஸ் ஓபன் செய்து கூகுள் டிரைவ் செலக்ட் செய்து, டிரைவ் இல் சேமித்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோகளை பார்வையிட்டுக்கொள்ளுங்கள். இதே முறைப்படி புகைப்படம் மற்றும் வீடியோகளை டிரைவ் இல் சேமித்து கொள்ளலாம்.

பேக்கப் போன் போல்டர்ஸ்

பேக்கப் போன் போல்டர்ஸ்

செட்டிங்ஸ் ஓபன் செய்து பேக்கப் மற்றும் சிங்க் கிளிக் செய்து உங்களை மொபைல் இல் உள்ள அனைத்துப் புகைப்படங்களையும் பேக்கப் செய்துகொள்ளுங்கள்.

டவுன்லோட்

டவுன்லோட்

உங்களின் கிறோம், கூகுள் டிரைவ், ஹேங்கவுட், பிளே, மெயில், போட்டோஸ் மற்றும் அனைத்து அக்கௌன்ட்களின் தகவல்களை காப்பகக் கோப்பாக சேமித்து வைக்கவும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் கூகுள் போட்டோஸ் அனுமதி வழங்குகிறது.

ஷேர் போட்டோஸ்

ஷேர் போட்டோஸ்

உங்களுக்கு பிடித்தமான போட்டோவை ஷேர் செய்ய ஷேர் ஆப்ஷனை கிளிக் செய்து பேஸ்புக், டிவிட்டர் அல்லது கூகுள் பிளஸ் போன்ற அனைத்து வலைத்தளங்களின் ஷேர் செய்யும் வசதியைக் கூகுள் போட்டோஸ் உங்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
12 useful Google Photos features you probably didn't know : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X