2018-ல் இந்தியாவில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட செயலிகள்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்ஆப், பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

|

மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்ட ஸ்மார்ட்போன் நாளுக்கு நாள் பிரபலமடைந்து கொண்டே வருவதால், ஸ்மார்ட் போன் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாடகை கார்கள் முன்பதிவு செய்ய, பேங்கிங், பிட்னஸ் டிரேக்கிங், கல்வி சம்பந்தமானவற்றை படிக்க என அவரவர் தேவைக்கேற்ப அனைத்துக்கும் பல்வேறு செயலிகள் இருக்கின்றன. ஆப் ஏன்னி(App Annie) அறிக்கையின் படி, ஆண்ராய்டு மற்றும் ஐ ஓ.எஸ் செயலிகளுக்கு, உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் சந்தையாக இந்தியா இருக்கிறது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், வருமானத்திலும் அதீத வளர்ச்சி இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.மேலும் ஆண்ராய்டு மற்றும் ஐ ஓ.எஸ் டவுன்லோட் எண்ணிக்கையை சேர்த்து பார்க்கும் போது, இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் என்னென்னவென்று தெரிந்தால் ஆச்சர்யமடைவீர்கள். இதோ இந்தியாவில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட டாப்10 செயலிகளின் பட்டியல்.

பேஸ்புக்

பேஸ்புக்

#DeleteFacebook என்ற பிரச்சாரத்தையும் தாண்டி, 2018ன் முதல் காலாண்டில் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி பேஸ்புக். இந்த சமூக வலைதள செயலி தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது மற்றும் 2017லிலும் கூட முதலிடத்தில் இருந்தது.

UC Browser

UC Browser

பல பிரபலமான செயலிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி, 2018 முதல் காலாண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இலவச ப்ரைசரான இதில், டேட்டா சேமிப்பு, துரித தேடல், விளம்பர தடுப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. கடந்த வருடம் இது மூன்றாம் இடத்தில் இருந்தது.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்ஆப், பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்திலிருந்த வாட்ஸ்ஆப் தற்போது மூன்றாம் இடத்திற்கு வந்த காரணம் புரியவில்லை. இருந்தாலும் இன்னமும் உலகம் முழுவதும் மாதம் 1.5பில்லியன் ஆக்டிவ் பயனர்களுடன் இருக்கிறது.

பேஸ்புக் மெசன்ஞர்

பேஸ்புக் மெசன்ஞர்

இந்த செயலி பேஸ்புக்கிலிருந்து தனித்து செயல்படும் ஒரு செயலி ஆகும். கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் நான்காம் இடத்திலேயே உள்ளது. சமீபத்தில் இந்த செயலி பல்வேறு புதிய வசதிகளை பெற்றது. இந்த செயலியின் மூலம் சாட்டிங், ஆடியோ மற்றும் வீடியோ கால், ஸ்டோரி ஸ்டேட்டஸ் போடுதல் போன்றவற்றை செய்யலாம்.

சேர்இட்

சேர்இட்

இந்த சேர்இட் செயலியின் மூலம் பயனர்கள் எளிதாக மற்ற கருவிகளுக்கு கோப்புகளை (பைல்) பகிர்ந்துகொள்ள முடியும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த காலாண்டில் பைல்களை பகிரும் இச்செயலி ஒரு இடம் பின்நோக்கி சென்றுள்ளது.

ஜியோடிவி

ஜியோடிவி

ஜியோடிவியின் பிரபலம் ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடியது இல்லை. கடந்த வருடம் பத்தாவது இடத்தில் இருந்த இது, தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது. மைஜியோ செயலியில் உள்ள பல்வேறு செயலிகளின் தொகுப்பில் ஒன்றான இதன் மூலம் லைவ்வாக டிவி சானல்கள், திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்சுகள் போன்ற பலவற்றை பயனர்கள் பார்க்க முடியும்.

ஏர்டெல் டிவி

ஏர்டெல் டிவி

புதிய செயலியான ஏர்டெல் டிவி, தனது அனைத்து அம்சங்களுக்கு இடையில் குறைந்த அளவே டேட்டா தேவைப்படும் என்பதால், இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் உள்ளது.

ஹாட் ஸ்டார்

ஹாட் ஸ்டார்

லைவ் ஸ்டிரீம்மிங் செயலியான இது முதல்முறையாக இந்த பட்டியலில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த இடம் தெரியாமல் இருந்த இச்செயலி, 2018ன் முதல் காலாண்டில் அதிக பதிவிறக்கம் செயலிகள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ட்ரூகாலர்

ட்ரூகாலர்

பல்வேறு மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளில் இருந்து பல பயனர்களை காப்பாற்றுகிறது ட்ரூகாலர் செயலி. மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், பின்னோக்கி சென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ஹைப்ஸ்டார்

ஹைப்ஸ்டார்

வீடியோ சமூக செயலியான ஹைப்ஸ்டார், அனைத்து வைரல் வீடியோக்களையும் ஒரே இடத்தில் பயனர்கள் காண வழிவகை செய்கிறது. 2017ல் பட்டியலில் இல்லாத இச்செயலி, அதிக பதிவிறக்கங்கலால் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
10 most downloaded apps in India in Q1 2018; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X